சிரியா, ஈரான் உள்ளிட்ட 5 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய அமெரிக்க அதிபர் டிரம்ப் தடை விதித்த உத்தரவுக்கு ஆதரவாக அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது!
முஸ்லீம்கள் பெரும்பான்மையினராக உள்ள பல நாடுகள் மீது டிரம்ப் நிர்வாகம் விதித்த பயணத்தடைக்கு ஆதரவாக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இந்த பயணத்தடையானது, இரான், லிபியா, சோமாலியா, சிரியா மற்றும் யேமனை சேர்ந்த பெரும்பாலானோர் அமெரிக்காவிற்குள் நுழைவதை தடுத்தது. இதையடுத்து, வடகொரியா, வெனிசுலா மற்றும் ஆப்ரிக்காவில் உள்ள சாத் ஆகிய நாடுகள் இப்பட்டியலில் பின்னர் இணைக்கப்பட்டன.
இதற்கு எதிராக உயர்நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டு, அதிபரின் உத்தரவுக்கு இடைக்கால தடையும் பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த அமெரிக்க உச்சநீதிமன்றம், அதிபர் டிரம்ப் அறிவித்த பயணத்தடை சரியே என தீர்ப்பு வழங்கியுள்ளது. தலைமை நீதிபதி கொண்ட 5 நீதிபதிகள் அமர்வில், நான்கு நீதிபதிகள் டிரம்ப் அறிவிப்புக்கு சாதகமாக தீர்ப்பு அளித்துள்ளனர்.