புதுடெல்லி: இந்த ஆண்டின் சிறந்த வனவிலங்கு புகைப்படக் கலைஞர் விருதை வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் ஐஸ்வர்யா ஸ்ரீதர். உலகம் முழுவதும் 80 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 50,000 புகைப்படங்கள் கலந்துக் கொண்ட சர்வதேச போட்டியில் 23 வயதே ஆன ஐஸ்வர்யா ஸ்ரீதரின்'லைட்ஸ் ஆஃப் பேஷன்' புகைப்படம் விருதை வென்றது.
அதிலிருந்து 100 படங்கள் மட்டுமே பட்டியலிடப்பட்டன, Behaviour Invertebrates என்ற பிரிவில் ஐஸ்வர்யாவுக்கு இந்த விருது கொடுக்கப்பட்டுள்ளது.
லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் அக்டோபர் 13 ஆம் தேதி இந்த விருது அறிவிக்கப்பட்டது. உலகம் முழுவதும் பிரபலமான மதிப்புமிக்க இந்த விருது 56 ஆண்டுகளாக கொடுக்கப்படுகிறது.
கேனனின் பிரீமியம் டி.எஸ்.எல்.ஆர் - ஈ.ஓ.எஸ் -1 டி.எக்ஸ் மார்க் II (Canon's premium DSLRs -- EOS-1DX Mark II) கேமராவைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட ஐஸ்வர்யாவின் Lights of Passion புகைப்படம் அனைவராலும் பாராட்டப்பட்டு, விருதையும் வென்றுள்ளது.
இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள ஐஸ்வர்யா ஸ்ரீதர்: “இந்தியாவுக்கும், என்னை போன்ற ஒரு இளம் வனவிலங்கு புகைப்படக் கலைஞருக்கும் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம். இந்தியாவில் இருந்து இந்த விருதினை பெறும் முதல் இளம் பெண் என்பதை நினைத்து பெருமைப்படுகிறேன். எனக்கு இந்த அங்கீகாரத்தை அளித்த ஜூரி மற்றும் WPY குழுவினருக்கும் நன்றி" என நன்றி தெரிவித்துள்ளார்.
A big moment for India and for me as a young wildlife photographer. Being the first and youngest girl to win this award from India in the Adult category, its a huge honour for me to receive this award !!
Thank you to the entire Jury and WPY team. https://t.co/i6mU8VKW4j
— Aishwarya Sridhar (@Aishwaryasridh9) October 14, 2020
ஐஸ்வர்யா ஸ்ரீதர் ஒரு வனவிலங்கு புகைப்படக் கலைஞர் மட்டுமல்ல, எழுத்தாளர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளரும் என்பது ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. ஈரநிலப் பாதுகாப்பில் தனது முயற்சிகளுக்காக இளவரசி டயானா அறக்கட்டளையால் 2019 ஆம் ஆண்டில் ஸ்ரீதர் டயானா விருதைப் பெற்றார். பிபிசி வைல்ட்லைஃப், டைம்ஸ் ஆஃப் இந்தியா, கார்டியன் உள்ளிட்ட பல அமைப்புகளின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளார் ஐஸ்வர்யா ஸ்ரீதர்.
மும்பை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மாநில ஈரநில (Wetland) அடையாளக் குழுவின் இளைய உறுப்பினர் ஆவார்.
இதுமட்டுமல்ல, 23 வயதிலேயே ஐஸ்வர்யா பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். அவை, Sanctuary Asia’s Young Naturalist Award, World Topper in Cambridge International Exams, World Sparrow Day Photography and Poem competition - 2nd prize, International Camera Fair Award, Young Digital Camera Photographer of the Year-Winner-Small World, Princess Diana Award, Woman Icon India Award.
இவை மட்டுமல்ல, ஐஸ்வர்யா ஸ்ரீதரின் பெருமையை இன்னும் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். Wish you all the best Aishwarya Sridhar!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR