வடகொரியாவின் ஏவுகணை பரிசோதனைகள்! தொடரும் மர்மம்?

கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் வடகொரியா மீண்டும் 'அடையாளம் தெரியாத ஏவுகணையை' கடலுக்குள் செலுத்தியது... 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 27, 2022, 09:40 AM IST
  • வட கொரியாவின் மற்றுமொரு எறிகணை சோதனை
  • சில நாட்களுக்கு முன் ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை செய்தது வடகொரியா
  • ஒலியை விட ஐந்து மடங்கு வேகத்தில் பயணிக்கூடிய ஏவுகணை அது
வடகொரியாவின் ஏவுகணை பரிசோதனைகள்! தொடரும் மர்மம்? title=

உலகமே ஒரு வழியில் சென்றால், அதைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல், தனிவழியில் செல்லும் வட கொரியா வியாழக்கிழமை கிழக்குக் கடலில் மற்றொரு "அடையாளம் தெரியாத எறிகணையை" ஏவியது.

கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை தொடர்ந்து ஏற்படுத்தி வரும் வடகொரியா, மீண்டும் 'அடையாளம் தெரியாத ஏவுகணையை' கடலுக்குள் செலுத்தியது... 

கிம் ஜாங்-உன் தலைமையிலான வட கொரிய அரசு, இந்த மாதத்தில் மேற்கொண்ட ஆறாவது ஏவுகணை சோதனை இது என்பது கவலைகளை அதிகரிக்கிறது. 

ஜனவரி 5 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளையும், ஜனவரி 14 மற்றும் 17 ஆம் தேதிகளில் சந்தேகத்திற்கிடமான பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையையும் நடத்தியதாக வட கொரியா அறிவித்தது. 

ALSO READ | வட கொரியாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை ஏற்படுத்தும் போர் அபாயம்

கிழக்கு கடற்கரையில் உள்ள ஹம்ஹங் வழியாக, தனது அண்டை நாடான வடகொரியா, இரண்டு சந்தேகத்திற்கிடமான பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக தென் கொரியா கூறியது.

வட கொரியாவுடனான பேச்சு வார்த்தைகளில் "எந்தவித் நிபந்தனைகளும் இல்லை" என்று அமெரிக்கா கூறியபோதும், ஏவுகணை சோதனைகளை செய்திருக்கிறது என்பதும், வட கொரியாவிற்கு (North Korea) எதிராக ஜோ பிடன் அரசு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால், எந்தத் தடையும், அதிபர் கிம்மின் விருப்பத்திற்கு தடை போடுவதில்லை என்பதை உணர்த்தும் விதமாக அந்நாடு, தனது ஏவுகணைத் திட்டங்களை அதிகரிப்பதை நிறுத்துவதேயில்லை.

இதே காரணத்தால்தான், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரியத் தலைவர் கிம் ஜாங்-உன் இடையேயான பேச்சுவார்த்தை முறிந்தது.

ALSO READ | 'நண்பேண்டா' தொற்றுநோய் காலத்திலும் வட கொரியாவுக்கு தோள் கொடுக்கும் சீனா

தற்காப்புக்காக ஏவுகணை சோதனை நடத்தப்படுவதாக வடகொரியா தொடர்ந்து கூறினாலும், அந்நாடு கொரிய தீபகற்பத்தில் பதட்டத்தை அதிகரிக்கும் பாலிஸ்டிக் மற்றும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது.

KIM

ஜனவரி 5 ஆம் தேதி வட கொரியாவின் ஏவுகணையை சோதனையால் கடந்த மூன்று வாரங்களாக பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்கலாம் என்பதையூம் வட கொரிய (North Korea) அரசு உணர்த்துவதாகவே அதன் செயல்கள் பார்க்கப்படுகிறது.

கிம் ஜாங்-உன், தனது தந்தையும், வட கொரியாவின் முன்னாள் அதிபருமான மறைந்த கிம் ஜாங் II இன் 80வது பிறந்தநாளை அடுத்த மாதம் பிரம்மாண்டமாக கொண்டாட திட்டமிட்டுள்ளார்.

ALSO READ | இசையை கேட்டதற்காக 7 பேருக்கு பொதுவில் பொது மரண தண்டனை..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News