கொடூர கொலையாளியை காதலித்த பெண் சிறை அதிகாரி! சிறையில் பூத்த காதல்!

பிரிட்டனில் ஒரு ஆச்சரியத்தை அளிக்கும் வினோத வழக்கு அம்பலமாகியுள்ளது. ஒரு பெண் சிறை அதிகாரி ஒரு கொடூரமான கொலையாளியைக் காதலித்த சம்பவம் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 18, 2022, 06:49 PM IST
  • பெண் சிறை அதிகாரி ஒரு கொடூரமான கொலையாளியைக் காதலித்த சம்பவம் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
  • சிறையில் பூத்த காதல் கதை.
  • பெண் அதிகாரி, கைதியின் குழந்தையைப் பெற்றெடுத்த நிலையில், இவர்களுக்கு இடையிலான உறவு அம்பலமானது.
கொடூர கொலையாளியை காதலித்த பெண் சிறை அதிகாரி! சிறையில் பூத்த காதல்!

சிறையில் பூத்த காதல் கதை: பிரிட்டனில் ஒரு ஆச்சரியத்தை அளிக்கும் வினோத வழக்கு அம்பலமாகியுள்ளது. ஒரு பெண் சிறை அதிகாரி ஒரு கொடூரமான கொலையாளியைக் காதலித்த சம்பவம் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது பூத்த காதலின் காரணமாக, சிறையில் இருந்த கொலையாளிக்கு உதவி செய்துள்ளார். கொலையாளி வேறு சிறைக்கு மாற்றப்பட்டபோது, ​​​​கொலையாளியை ஒரு போலி பெயருடன், அவள் தொடர்ந்து அவனை சந்தித்தாள். பின்னர், பெண் சிறை அதிகாரி கொலையாளியின் குழந்தையையும் பெற்றெடுத்தார்.

பெண் அதிகாரி, கைதியின் குழந்தையைப் பெற்றெடுத்த நிலையில், இவர்களுக்கு இடையிலான உறவு அம்பலமானது. பின்னர், சிறைச்சாலையின் பெண் அதிகாரி சட்டவிரோதமாக கைதிக்கு உதவியதும் கண்டறியப்பட்டது. இதை அடுத்து நீதிமன்றம் அவருக்கு 20 மாத சிறைத்தண்டனை விதித்தது. ஆனால், தற்போது மற்றொரு நீதிமன்றம் அந்தச் சிறு குழந்தையைப் பராமரிக்க சிறை அதிகாரிக்கு நிவாரணம் வழங்கியுள்ளது.

சிறையில் கொடூரமான கொலைக் குற்றச்சாட்டில் கைதாகி இருக்கும் கைதியை வெறித்தனமாக காதலிக்கும் சிறைச்சாலையின் பெண் அதிகாரியின் பெயர் கேத்ரின். அவருடைய வயது 29. கேத்தரின் ஒரு கைதியின் குழந்தையைப் பெற்றெடுத்த நிலையில், சிறையில், கொலைக் குற்றவாளியை சந்தித்த போது, தனக்கு அவர் மீது உண்மையாகவே காதல் பூத்ததாக சிறையின் பெண் அதிகாரி கூறினார்.

மேலும் படிக்க | Video: கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்து; 6 யாத்ரீகர்கள் மரணம்; மனம் பதற வைக்கும் காட்சி!

 சிறையில் அடைக்கப்பட்ட கைதியிடம் மொபைல் போன் இருந்தது என்பதை அறிந்திருந்த கேத்தரின் அதை சிறை நிர்வாகத்திடம் தெரிவிக்கவில்லை. சிறைச்சாலையின் பெண் அதிகாரியாக பணியாற்றி, தாய் ஆன கைதி தனது பாதுகாவலரைக் கொன்றதற்காக நீதிமன்றத்தால் தண்டனை பெற்றுள்ளார். என்பது . இது தவிர, 54 வயது பெண் ஒருவரை கூரிய ஆயுதத்தால் கொலை செய்திருந்தார்.

சிறைச்சாலையின் பெண் அதிகாரி கேத்தரின், கைதிக்கு தகாத முறையில் உதவி செய்ததாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். அவள் அவனது குடும்பத்துடன் தொடர்பில் இருந்தாள். இது தவறு என்பதை அறிந்த அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய விரும்பினார். ஆனால் தனது காதல் கை விட்டு போய்விடுமோ என்ற பயத்தில் அவர் ராஜினாமா செய்யவில்லை என கூறப்படுகிறது.

மேலும் படிக்க | ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் பயங்கரவாத தாக்குதல்! புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இருவர் பலி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

More Stories

Trending News