விறுவிறுப்பாக நடைபெறும் இலங்கை உள்ளாட்சி தேர்தல்!

இலங்கையில் இன்று துவங்கியது உள்ளாட்சி தேர்தல்; வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெறுகிறது. 

Last Updated : Feb 10, 2018, 01:59 PM IST
விறுவிறுப்பாக நடைபெறும் இலங்கை உள்ளாட்சி தேர்தல்!  title=

இலங்கையில் இன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் இலங்கையில், இன்று நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 340 கவுன்சிலுக்கான உறுப்பினர்களை 1.5 கோடி வாக்காளர்கள் தேர்வு செய்கின்றனர். 

சிறிசேனா தலைமையிலான இலங்கை சுதந்திரக் கட்சியும் (எஸ்.எல்.எஃப்.பி), ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் (யுஎன்பி) ஒன்றையொன்று எதிர்த்து, இத்தேர்தலில் போட்டியிடுகின்றன. இவ்விரு கட்சிகளுக்கிடையே நிலவும் பிளவு, பாதுகாப்பற்ற உணர்வு, கசப்பு ஆகியவை அனல் பறக்கும் பிரச்சாரங்களில் வெளிப்படுகின்றன. 

எனவே, தேர்தல் முடிவு தேசிய கூட்டணி அரசில் தாக்கத்தை வெளிப்படுத்தும் என தெரிகிறது. மொத்தம் 24 நகராட்சி கவுன்சில், 41 ஊரக கவுன்சில்,  275 பிரதேசிய சபாஸ் ஆகிய உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மொத்தம் 8375 கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அந்நாட்டு தேர்தல் ஆணைய அதிகாரி தெரிவித்தார்.

உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு இலங்கை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 65 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், முப்படையை சேர்ந்த 900 வீரர்களும்  பாதுகாப்பு உதவிப்பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வாக்குபதிவு காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இலங்கை அதிபர் சிறிசேனாவின் கட்சிக்கு முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் கட்சி கடும் சவால் அளிக்கும் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

Trending News