காபூல்: புதன்கிழமை (செப்டம்பர் 8) அன்று புதிதாக அறிவிக்கப்பட்ட இடைக்கால அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய ஆப்கான் பெண்களை தாலிபான்கள் சவுக்கால் அடிப்பதை காட்டும் பல படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
தாலிபான் (Taliban) ஆட்சிக்கு எதிராக போராடி தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க பெண்கள் காபூல் தெருக்களில் இறங்கியபோது அவர்கள் தாக்கப்பட்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
“அவர்கள் எங்களை சவுக்கால் அடித்தார்கள். எங்களை வீடுகளுக்குச் சென்று எமிரேட்டை அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளச் சொல்கிறார்கள்” என்று புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஒரு பெண் கூறியதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. "எங்களை எதிலும் சேர்க்காத போது, எந்த வித உரிமையும் அளிக்கப்படாத போது, நாங்கள் ஏன் இந்த அமீரகத்தை ஏற்க வேண்டும்?" என்று அவர் மேலும் கூறினார்.
TOLOnews நிருபர் ஜஹ்ரா ரஹிமி ட்விட்டரில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் தாலிபானியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களை கடுமையாக தாக்கியதை காணமுடிகின்றது.
ALSO READ: நார்வே தூதரகத்தில் தாலிபான்கள் அட்டகாசம்; பறக்கும் ஒயின் பாட்டில்கள், புத்தகங்கள்..!!
அந்த வீடியோவை இங்கே காணலாம்:
Taliban fighters are beating girls who protested to demand their rights.#Kabul
— Zahra Rahimi (@ZahraSRahimi) September 8, 2021
போராட்டங்களை படம்பிடிக்க முயன்ற சில பத்திரிகையாளர்களையும் தாலிபான்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த வார தொடக்கத்தில், ஆப்கானிஸ்தானில் (Afghanistan) இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்தும், ஆண் உறுப்பினர்கள் மட்டுமே அடங்கிய அமைச்சரவை அமைச்சர்களின் பெயர்களை தாலிபான் அறிவித்தது.
பெண்களின் உரிமைகளை தாலிபான்கள் பறிப்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. உதாரணமாக, பெண்களின் உடலை வெளிப்படுத்தும் வகையில் உடை அணிவதால், பெண்களுக்கான விளையாட்டு நடவடிக்கைகளை தாலிபான் தடை செய்துள்ளது.
ALSO READ: ஆப்கானில் பரிதாபம்: இரத்தவெறி கொண்ட பயங்கரவாதி ஆப்கானின் புதிய உள்துறை அமைச்சர்!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR