இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! ரிக்டரில் 5.3 ஆக பதிவு!

இந்தோனேஷியாவின் அபேபுரா நகரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது!

Last Updated : Apr 23, 2018, 10:06 AM IST
இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! ரிக்டரில் 5.3 ஆக பதிவு!

இந்தோனேஷியாவின் அபேபுரா நகரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. சில வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டன. இதனால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளுக்கு ஓடி வந்தனர்.  

இந்த நிலநடுக்கம் சுமார் 20 நொடிகள் உணரப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

More Stories

Trending News