காபூல்: ஆப்கானிஸ்தானில் (Afghanistan) தலிபான் (Taliban) தங்களது புதிய அரசை அமைத்துள்ளது. இதனுடன், தலிபானின் உயர் தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்ஸடாவின் அறிக்கை முன்னுக்கு வந்துள்ளது. இந்த அறிக்கையில், வரும் காலத்தில் ஆப்கானிஸ்தான் புதிய ஆட்சி எப்படி இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், புதிய அரசாங்கம் விரைவில் செயல்படத் தொடங்கும் என்றும் ஷரியத் சட்டம் பராமரிக்கப்படும் என்றும் அகுந்த்ஸடா தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகளைப் பாதுகாக்க நம்பிக்கை
இஸ்லாமிய சட்டத்திற்கு எதிரானதல்லாத அனைத்து சர்வதேச சட்டங்கள், ஒப்பந்தங்கள் மற்றும் தீர்மானங்களுக்கு தலிபான்கள் உறுதிபூண்டுள்ளனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தலிபான்கள் (Taliban) ஷரியாவின் கட்டமைப்பிற்குள் உள்ள அனைத்து நாட்டு மக்களுக்கும் மத மற்றும் நவீன அறிவியலுக்கு ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான சூழலை வழங்கும். அதே நேரத்தில், தலிபான்கள் இஸ்லாமிய எல்லைக்குள் மனித உரிமைகள், சிறுபான்மையினரின் உரிமைகள் உள்ளிட்ட பின்தங்கிய மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க தீவிரமான மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
ALSO READ | தாலிபான்களின் தலைவர் முல்லா அப்துல் கனி காயம்!
Foreign Diplomats பயப்பட தேவையில்லை
தலிபான் ஆதிக்கத்தின் கீழ் வேறு எந்த நாட்டின் பாதுகாப்பிற்கும் எதிராக ஆப்கானிஸ்தான் (Afghanistan) மண் பயன்படுத்தப்படாது என்று தலிபானின் தலைவர் தெளிவுபடுத்தியுள்ளார். முல்லா முகமது ஹசன் அகுந்த்ஸடா தனது அறிக்கையில், அனைத்து Foreign Diplomats, தூதரகங்கள், மனிதாபிமான அமைப்புகள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பான சூழல் வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
ஆப்கானை விட்டு வெளியேற வேண்டாம்
மருத்துவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் போன்ற திறமையான மற்றும் தொழில்முறை நபர்களுக்கு அரசாங்கம் முக்கியத்துவம் அளிக்கும் என்று தலிபான் கூறியுள்ளது, அவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு தேவை. தலிபான்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தலிபான் ஆட்சியில் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர், எனவே ஆப்கானிஸ்தானை விட்டு யாரும் வெளியேற தேவையில்லை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
துப்பாக்கிகளை காட்டி ஆட்சி அமைத்த தலிபான்கள் இனி அமைதியான, வளமான மற்றும் தன்னம்பிக்கை ஆப்கானிஸ்தானை விரும்புவதாக தனது அறிக்கையில் கூறியுள்ளது. நாட்டு மக்கள் முழுமையான பாதுகாப்புடனும் வசதியுடனும் வாழ முடியும். புதிய அரசு அண்டை நாடுகளுடன் சிறந்த உறவை விரும்புகிறது என்றும் அதற்காக நாங்கள் உண்மையாக முயற்சிப்போம் என்றும் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
ALSO READ | பஞ்ச்ஷீரில் தாலிபானுக்கு உதவும் பாகிஸ்தான், தொடரும் பதட்டம்!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR