சூரிய கிரகணம்.. தப்பி தவறிக்கூட இவற்றை செய்யாதீங்க... எச்சரிக்கும் நாஸா..!!

சூரியன் - சந்திரன் - பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும் போது கிரகணம் ஏற்படுகிறது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது.  கிரகணத்தின் போது சூரியனின் ஒளி பூமியை அடைவதை சந்திரன் தற்காலிகமாகத் தடுக்கிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 7, 2024, 12:53 PM IST
சூரிய கிரகணம்.. தப்பி தவறிக்கூட இவற்றை செய்யாதீங்க... எச்சரிக்கும் நாஸா..!! title=

2024ஆம் ஆண்டு முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 8ம் தேதி நிகழவுள்ளது. சூரிய கிரகண காலம் இரவு 9:12 மணிக்கு தொடங்கி அதிகாலை 1:25 மணிக்கு முடிவடையும் என்கின்றனர் வல்லுநர்கள். இந்த கிரகணம் 4 மணி 39 நிமிடங்கள் நீடிக்கும். கிரகண காலத்தில் உணவு, தண்ணீரை உட்கொள்ளக்கூடாது என்பது நம்பிக்கை. ஜீரண சக்தி பலவீனமடைந்து நோய்வாய்ப்படுவார்கள் என்பது ஐதீகம். பிறகு கிரகணம் முடிந்தவுடன் குளித்துவிட்டு சாப்பிட வேண்டும். கிரகண காலத்தில் அனைத்து உணவு மற்றும் தண்ணீரிலும் துளசி அல்லது தர்ப்பை இலைகளை போட்டு வைக்கும் வழக்கம் உள்ளது. உணவு மற்றும் தன்ணீரில் நச்சுத்தன்மை ஏற்படுவதை தடுக்க இவ்வாறு செய்யப்படுகிறது. 

சூரிய கிரகணம் என்றால் என்ன

சூரியன் - சந்திரன் - பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும் போது கிரகணம் ஏற்படுகிறது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது.  கிரகணத்தின் போது சூரியனின் ஒளி பூமியை அடைவதை சந்திரன் தற்காலிகமாகத் தடுக்கிறது. சூரிய கிரகணம் குறித்து இந்தியாவில் பல நம்பிக்கைகள் உள்ளன. இந்நிலையில், சில முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்படுவதால், ஸ்மார்ட்போனில் ஏற்படும் பாதிப்பை தடுக்கலாம். 

நாசா வெளியிட்டுள்ள எச்சரிக்கை

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா சூரிய கிரகணம் குறித்து ஒரு முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இதை நீங்கள் புறக்கணித்தால், உங்கள் ஸ்மார்ட்போன் சேதமடையக்கூடும். சேதமடைந்த ஸ்மார்ட்போனை பழுது பார்க்கவோ அல்லது புதிய ஸ்மார்ட்போன் வாங்கவோ பல ஆயிரம் ரூபாய் செலவழிக்க வேண்டியிருக்கும் என எச்சரிக்கின்றனர். அதைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.

சூரிய கிரகணத்தின் புகைப்படத்தை போனில் எடுக்கலாமா?

சூரிய கிரகணத்தைப் பொறுத்தவரை, அதன் புகைப்படத்தை ஸ்மார்ட்போனில் இருந்து க்ளிக் செய்ய வேண்டுமா இல்லையா என்ற சந்தேகம் பலரின் மனதில் எழுந்துள்ளது. இந்த கேள்விக்கு நாசா பதிலளித்துள்ளது. இது தொடர்பாக நாசா எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளது. ஏப்ரல் 8ம் தேதி நடக்கும் வானியல் நிகழ்வை கேமராவில் படம் பிடிக்க நினைத்தால், அது உங்கள் கைபேசியை சேதப்படுத்தலாம் என எச்சரித்துள்ளது நாசா நிறுவனம்.

பிரபல யூடியூபர் நாசாவிடம் கேட்டிருந்த கேள்வி

பிரபலமான ஒரு யூட்யூபர் MKBHD தனது X  தளத்தில் ஒரு பதிவின் மூலம் , ஸ்மார்ட்போனில் இருந்து சூரிய கிரகணத்தின் புகைப்படத்தை கிளிக் செய்வது கேமரா சென்சாரை சேதப்படுத்துமா இல்லையா என்பதற்கு என்னால் உறுதியான பதிலைப் பெற முடியவில்லை. எனவே தனது சந்தேகத்தை தீர்க்கவும் என கேட்டிருந்தார்.

மேலும் படிக்க | இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்.. பாதிப்பு ஏற்படுத்துமா? ஜோதிடம் சொல்வது என்ன?

நாசா அளித்துள்ள பதில்

இந்த பதிவிற்கு பதிலளித்த நாசா... ஆம், உங்கள் ஸ்மார்ட்போனின் கேமரா சென்சார் சேதமடையக்கூடும் என்று நாசாவின் புகைப்படத் துறை எச்சரித்துள்ளது என தெரிவித்தார். சூரியனை நோக்கி நேரடியாகச் ஸ்மார்போனை வைத்து புகைப்படம் எடுத்தால், சென்சார் சேதமடையலாம் என நாசா எச்சரித்துள்ளது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News