காபூல்: ஆப்கானிஸ்தானில் (Afghanisan) தாலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய நிலையில், அதன் புதிய அரசின் முக்கிய நிர்வாகிகளைம் அறிவித்துள்ளது. இந்நிலையில், தாலிபான் பயங்கரவாதிகள் காபூலில் உள்ள நார்வே தூதரகத்தை கைப்பற்றியுள்ளது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ள. ஆயுதமேந்திய தலிபான்கள் தூதரகத்திற்குள் நுழைந்து எல்லாவற்றையும் தூதரகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அரசாங்கம் அமைக்கப்பட்டதாக அறிவித்த பிறகு, வெளிநாட்டு ராஜூய அதிகாரிகள் மற்றும் தூதரக பணியாளர்கள் பயப்ப்படத் தேவையில்லை என தாலிபான் உச்ச தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்ஸடா, உறுதி அளித்து, ஆப்கானிஸ்தானில் அவர்களுக்கு பாதுகாப்பான சூழல் வழங்கப்படும் என கூறியது குறிப்பிடத்தக்கது.
தாலிபானின் நார்வே தூதரக அத்துமீறல் குறித்து, ஈரானுக்கான நோர்வே தூதர் சிக்வால்ட் ஹாக் ட்வீட் மூலம் தகவல் அளித்துள்ளார். தலிபான் (Taliban) பயங்கரவாதிகளின் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். அவரது தனது ட்வீட் பதிவில், 'தலிபான்கள் இப்போது காபூலில் உள்ள நோர்வே தூதரகத்தை கைப்பற்றியுள்ளனர். தூதரகத்தில் உள்ள மது பாட்டில்கள் மற்றும் குழந்தைகள் புத்தகங்கள் முழுவதுமாக அழிக்கப்பட்ட பின், தூதரகம் திருப்பித் தரப்படும் என தாலிபான்கள் கூறியதாக அவர் பதிவிட்டுள்ளார்.
Taliban has now taken over the Norwegian Embassy in Kabul. Say they will return it to us later. But first wine bottles are to be smashed and childrens’ books destroyed. Guns apparently less dangerous. Foto: Aftenposten, Norway pic.twitter.com/0zWmJXmQeX
— Ambassador Sigvald Hauge (@NorwayAmbIran) September 8, 2021
தலிபான்கள் ஆரம்பத்தில் இருந்தே குழந்தைகளின் கல்விக்கு எதிராக இருந்து வருகின்றர். குறிப்பாகப் பள்ளிக்குச் செல்லும் பெண்களை, அவர்கள் இஸ்லாத்துக்கு எதிராகப் பார்க்கிறார். தலிபான் ஆட்சியின் கல்வி அமைச்சர் தனது ‘புத்திசாலித்தனத்தை’ நிரூபித்துள்ளார். ஷேக் மொல்வி நூருல்லா முனீரின் பார்வையில், பிஎச்டி அல்லது முதுகலை பட்டத்திற்கு மதிப்பு ஏதும் இல்லை. அதிகாரத்திற்கு கல்வி முக்கியமில்லை என்று அவர் சமீபத்தில் கூறினார். தாலிபான்கள் கல்வியினால் அல்ல, பலத்தால் அதிகாரத்தை பெற்றுள்ளனர் என்பது அவரது கருத்து.
தலிபான்களின் அச்சம் காரணமாக பல நாடுகள் தங்கள் தூதரகங்களை காலி செய்துள்ளன. தாலிபான் காபூலை அடைந்தவுடன் பல வெளிநாட்டு தூதரகங்கள் தங்கள் இடத்தை காலி செய்யத் தொடங்கின. இதற்கிடையில், அமெரிக்கத் தூதரகத்தின் ஊழியர்கள் பல முக்கிய ஆவணங்களை அங்கே விட்டுச் சென்றதாகவும் செய்திகள் வந்தன. தாலிபான்கள் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் வீரர்களுக்கு உதவி செய்பவர்களை தங்கள் எதிரிகளாக கருதுகின்றனர். எனவே அவர்கள் தூதரகங்களுக்கு சென்று அப்படி யாரேனும் இருக்கிறார்களா, என தேடி அவர்களின் தகவல்களை சேகரிக்கிறார்கள் என கூறப்படுகிறது.
ALSO READ | ஆப்கானை ஆள இருக்கும் முல்லா அப்துல் கானி பராதர்; யார் அந்த ‘பராதர்’..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR