7th Pay Commission, DA Arrear News: நீங்கள் ஒரு மத்திய அரசு ஊழியரா? உங்கள் வீட்டில் யாரேனும் மத்திய அரசு ஊழியர்கள் உள்ளார்களா? அப்படியென்றால், உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி உள்ளது. 18 மாத டிஏ நிலுவைத் தொகை குறித்து அரசாங்கம் இப்போது தீவிரம் காட்டி வருகிறது. இது மட்டுமின்றி, இந்த மாதம் டிஏ நிலுவைத் தொகை வெளியாகும் என்ற செய்தியும் வந்துள்ளது. இதை பற்றிய சமீபத்திய தகவல்களை இங்கே காணலாம்.
Dearness Allowance Arrears: அகவிலைப்படி அரியர் தொகை
18 மாத அகவிலைப்படி அரியர் தொகை பற்றிய பேச்சு இப்போது மீண்டும் வலுப்பெற்றுள்ளது. இது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு (Pensioners) மிகப்பெரிய நிவாரணமாக வந்துள்ளது. இது நடந்தால், ஊழியர்களுக்கு 18 மாத டிஏ அரியர் தொகை கிடைக்கும். இது ஊழியர்களுக்கு மிகப்பெரிய பரிசாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதன் பிறகு, அன்னைத்து மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் கணக்கிலும் ஒரு பெரிய தொகை டெபாசிட் செய்யப்படும்.
Central Government Employees: அகவிலைப்படி முடக்கப்பட்டது
கொரோனா பெருந்தொற்றால் உலகமே பாதிக்கப்பட்டது நம் அனைவருக்கும் நினைவில் உள்ளது. அப்போது உருவான அசாதாரண சூழ்நிலையால், அனைத்து நாடுகளும் பொருளாதார நெருக்கடியில் இருந்தன. இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. அதை சமாளிக்க, மத்திய அரசு, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை முடக்கியது. அந்த தொகை, அதிக தேவையில் இருந்த நலிந்த பிரிவு மக்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கான பயன்படுத்தப்பட்டது.
18 Month Arrear Amount: 18 மாத அரியர் தொகை
நிலைமை சற்று சரியானவுடன் அகவிலைப்படி முடக்கம் நீக்கப்பட்டு மீண்டும் ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகின்றது. கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட 18 மாத அரியர் தொகையை தற்போது வெளியிட அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலுவைத்தொகை நவம்பர் 20-ம் தேதிக்குள் ஊழியர்களின் கணக்கில் செலுத்தப்படும் என்றும் சில தரப்பிலிருந்து செய்திகள் வருகின்றன. எனினும், இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் எதுவும் வரவில்லை.
கோவிட் தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அரசாங்கத்தின் நிதி அழுத்தத்தைக் குறைக்க ஜனவரி 2020, ஜூலை 2020 மற்றும் ஜனவரி 2021 ஆகிய மூன்று தவணைகளுக்கான அகவிலைப்படியை முடக்க முடிவு செய்யப்பட்டது. தற்போது இந்த நிலுவைத் தொகையை விடுவிக்க அரசிடம் எந்த திட்டமும் இல்லை என்றும், அடுத்தடித்த டிஏ உயர்வை (DA Hike) ஊழியர்கள் எதிர்பார்க்கலாம் என்றும் அரசு தரப்பில் சில நாட்களுக்கு முன்னர் தெரிவிக்கப்ப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த கூட்டத்தில், நிலுவைத் தொகை குறித்து இதுவரை எந்த விவாதமும் நடக்கவில்லை என அரசு தெளிவாக கூறியிருந்தது.
மேலும் படிக்க | Mutual Fund: மாதம் ரூ.5000 போதும்... கோடீஸ்வர கனவை நிறைவேற்றும் SIP முதலீடு
DA Arrears: நவம்பர் 20ம் தேதி டிஏ அரியர் முதல் தவணை வருமா?
கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட முதல் தவணை டிஏ நவம்பர் 20 ஆம் தேதி வெளியிடப்படும் என்று துறை சார்ந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. தீபாவளிக்கு முன்பிலிருந்தே இது போன்ற செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. தற்போது இது தீவிரமடைந்துள்ளது. இதைக் கேட்ட ஊழியர்களால் மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
ஒரு கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் பயனடைவார்கள்
அகவிலைப்படி அரியர் தொகையை அரசாங்கம் அளித்தால், நாட்டின் கோடிக்கணக்கான ஊழியர்கள் இதன் மூலம் பயனடைவார்கள். இந்த நிலுவைத் தொகை ஊழியர்களை நிதி ரீதியாக பலப்படுத்தும். இந்தத் தொகை நேரடியாக ஊழியர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று கூறப்படுகின்றது. டிஏ அரியர் தொகை குறித்த விவாதம் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், இந்த மாதம் 18 மாதங்களுக்கான டிஏ நிலுவைத் தொகையை வழங்க அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக ஆதாரங்கள் கூறுகின்றன. குறைந்தபட்சம் இந்த தொகையில் ஒரு தவணையையாவது அரசு அளிக்கலாம் என நம்பப்படுகின்றது.
பல்வேறு ஊழியர் அமைப்புகளால் இந்த பிரச்னை பலமுறை எழுப்பப்பட்டதாகவும் அரசு கூறியுள்ளது. இதனையடுத்து, தற்போது அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு விரைவில் முடிவு எடுக்கப்படும்.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி அரியர் தொகைக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ