அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பரில் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் (Donald Trump ), ஜனநாயக கட்சி சார்பில், ஜோ பிடனும் (Joe Biden)போட்டியிடுகின்றனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் (US Presidential Election), கணிசமான வாக்கு வங்கியாக உள்ள அமெரிக்கா வாழ் இந்தியர்களை கவர இரு வேட்பாளர்களுமே, பிரச்சாரங்களில், இந்தியாவுடன் நெருக்கம் இருப்பதாகவே காட்டிக் கொள்கின்றனர்.
அதற்கு முக்கிய காரணம் டெக்சாஸ், புளோரிடா, பென்சில்வேனியா, ஜார்ஜியா, வடக்கு கரோலினா, வெர்ஜினியா, உள்ளிட்ட பல அமெரிக்க மாகாணங்களில் லட்சக்கணக்கான, இந்திய வமசாவளியினர் வசிக்கின்றனர். அவர்களது வாக்கு கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
ட்ரம்ப் பிரச்சாரத்தை தொடக்கும் போதே, மோடியின் அமெரிக்க பயணம் மற்றும் ட்ரம்ப்பின் இந்திய பயணம் தொடர்பான காட்சிகளை வெளியிட்டார்.
அது தவிர ஒவ்வொரு கணத்திலும் மோடிக்கும் ட்ரம்பிற்கும் இடையில் நல்ல நட்புறவு இருக்கிறது என்பதை அவர் உறுதிபடுத்திக் கொண்டே வருகிறார்.
காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது, சிஏஏ போன்ற, இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில், டிரம்ப் தலையிடவே இல்லை. டிரம்ப் வெற்றி பெற்றால், அது சீனாவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும். இந்திய சீன எல்லையில் பதற்றம் நிலவும் இந்த நேரத்தில், டிரம்பின் வெளிப்படுத்தும் சீன எதிர்ப்பை, இந்தியர்களும்,அமெரிக்கர்களும் மிகவும் வரவேற்கின்றனர் என்பது அமெரிக்க பத்திரிக்கை நடத்திய ஆய்வு ஒன்றில் வெளிப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் முதலில் ட்ரம்ப் அதிபராக பொறுப்பேற்ற போது, இந்தியர்களுக்கு கடுமையான சோதனை ஏற்படும் என்று அனைவரும் அஞ்சினார்கள். டிரம்ப் வெளி நாட்டவர்களுக்கு விசாக்களை தருவதிலும், வேலை தருவதிலும் கண்டிப்பான உத்தரவுகளை அமல்படுத்தினார்.
மேலும் படிக்க | நிரந்திர வெள்ளை மாளிகை வேந்தன் நான்... அமெரிக்க அதிபர் Donald Trump அதிரடி..!!!
இருப்பினும், அமெரிக்காவில் ஏற்கனவே இருக்கும் இந்தியர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில், இந்திய அரசு தொடர்ந்து நல்லுறவை பராமரித்து, நடவடிக்கை எடுத்து வந்தது என்பதும் தவிர்க்க முடியாத உண்மை.
முன்பு வெளியுறவு அமைச்சராக இருந்த சுஷ்மா ஸ்வராஜ், எந்தவித புகாருக்கும் இடமளிக்காமல் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தனிப்பட்ட முறையில் எதிர் கொள்ளும் பிரச்சினையை கூட கண்டறிந்து உதவி செய்யும் மனப்பான்மையை கொண்டிருந்தார். அதேபோல் தற்போதுள்ள வெளியுறவு அமைச்சரான எஸ் ஜெய்சங்கரும், இந்தியர்களுக்கு எந்த வித பிரச்சனையும் இல்லாத வகையில் செயல்பட்டு வருகிறார்.
அதனால், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் டிரம்ப் மீது எந்த வித அதிருப்தி இல்லாமலும் இருக்கிறார்கள் என்பதோடு, இந்திய அரசின் மீது ஒரு நன்மதிப்பை வைத்திருக்கிறார்கள்.
அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் துணை அதிபர் பதவிக்காக கமலா ஹாரிஸை நிறுத்தியுள்ளது, இந்திய வம்சாவளியினரை கவரவே. ஆனால், கமலா ஹாரிஸ், இந்திய அரசுக்கு எதிரான மனப்பான்மை கொண்டவர் என்றே அங்கிருக்கும் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் கருதுகின்றனர்.
எனவே அதிபர் தேர்தலில், அமெரிக்க வாழ் இந்தியர்களின் பேராதரவை பெற்றுள்ள அதிபர் டிரம்ப் திரும்ப அதிபராக வந்தால் ஆச்சரியம் ஒன்றும் இல்லை என சில பத்திரிக்கைகள் நடத்திய கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
மேலும் படிக்க | Donald Trump-ற்கு வந்த விஷம் தடவிய கடிதம்... விசாரணையில் இறங்கிய அமெரிக்க FBI..!!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR