சிரிக்க தடை விதித்த நாடு! மதுவுக்கும் தடா! துக்கத்தை அனுபவியுங்கள்

பொது இடங்களில் சிரிப்பதற்கும் மது அருந்துவதற்கும் 10 நாட்கள் தடைவிதிக்கப்பட்ட நாடு எது தெரியுமா? அதுமட்டுமல்ல 10 நாட்களுக்கு நோ டிரிங்க்ஸ் என்று மதுவுக்கும் தடா விதித்த நாடு வட கொரியா  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 17, 2021, 12:12 PM IST
  • மது குடிக்காமல் துக்கம் காக்க உத்தரவிட்ட நாடு
  • சிரிச்சா தண்டனை
  • 10 நாட்களுக்கு தேசிய அளவில் துக்கம் அனுசரிப்பு
சிரிக்க தடை விதித்த நாடு! மதுவுக்கும் தடா! துக்கத்தை அனுபவியுங்கள்  title=

வடகொரியாவின் முன்னாள் அதிபர் கிம் ஜான் இல்லின் பத்தாவது ஆண்டு நினைவு நாளை அந்நாடு அனுசரிக்கிறது. முன்னாள் தலைவருக்கு அஞ்சலி செலுத்துவதற்கு அந்நாடு அறிவித்துள்ள கட்டுப்பாடுகள் சிரிப்பை வரவழைத்தாலும், யாரும் சிரிக்கக்கூடாது.

ஆம்! நாட்டில் யாரும் சிரிக்கக்கூடாது என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தடை விதித்துள்ளார்.

வியாழன், டிசம்பர் 17ம் தேதியான இன்றுடன் அவர் இறந்து 10 ஆண்டுகள் நிறைவடைகிறது. எனவே, பத்து நாட்களுக்கு யாரும் சிரிக்கக்கூடாது என்று தடை விதித்துள்ளார்  கிம் ஜான் இல்லின் மகன் கிம் ஜாங் உன்.

வடகொரியாவில் மக்களுக்கு தடை என்ற சொல்லுக்கு மட்டும் தடையே இல்லை என்று சொல்லும் அளவுக்கு கட்டுப்பாடுகள் அதிகம். தற்போது நாட்டின் முன்னாள் அதிபரின் நினைவு நாளை முன்னிட்டு அந்நாடு மக்கள் 10 நாட்களுகு சிரிக்கக்கூடாது என்பதோடு வேறு சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. 

ALSO READ | ‘நிறைய சாப்பிட்டா நாட்டுக்கு நல்லதல்ல’: அதிபர் கிம்மின் லேட்டஸ்ட் உத்தரவு

பொருட்களை வாங்கவும் கூடாது என்ற தடையுடன் பொழுதுபோக்குக்கும் தடா தான்... அடுத்த பத்து நாட்களுக்கு வடகொரியாவில் யாரும், பிறந்தநாள் கொண்டாடக்கூடாது, மது அருந்தக்கூடாது என்ற தடை சர்வதேச அளவில் பேசுபொருளாகி உள்ளது.
இந்த 10 நாள் துக்கக் காலத்தில் தடையை மீறினால் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும். 

முன்னாள் அதிபர் கிம் ஜாங் இல்லின் வாழ்க்கையை நினைவுகூரும் வகையில், பல நிகழ்ச்சிகளை நடத்த வடகொரியா திட்டமிட்டுள்ளது. முன்னாள் அதிபரின் புகைப்படம் மற்றும் கலைபடைப்புகள் அடங்கிய காட்சி, இசை நிகழ்ச்சி மற்றும் கிம் ஜாங் இல்லின் பெயரில்‘கிம்ஜோங்கிலியா’ என்ற மலர் கண்காட்சி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். 

இதற்கு முன்னதாக, தென் கொரியாவை சேர்ந்த K-pop இசைக் குழுவின் வீடியோக்களைப் பார்த்தது மற்றும் அது தொடர்பான வீடியோக்களை பகிர்ந்து கொண்டதற்காகவும் குறைந்தது 7 பேரை வட கொரியா பொது இடங்களில் பகிரங்கமாக தூக்கிலிட்டுள்ளது என்ற செய்தி வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தின. இந்தத் தகவலை மனித உரிமை அமைப்ப்பு ஒன்று வெளியிட்டது.  

தந்தை  கிம் ஜான் இல்லின் மறைவுக்கு பிறகு, பத்தாண்டுக்கு முன் நாட்டின் உச்ச தலைவராக பதவியேற்ற கிம் ஜாங் உன்னின் (Kim Jong Un) ஆட்சியின் கீழ் வழங்கப்பட்ட மரணதண்டனைகள் சர்வதேச அளவில் கவலைகளை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நாட்டு மக்கள் சிரிப்பதற்கே தடை போட்டிருக்கிறார் கிம் ஜாங் உன்.

ALSO READ | 40 ஆண்டு ரகசியம் அம்பலம்; கிம் ஜாங் உன்னின் தந்தை கொரிய நடிகையை கடத்திய காரணம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News