புதுடெல்லி: செஸ் என்ற பெயரைக் கேட்டால் முதலில் நினைவுக்கு வருவது செஸ் போர்டும், விஸ்வநாதன் ஆனந்த், மேக்னஸ் கார்ல்சன் போன்ற வீரர்களின் முகங்கள் தான். ஆனால், நாம் அறிந்த இந்த பிரபலங்களுக்கு நினைவுக்கு வருவது பாபி பிஷ்ஷர் (Bobby Fischer),சதுரங்கத்தின் ராஜா… தனது திறமையால் உலகத்தையே ஆச்சரியப்பட செய்த இரும்பு மனிதர் பிஷ்ஷர். இன்று Chess எனப்படும் சதுரங்க விளையாட்டை பிரபலப்படுத்தியதில் ஃபிஷரின் பங்களிப்பை மறுக்க முடியாது.
'நூற்றாண்டின் விளையாட்டு' ('The Game of the Century')
64 ஆண்டுகளுக்கு முன்பு, சதுரங்க விளையாட்டில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. சதுரங்க விளையாட்டு ஏற்படுத்திய ஈர்ப்பும், கவர்ச்சியும் உலகையே கட்டிப்போட்டது. அந்த நாள் இன்னும் நினைவில் உள்ளது. 1956 அக்டோபர் 17ஆம் தேதியன்று, ஒரு பாலகனின் விஸ்வரூபம் அது. அன்று 13 வயதான பாபி ஃபிஷர் வரலாறு படைத்தார். அமெரிக்காவின் நியூயார்க்கில் சதுரங்க ஜாம்பவான் டொனால்ட் பைர்னுக்கு (Donald Byrne) எதிரில் பாபி இருந்தார். இந்த சதுரங்க விளையாட்டில் ராணியை பலி கொடுத்து, தானே சதுரங்க ராஜாவானார் ஃபிஷர்.அதனால்தான் இந்த போட்டிக்கு 'நூற்றாண்டின் விளையாட்டு' என்று பெயரிடப்பட்டது. இந்த போட்டியைப் பற்றி இதுவரை பல புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன.
அக்கா கற்றுக் கொடுத்த பாடம்
ராபர்ட் ஜேம்ஸ் ஃபிஷர், பின்னர் பாபி ஃபிஷர் (bobby fischer) என்று அழைக்கப்பட்ட பாபி, 1943 மார்ச் 9ஆம் தேதியன்று அமெரிக்காவின் சிகாகோவில் பிறந்தார். பாபியின் அக்கா ஜான் இந்த விளையாட்டை விளையாட கற்றுக் கொடுத்தார். பாபியின் தாயும் தந்தையும் ஒன்றாக இல்லை. எனவே, பாபி தனது அம்மாவுடன் வளர்ந்துவந்தார். பாபியின் தாய் ரெஜினா ஃபிஷர், செவிலியராக பணியாற்றினார், அதோடு சமூக சேவைகளையும் செய்துவந்தார். குழந்தை பருவத்திலிருந்தே பாபி மிகவும் சூட்டிப்பாகவும், துறுதுறுவென்று ஓரிடத்தில் இருக்காமலும் சுற்றிக் கொண்டிருப்பார். எனவே, பாபியின் கவனத்தை சதுரங்கத்தில் திருப்பினார் தாய். 15 வயதில், பாபி கிராண்ட் மாஸ்டர் ஆனார், இது அந்த காலகட்டத்தில் மிகப் பெரிய சாதனையாகும்.
பாபி ஃபிஷரின் மரணத்திற்கு பின் நடைபெற்ற விசித்திரமான சம்பவம்
2005 ஆம் ஆண்டில், பாபி ஃபிஷர் ஐஸ்லாந்து நாட்டு குடியுரிமையைப் பெற்றார். அவருடைய சிறுநீரகம் செயலிழந்ததால், அவர் 2008 ஜனவரி 17ஆம் தேதியன்று இறந்தார். ஃபிஷரின் இறந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் மர்லின் யங் (Marilyn Young) விசித்திரமான வழக்கு ஒன்றை தொடுத்தார்.
பாபி ஃபிஷர், தனது 9 வயது மகள் ஜிங்கி யங்-கின் (Jinky Young) தந்தை என்றும், ஃபிஷரின் சொத்தில் அவருக்கும் பங்கு வேண்டும் என்று வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், அடக்கம் செய்யப்பட்ட ஃபிஷரின் சடலத்தை வெளியில் எடுத்து, டி.என்.ஏ பரிசோதனை செய்ய உத்தரவிட்டது. அப்போது இந்த விவகாரம் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானது. இறுதியில் டி.என்.ஏ சோதனையில் பாபி ஃபிஷர், ஜிங்கி யங்கின் தந்தை அல்ல என்று கூறிய நீதிமன்றம், மர்லின் யங்கின் சொத்து கோரிக்கையை நிராகரித்தது.
தொடர்புடைய செய்தி | 13வது பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்ற ரஃபேல் நடால் டென்னிஸ் நாயகன் In Pics
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR