காபூல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் அட்டுழியம் மற்றும் அழிவு தொடர்கிறது. ஆதாரங்களின்படி, தலிபான்கள் காபூல் விமான நிலையத்தில் இருந்து 150 பேரை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளனர். உள்ளூர் ஊடகங்களின் தகவல்படி, இப்போது அந்த 150 பேரை தாலிபான்கள் விடுவித்துள்ளனர். இவர்கள் அனைவரும் விமான காபூல் நிலையத்திற்கு அழைத்து வரப்படுகின்றனர். 150 பேரில் ஆப்கான் குடிமக்கள், சீக்கியர்கள் என பெரும்பாலானோர் இந்திய மக்கள் ஆவார்கள்.
அனைத்து இந்தியரும் பாதுகாப்பாக உள்ளனர்:
ஆப்கான் பத்திரிக்கையாளரின் கருத்துப்படி, அனைத்து இந்தியர்களும் பாதுகாப்பாக உள்ளனர். தாலிபான்களால் அழைத்துச் செல்லப்பட்டவர்களின் பாஸ்போர்ட் சரிபார்க்கப்பட்டது. இப்போது இந்த 150 பேர் காபூல் விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று தாலிபான்கள் கூறியதாக பத்திரிக்கையாளர் தெரிவித்தார். இந்த மக்கள் காபூல் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு கேரேஜில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்திய அரசாங்க வட்டாரங்களின்படி, அனைத்து இந்திய மக்களும் பாதுகாப்பாக உள்ளனர் மற்றும் இந்திய அதிகாரிகள் அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர் எனத் தகவல்.
இவர்களில் ஒருவர், தனது மனைவியுடன் தாலிபான்களின் பிடியிலிருந்து தப்பித்து, ஒரு வாகனத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஒரு மணிக்கு விமான நிலையத்தை அடைந்ததாகக் கூறினார்கள். ஆனால் சரியான ஒருங்கிணைப்பு இல்லாதா காரணத்தால், அவர்களால் விமான நிலையத்திற்குள் நுழைவு முடியவில்லை.
ALSO READ | ஆப்கானில் பல முன்னாள் அரசு அதிகாரிகளை காணவில்லை: பதட்டத்தில் குடும்பங்கள்
தப்பித்துச் சென்ற அவர்கள் அளித்த ஆதாரங்களின்படி, ஆயுதங்கள் இல்லாமல் சில தாலிபான்கள் வந்து மக்களை அடித்து, பின்னர் காபூலின் தர்கிலுக்கு அழைத்துச் சென்றனர். அப்பொழுது காரில் இருந்து குதித்து அவரும் அவரது மனைவியும் தப்பிக்க முடிந்தது என்று அந்த நபர் கூறினார். சிலரால் மட்டுமே காரில் இருந்து குதிக்க முடிந்தது, மற்றவர்களுக்கு என்ன நடக்கும் என்று பயமா இருந்தது என்று அவர் கூறினார்.
150 பேர் கடத்தப்பட்டதாக வெளியான தகவலை மறுத்த தாலிபான்கள்:
தாலிபான்கள் அவர்களை விமான நிலையத்திலிருந்து மற்றொரு வாயில் வழியாக வெளியேறச் சொன்னதாக அவர் கூறினார். ஆனால் அவர் அவர்களை விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றாரா அல்லது வேறு எங்காவது அழைத்துச் சென்றாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. எனினும், இந்த அறிக்கையை தாலிபான்கள் மறுத்துள்ளனர். தலிபான் செய்தித் தொடர்பாளர் அகமதுல்லா வசெக் 150 பேர் கடத்தப்பட்டதாக வெளியான தகவலை மறுத்துள்ளார்.
முல்லா பர்தார் காபூலை அடைந்தார்:
அமைப்பது குறித்து விவாதிக்க தாலிபானின் இணை நிறுவனர் காபூலை அடைந்தார். முல்லா அப்துல் கனி பர்தார் காபூலில் உள்ள ஜிஹாதி தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகளை சந்திப்பார். சமீபத்தில் தாலிபான் தலைவர்கள் ஹமீத் கர்சாய், அப்துல்லா அப்துல்லா ஆகியோரை சந்தித்து பேசினார்.
ALSO READ | தொடங்கியது தாலிபான் கொடூரம்: அச்சத்தின் உச்சியில் ஆப்கான் மக்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR