தகாத உறவுக்கான தண்டனையிலும் பெண்ணுக்கு அநீதி: பெண்ணுக்கு 100 சவுக்கடி, ஆணுக்கு 15

இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தில் ஜனநாயக சட்டத்திற்குப் பதிலாக, இஸ்லாமிய ஷரியா சட்டம் அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கே கொடுக்கப்படும் தண்டனைகள் மிகக்கடுமையாக இருக்கின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 15, 2022, 06:45 PM IST
  • திருமணமான பெண் மற்றொரு ஆணுடன் உறவில் இருந்தார்.
  • நீதிமன்றம் அவருக்கு 100 சவுக்கடிகளை தண்டனையாக அளித்தது.
  • ஷரியா சட்டம் மாநிலத்தில் அமலில் உள்ளது.
தகாத உறவுக்கான தண்டனையிலும் பெண்ணுக்கு அநீதி: பெண்ணுக்கு 100 சவுக்கடி, ஆணுக்கு 15  title=

ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் ஒரு பெண்ணுக்கு திருமணமான பிறகு, மற்றொரு ஆணுடன் உறவு வைத்துக்கொண்டால், அதற்கு கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். சமீபத்தில் அப்படி செய்த ஒரு பெண்ணின் நிலைமை மிகவும் மோசமாகிப்போனது.

இந்தக் குற்றத்திற்காக அந்தப் பெண் தலிபான் (Taliban) வகை தண்டனையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அந்தப் பெண் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டபோது, ​​பகிரங்கமாக 100 கசையடிகளால் தண்டிக்கப்பட்டார். ஆனால் அந்த ஆணுக்கு 15 சவுக்கடிகள் மட்டுமே கிடைத்தன. அந்த பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த நபரும் திருமணமானவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கொடூர சம்பவத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 

வேற்று ஆளுடன் தொடர்பில் இருந்தார் 

தகவலின்படி, இந்த வழக்கு இந்தோனேசியாவின் (Indonesia) ஆச்சே மாநிலத்தைச் சேர்ந்தது. அந்த பெண்ணுக்கு 100 சாட்டை அடிகள் கொடுக்கப்பட்ட போது, அவர் வலி தாங்க முடியாமக் துடித்ததால், இந்த கொடூரம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. திருமணமான பெண் ஒருவர் கணவன் அல்லாத மற்றொரு நபருடன் தொடர்பில் இருந்த வழக்கிற்கு எங்கள் நிதிமன்றம் தீர்ப்பளித்து தண்டனை வழங்கியுள்ளது என்று காவல்துறையின் புலனாய்வு அதிகாரி இவான் நாசர் அலவி தெரிவித்தார். அந்த ஆணும் ஏற்கனவே திருமணமானவர். 

இந்த வழக்கின் விசாரணை நடந்தபோது, அந்த பெண் குற்றத்தை ஏற்றுக்கொண்டனர். இருப்பினும், அந்த ஆண் இந்த குற்றச்சாட்டுகள் தவறானவை என இவற்றை மறுத்தார்.

ALSO READ | Space Anaemia: விண்வெளி வீரர்களுக்கு பெரும் சவாலாகும் ‘விண்வெளி ரத்த சோகை’!

நீதிமன்றம் 100 சாட்டையடி தண்டனை விதித்தது

இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்றபோது, ​​அந்த பெண்ணுக்கு பகிரங்கமாக 100 சவுக்கடி அளிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதே குற்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட அந்த ஆணுக்கு 15 சவுக்கடிகள் மட்டுமே அடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அந்த அண் அப்பகுதியில் மிகவும் செல்வாக்கு மிக்கவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷரியா சட்டம் அங்கு அமலில் உள்ளது

இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தில் ஜனநாயக சட்டத்திற்குப் பதிலாக, இஸ்லாமிய ஷரியா சட்டம் அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கே கொடுக்கப்படும் தண்டனைகள் மிகக்கடுமையாக இருக்கின்றன. தூக்கு தண்டனை, தலை துண்டிக்கப்படுவது என இவற்றால்தான் உயிர் போகும். ஆனால், இங்கே கொடுக்கப்பட்டும் மற்ற கடுமையான தண்டனைகளும் பல சமயம் மரணத்தையே அளிக்கின்றன. 

தகாத உறவுகள் (Illegal Affair) பற்றிய வழக்கு இங்கு நீதிமன்றங்களில் வந்தால், சம்பந்தப்பட்ட ஆண் மற்றும் பெண்ணுக்கு பக்ரங்கமாக, மக்களுக்கு மத்தியில் 100 சவுக்கடி அளிக்கப்படும் தண்டனை வழங்கப்படுகின்றது. 

கடந்த காலங்களில் இவ்வாறான வேதனையான சம்பவங்கள் நடந்துள்ளன

முன்னதாக, இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தில் உள்ள ஹோக்சேவுமாவேவில் திருமணத்திற்கு முன் உடலுறவு கொண்ட பெண்ணுக்கு 100 சவுக்கடிகள் தண்டனையாக வழங்கப்பட்டன. தண்டனை வழங்கப்படும் போதே அந்த பெண் உயிரிழந்துள்ளார்.

ALSO READ | ஒரே வழியில் பயணித்த 2 விமானங்கள்..! மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது எப்படி?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News