Viral Video: பாம்பு கொட்டாவி விட்டு பார்த்திருக்கீங்களா... நெட்டிசன்களை வியக்க வைத்த வீடியோ

சமூக ஊடகத்தில் பகிரப்படும் பாம்பு வீடியோக்களுக்கு என்றுமே ரசிகர்கள் ஏராளம். நம்ப முடியாத பல விஷயங்களை, நாம் காணும் வாய்ப்பு கிடைக்கும் போது, நமக்கு ஆச்சரியமும் வியப்பும் மேலிடுகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 6, 2024, 04:04 PM IST
  • பாம்புகள் பொதுவாக கூச்ச சுபாவம் உள்ளவை.
  • விலங்குகள் தங்களைப் போல் நடந்து கொள்வது ஆச்சரியத்தை அளிக்கிறது.
  • வைரலாகும் பாம்பு வீடியோ.
Viral Video: பாம்பு கொட்டாவி விட்டு பார்த்திருக்கீங்களா... நெட்டிசன்களை வியக்க வைத்த வீடியோ title=

சமூக ஊடகங்கள், மிகச் சிறந்த பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஒன்றாக மாறிவிட்டது. இதில் பகிரப்படும் தகவல்கள் நமக்கு எண்ணற்ற அரிய நிகழ்வுகளை எடுத்துக் கூறுகின்றன. இதில் பகிரப்படும் வீடியோக்கள் மூலம், நாம் பல அரிய காட்சிகளை கண்டு களிக்கலாம். அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் பிரச்சினைகளில் இருந்து விலகி, சிறிது நேரம் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருக்க, சமூக ஊடகங்கள் உதவுகின்றன என்றால் மிகை இல்லை.

சமூக ஊடகத்தில் பகிரப்படும் பாம்பு வீடியோக்களுக்கு என்றுமே ரசிகர்கள் ஏராளம். பாம்பு என்று பெயரை கேட்டாலே ஒருவித அச்சம் மனதில் தோன்றும். அதனால் தானோ என்னவோ, நேரில் பார்க்க முடியாத பாம்பை, வீடியோவில் காணும் போது, அதனை பலர் விரும்பிப் பார்க்கின்றனர். நம்ப முடியாத பல விஷயங்களை, நாம் காணும் வாய்ப்பு கிடைக்கும் போது, நமக்கு ஆச்சரியமும் வியப்பும் மேலிடுகிறது.

பொதுவாக மனிதர்களுக்கு, விலங்குகள் தங்களைப் போல் நடந்து கொள்வது ஆச்சரியத்தை அளிக்கிறது. அந்த வகையில் பாம்பு ஒன்று கொட்டாவி விடும் வீடியோ (Viral Video) மிகவும் வைரலாகி வருகிறது. மனிதர்கள் ஆகிய நாம் கொட்டாவி விடுவது இயல்பான விஷயம்தான். ஆனால், பாம்பு கொட்டாவி விடுவதை நாம் பார்ப்பது மிக அரிது. நம்மில் பலருக்கு பாம்பு கொட்டாவி விடும் என்பதே தெரியாமல் இருக்கலாம். ஆனால் விலங்குகளுக்கும், மனிதர்களைப் போன்ற உணர்வுகள், செயல்பாடுகள் இருப்பது இயற்கையான விஷயம் தான்.

மேலும் படிக்க | மூன்று பாம்புகளை விழுங்கி கக்கும் ராஜநாகம் நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ

பாம்பு கொட்டாவி விடும் வைரல் வீடியோவை கீழே காணலாம்

பாம்புகள் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்

பாம்புகள் பொதுவாக கூச்ச சுபாவம் உள்ளவை. அது யாரையும் தேவையில்லாமல் கடிப்பதில்லை. தன்னை தாக்க வருபவர்களிடம் இருந்து தப்பிக்க, அல்லது தன்னை தற்காத்துக் கொள்ள மட்டுமே அவை கடிக்கின்றன. மொத்தம் உள்ள சுமார் 3000 வகையான பாம்புகளில், 600 மட்டுமே விஷத்தன்மை கொண்டவை.. அதிலும் சுமார் 200 வகை பாம்புகள் மட்டுமே, கலை கொள்ளும் திறன் கொண்டவை. பாம்பிற்கு கூர்மையான கண் பார்வை இல்லை என்பதால், அவை ஒரு வித அச்சத்தில் இருக்கின்றன. பாம்புகள் நாக்கினால் வாசனைகளை கண்டறிந்து, எந்த திசையில் இருந்து அந்த வாசனை வருகிறது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

மேலும் படிக்க | Viral Video : “காலுக்கு மசாஸ் பண்ணு...” பாகனிடம் செல்லமாக சேட்டை செய்த யானை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News