புதுடெல்லி: ஆப்கானிஸ்தானில் அதிக நகரங்களை தாலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றியுள்ள நிலையில், யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கான் நாட்டில், நிலைமை கட்டுப்பாட்டை மீறி வருகிறது என்று ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் அன்டோனியோ குடெரஸ் சனிக்கிழமை தெரிவித்தார்.
தலிபான்களுக்கும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படைகளுக்கும் இடையே நடக்கும் சண்டை 'பெரும் பாதிப்பை' ஏற்படுத்துவதாகக் கூறிய அவர், அனைத்து தரப்பினரும் பொதுமக்கள் இதனால் பெருமளவில் பாதிக்கப்படுவதை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
பொதுமக்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்கள் சர்வதேச மற்றும் மனிதாபிமான சட்டத்தை கடுமையாக மீறுவதாகவும், இது போர்க்குற்றமாகும் என்றும் ஐநா தலைவர் எச்சரித்தார்.
"ஆப்கானிஸ்தானில் நிலமை கட்டுப்பாட்டை மீறி வருகிறது. ஒவ்வொரு நாளும், நடக்கும் வன்முறை சம்பவங்கள் பொதுமக்களுக்கு, குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான தங்கள் கடமையை நான் அனைத்துக் தரப்பினருக்கும் நினைவூட்டுகிறேன், தாக்குதலை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருமாறு தலிபான்களுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன்" என அன்டோனியோ குடெரெஸ் கூறினார்.
"ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் கைப்பற்றப்பட்ட பகுதிகளிலிருந்து வரும் தகவல்கள் கலக்கம் அடைய செய்கின்றன. ஆப்கானிஸ்தான் பெண்கள் மற்றும் பெண்கள் கடுமையாக தாக்கப்பட்டு மனித உரிமை மீறல் அரங்கேறி வருகின்றன. ஆப்கானியர்களின் உரிமைகளையும் உயிர்களையும் காப்பாற்ற, மனிதாபிமான ஆதரவு வழங்குவதில் ஐநா உறுதியாக உள்ளது மனிதாபிமான ஆதரவு, "என்று அவர் மேலும் கூறினார்.
ALSO READ | காபூலை நோக்கி முன்னேறும் தாலிபான்; இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்
தற்போதையை வன்முறையில் குறைந்தது 2,41,000 மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு "குற்றவாளிகள் பொறுப்பேற்க வேண்டும்" என்று ஐ.நா தலைமை செயலர் கூறினார்.
ஆப்கானிஸ்தானின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பெரிய நகரங்களை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் ஐநா பொதுச் செயலர் இவ்வாறு தெரிவித்துள்ளார் தெற்கின் பொருளாதார மையமான கந்தஹார் தாலிபான் கட்டுப்பாட்டில் சென்று விட்டதை ஒரு அரசு அதிகாரி உறுதிப்படுத்தினார்.
ALSO READ | Afghanistan: 90 நாட்களில், தாலிபான் வசமாகும் என எச்சரிக்கும் அமெரிக்க உளவுத் துறை
இதற்கிடையில், அமெரிக்கா மீதான செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு 2001 ஆம் ஆண்டு முதல் அடக்கி வைக்கப்பட்ட தலிபான்கள், தற்போது, முழு வீச்சில் கொலை வெறியாட்டம் நடத்தி வருகின்றனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் விரைவில் தாலிபான் கட்டுப்பாட்டிற்குள் சென்று விடும் என அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறினார்.
ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் ஆப்கானிஸ்தானின் 34 மாகாண தலைநகர்களில் 14 பகுதிகளை தாலிபான் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
ALSO READ | தாலிபான்களுக்கு பயங்கரவாதிகளை சப்ளை செய்கிறார் இம்ரான்கான்: ஆப்கான் அரசு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR