ஐதாராபாத்: போலி ஆவணம், நில மோசடி வழக்கில் 3 பேர் கைது!

போலி ஆவணங்களை கொண்டு பெங்களூரு பெண்மனியிடம் நிலமோசடி செய்த 3 பேரினை கௌச்சிபௌலி காவல்துறை கைது செய்துள்ளது!

Last Updated : May 14, 2018, 03:04 PM IST
ஐதாராபாத்: போலி ஆவணம், நில மோசடி வழக்கில் 3 பேர் கைது! title=

ஐதாராபாத்: போலி ஆவணங்களை கொண்டு பெங்களூரு பெண்மனியிடம் நிலமோசடி செய்த 3 பேரினை கௌச்சிபௌலி காவல்துறை கைது செய்துள்ளது!

பெங்களூருவில் குதிரை பயிற்சியாளராக இருப்பவர் ரூபா டி சில்வா. கடந்தாண்டு நவம்பவர் மாதம் ரூ,2.5 கோடி மதிப்பளவில் 300Sq நிலத்தினை சப்பானி ராஜேஸ்வரி, சாமுவேல் மற்றும் அபால உமா என்பவர்களிடன் இருந்து வாங்கியுள்ளார்.

ஆனால் 6 மாத காலத்திற்கு பிறகு தற்போது ரூபா அவர்கள் வாங்கிய நிலம் சப்பானி ராஜேஸ்வரி, சாமுவேல் மற்றும் அபால உமா ஆகியவர்களது இல்லை என தெரிந்து அதிர்ந்துள்ளார்.

சம்பந்தப்பட்ட நிலமானது சரத் சந்திரா என்பவரால் கடந்த 2009-ஆம் ஆண்டு வாங்கப்பட்டு பயன்படுத்தாமல் வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது. இந்த விவரங்களை அறிந்துக்கொண்ட சாமுவேல் தனது உறவினர் உமா பெயரில் இந்த நிலம் இருப்பது போல் போலி ஆவணங்களை தயாரித்து ரூபா டி சில்வா விடம் விற்றுள்ளனர்.

இந்த விவரங்கள் அரியாத ரூபா, போலி ஆவணங்களை கண்டு நம்பி அந்த இடத்தினை வாங்கியுள்ளார். தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ள இந்த விவாகரம் குறித்து காவல்துறையில் ரூபா கொடுத்த புகாரின் பேரில் குற்றம்சாட்டப்பட்ட சப்பானி ராஜேஸ்வரி, சாமுவேல் மற்றும் அபால உமா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களின் போலி ஆவணம், நில மோசடி பிரிவில் வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாக கௌச்சிபௌலி இன்ஸ்பெக்டர் கங்காதர் தெரிவித்துள்ளார்.

Trending News