Gold Coast Commonwealth விளையாட்டில் பங்கேற்க உள்ள வீர்ரகளுக்காக சுமார் 225000 ஆணுறைகளை வாங்கியுள்ளது CWG நிர்வாகம்!
வரும் ஏப்ரல் மாதம் 4-ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 15-ஆம் நாள் வரை ஆஸ்திரேலியாவின் கிரீன்ஸ்லாந்தில் கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் விளையாட்டுகள் நடைபெறவுள்ளது. அந்நாட்டின் Carrara மைதானத்தில் நடைப்பெறவுள்ள இப்போட்டியில் பங்கேற்க வரும் 6600 போட்டியாளர்களின் பாதுகாப்பு நலன் கருதி அவர்களுக்காக 22500 ஆணுறைகளை நிர்வாகம் வரவைத்துள்ளது. மேலும் 17000 கறிவரை காகித ரோல்கள், இலவச ஐஸ்கிரீன்களும் இந்த பட்டியலில் அடங்கும்.
போட்டிக்கு வரும் விளையாட்டு வீரர்கள் பாலியல் ரீதியாகவும் தொடர்பு வைத்துக்கொள்ள வாய்ப்புகள் இருப்பதால் அவர்களின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
11 நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு தலா 34 காண்டம் என்ற விதத்தில் இத்தனை காண்டம்கள் வரவேற்கப் பட்டுள்ளது.
முன்னதாக, தென் கொரியாவில் நடைப்பெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டி வீரர்களுக்காக 11000 ஆணுறைகள், ரியோ ஒலிம்பிக் போட்டியின் போது 450000 ஆணுறைகள் இலவசமாக வீரர்களுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.