கவிதை எழுதினால் கூட சிறைவாசம்... சீனாவின் உய்குர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் பல!

சீனாவில் உய்குர்களுக்கு எதிரான அட்டூழியங்கள் நடப்பது புதிதல்ல. உய்குர்களுக்கு எதிராக சீனா தொடர்ந்து அடக்குகுறைகளை பிரயோகம் செய்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக, உய்குர்களுக்கு எதிரான அட்டூழியங்கள் குறித்து, உலக அளவில் தொடர்ந்து விவாதிக்கப்படுகின்றன. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 29, 2024, 02:00 PM IST
  • சீனாவில் உய்குர் இனத்தவருக்கு எதிராக அட்டூழியங்கள் நடப்பதாக செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
  • பல உய்குர் இன மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
  • சீனா உய்குர்களை முகாம்களில் வைத்து ரத்த மாதிரிகளை எடுக்கிறது.
கவிதை எழுதினால் கூட சிறைவாசம்... சீனாவின் உய்குர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் பல! title=

சீனாவில் என்ன நடக்கிறது என்பது குறித்த தகவல்கள்  வெளிவருவது மிகக் குறைவு. அங்கு அரசாங்கம் அனுமதியின்றி எதையும் வெளியிடாத வகையில், ஊடகங்களை அரசு கட்டுப்படுத்துகிறது. அங்கு வசிக்கும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களின் நடமாட்டமும் கண்காணிக்கப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், சீனாவில் உய்குர் முஸ்லிம்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதை அறிவது அவ்வளவு சுலபமல்ல.

உய்குர் முஸ்லிம்கள் விஷயத்தில், தொடர்ந்து மனித உரிமை மீறல்கள் நடப்பதாக, கடந்த சில ஆண்டுகளாக பல சர்வதேச மன்றங்களில் விவாதிக்கப்பட்டு வருகின்றன. ஹான் சமூகம் ஆதிக்கம் செலுத்தும் சீனாவில் (China), உய்குர்களை முகாம்களில் அதிக அளவில் தங்கவைத்து, அங்கு அவர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது. சீன அரசின் இந்த அடக்குமுறையால் பல முஸ்லிம் உய்குர்களின் குடும்பங்கள் உடைந்துள்ளன. மேலும், இந்த முகாம்களில் தங்க வைக்கப்படாதவர்கள் கூட, அங்கு தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

சீனாவில் இருந்து வேறு நாட்டிற்கு, எப்படியோ தப்பிச் சென்ற உய்குர் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் தங்கள் சமூகத்திற்கு நடந்த அட்டூழியங்களைப் பற்றி கூறுகிறார்கள். இதற்காக சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆயினும்கூட, சீனாவில் உய்குர்களின் உண்மையான நிலை மற்றும் அங்குள்ள அரசாங்கம் அவர்களை எவ்வாறு நடத்துகிறது என்பதை உலகம் இன்னும் முழுமையாக அறிய முடியவில்லை. தாஹி ஜமுத் இஸ்கில் என்னும் கவிஞர் எழுதிய Waiting to Be Arrested at Night: An Uyghur Poet's Memoir of China's Genocide என்ற புத்தகம் உய்குர் முஸ்லிம்கள் சந்தித்து வரும் கொடுமைகளை கூறுகிறது

தாஹிர் தனது குடும்பத்துடன் சீனாவில் இருந்து தப்பி அமெரிக்காவில் தஞ்சம் அடைந்த அதிர்ஷ்டசாலி உய்குர்களில் ஒருவர். சீனாவில் உள்ள தனது நண்பர்களாக இருந்த கடைக்காரர்கள், புத்தக விற்பனையாளர்கள் மற்றும் உய்குர் கவிதைகளை விரும்பும் நபர்கள் பற்றி தாஹிர் தனது புத்தகத்தில் எழுதுகிறார். பெரும்பாலும் இவர்கள் கூடும் போது, டீக்கடையிலோ அல்லது சாப்பாட்டு அறையிலோ தங்கள் கவிதைகளை பரஸ்பரம் பரிமாறிக் கொள்வார்கள் என அவர் கூறுகிறார். 2016 ஆம் ஆண்டு இதுபோன்ற ஒரு கூட்டத்தில் கவிதைகள் வாசிக்கப்பட்டபோது, ​​போலீசார் அங்கு வந்து மிரட்டியதாக தாஹிர் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.

மேலும் படிக்க | இந்தியா - ஈரான் இடையே வரலாற்று சிறப்பு மிக்க சபஹர் துறைமுக ஒப்பந்தம்... மிக விரைவில்!

போலீசார் வந்ததும், உய்குர் கவிஞர்கள் பைஜியு என்ற சீன மதுபானத்தை ஆர்டர் செய்து அவர்களுக்கு வழங்கினர். இந்த மது பானத்தை ஆர்டர் செய்ததன் நோக்கம், தாங்கள் நல்ல குடிமக்கள், முஸ்லிம் பிரிவினைவாதிகள் அல்ல என்பதை உணர்த்தவே. எனினும், அந்தக் கவிஞர்களின் அடையாள அட்டைகளை போலீஸார் எடுத்துச் சென்றனர். அடுத்து நடந்த சம்பவம் தாஹிரை உலுக்கியது. இந்த சம்பவத்திற்கு சில நாட்களுக்குப் பிறகு, அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பல உய்குர் கவிஞர்கள் ஒவ்வொருவராக உய்குர் முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர் என்று தனது புத்தகத்தில் எழுதுயுள்ளார். உய்குர்களின் கலாச்சார அடையாளத்தை அழிக்கும் வகையில் சிறைச்சாலை முகாம்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில், முகாமுக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு தப்பித்தவர்கள் மட்டுமே உயிர் பிழைத்ததாக தாஹிர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தாஹிரின் இந்த புத்தக்கத்தில் 2014 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில், சீனாவின் கம்யூனிஸ்ட் அரசாங்கம் சின்ஜியாங்கில் அடக்குமுறையைத் தொடங்கியது, சீன அரசாங்கம் ஏற்கனவே உய்குர்களை மோசமாக நடத்தியது, அவரது இளமை பருவத்தில், ​​மூன்று வருடங்கள் சிறையிலும் தொழிலாளர் முகாமிலும் கழித்தது ஆகியவை பற்றி குறிப்பிட்டுள்ளார்.

சிறையிலிருந்து வெளி வந்த தாஹிர் திரைப்பட தயாரிப்பை தனது தொழிலாக எடுத்துக் கொண்டார். இதனுடன் தொடர்ந்து கவிதைகளும் எழுதி வந்தார். ஆனால் இதற்குப் பிறகு உய்குர் புத்தகங்கள் சீன அரசால் தடை செய்யப்பட்டன. இந்த நேரத்தில், தாஹிரும் அவரது மனைவியும் ஒரு முறை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு, முகங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு குரல் மாதிரிகள் எடுக்கப்பட்டன.

தடுப்பு முகாம்களில் உள்ள அவரது நண்பர்கள் ஒருவர் பின் ஒருவராக காணாமல் போய்க் கொண்டிருந்தனர். தாஹிர் எப்போதாவது தனது நண்பர்களைப் போல தன்னையும் காவல்துறை அழைத்துச் சென்றுவிடுவானோ என்ற பயத்துடன் தினமும் இரவு தூங்குவேன் எனக் கூறியுள்ளார். இந்நிலையில், சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டார். 2017 இல் அவர் தனது குடும்பத்துடன் அவரால் அமெரிக்கா செல்ல முடிந்தது. ஆனால் சின்ஜியாங்கில் இருக்கும் அவரது நண்பர்களுக்கு அரசாங்கம் என்ன கொடுமைகளை இழைத்து வரும் நிலையில் அவர்களில் யாராவது உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்ற வருத்தம் அவரது மனதில் நிலையாக குடிகொண்டது.

மேலும் படிக்க | ஆஹா... மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் வென்ற 60 வயது பெண் - யார் இந்த அழகி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News