)
Solar Eclipse 2024: இந்த ஆண்டின் அதாவது 2024 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் வருகிற 8 ஏப்ரல் 2024 அன்று நிகழப் போகிறது. இந்த கிரகணமானது இந்திய நேரப்படி ஏப்ரல் 8 ஆம் தேதி சரியாக இரவு 9:12 மணிக்கு தொடங்கி அதிகாலை 2:22 மணி வரை நீடிக்கும். இந்த கிரகணத்தின் மொத்த கால அளவு 5 மணி 10 நிமிடங்கள் ஆக இருக்கும். இந்த கிரகணத்தின் போது அனுசரிக்கப்படும் சூதக் காலம் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில் இந்த சூதக் கால நேரத்தில் சில வழிபாடுகளை நாம் செய்யக்கூடாது. குறிப்பாக இந்த சூதக் காலத்தில் கடவுளுக்கு முன்னால் திரை போடப் பட்டிருக்க வேண்டும். அதுமட்டுமின்றி சூதக் காலத்தில் அனைத்து கோவில்களிலும் வழிபாடு நிறுத்தப்பட்டு, கதவுகளும் மூடப்பட்டு இருக்கும். ஆனால் இந்த கிரகணம் இந்தியாவை பாதிக்காது என்பதால், இந்தியாவில் சூதக் காலமும் பாதிப்பை ஏற்படுத்தாது. அதனால் இந்த சூரிய கிரகண நாளில் மக்கள் மங்களகரமான வேலைகளைச் செய்துக் கொள்ளலாம். எனினும் கர்ப்பிணி பெண்கள் எச்சரிக்கையுடன் தான் இருக்க வேண்டும்.
சூரிய கிரகணம் எப்படி ஏற்படுகிறது?
சூரியன் - பூமிக்கு இடையே ஒரே நேர்கோட்டில் நிலவு வருவதால், சூரியனின் ஒளி மறைக்கப்படும் நிகழ்வு சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது.
சூரிய கிரகணத்தின் போது செய்ய கூடாதவை:
* கிரகண நேரத்தில் சமையல் செய்ய கூடாது. முக்கியமாக சாப்பிடக்கூடாது.
* தண்ணீர் அருந்தக்கூடாது.
* நகம் கிள்ளக் கூடாது.
* கிரகண கதிர்கள் தாக்காமல் இருக்க உணவுப் பொருட்களில் தர்பையை போட்டு வைக்க வேண்டும்.
* கிரகண நேரத்தின் போது, எதுவும் சாப்பிடக் கூடாது. முன்னதாகவே சாப்பிட்டுக் கொள்ளலாம். * கிரகணம் முடியும் போது, தர்ப்பணம் செய்வது மிகவும் புண்ணியங்களையும் மனோபலத்தையும் தரும்.
* கர்ப்பிணி பெண்கள் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
* கிரகணத்தின் போது கர்ப்பிணிப் பெண்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதே நல்லது.
சூரிய கிரகணத்தின் போது என்ன செய்யலாம்:
* கிரகண நேரத்தில், யாகசாலை அமைத்து ஹோமங்கள் செய்வது பலம் தரும்.
* கிரகணத்தின் போது, ஜபம், தியானம் செய்து கொண்டிருக்கலாம்.
* விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம், சிவ புராணம் சொல்லாம்.
* அரிசி, நல்லெண்ணெய் முதலானவற்றை தானம் தருவது மிகுந்த பலனையும் புண்ணியத்தையும் தரும்.
சூரிய கிரகணம் எங்கெல்லாம் பார்க்கலாம்?
இந்த கிரகணம் தென்மேற்கு ஐரோப்பா, கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், வட துருவம், தென் துருவம் ஆகிய பகுதிகளில் தெரியும்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ