பட்ஜெட் விலையில் புதிய ஐபேட் அறிமுகம்!

ஆப்பிள் நிறுவனத்தின் கல்வி சார்ந்த நிகழ்வில் புதிய ஐபேட் அறிமுகம் செய்திருந்தது. இவ்விழாவில் கல்வி சார்ந்த பயன்பாடுகளில் ஏற்றதாக பல்வேறு செயலிகள் அறிமுகம் செய்யப்பட்டன. இவ்விழாவில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபேட் அறிமுகம் செய்யப்பட்டது. 

Last Updated : Mar 28, 2018, 04:41 PM IST
பட்ஜெட் விலையில் புதிய ஐபேட் அறிமுகம்! title=

ஆப்பிள் நிறுவனத்தின் கல்வி சார்ந்த நிகழ்வில் புதிய ஐபேட் அறிமுகம் செய்திருந்தது. இவ்விழாவில் கல்வி சார்ந்த பயன்பாடுகளில் ஏற்றதாக பல்வேறு செயலிகள் அறிமுகம் செய்யப்பட்டன. இவ்விழாவில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபேட் அறிமுகம் செய்யப்பட்டது. 

ஆப்பிளின் விலை குறைந்த ஐபேட் மாடல்கள் இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தியா மட்டுமின்றி ரஷ்யா, தாய்லாந்து, துருக்கி மற்றும் இதர நாடுகளிலும் புதிய ஐபேட் வெளியியாக உள்ளது.

இந்தியாவில், 

> புதிய ஐபேட் 32 ஜிபி வைபை மாடல் விலை ரூ.28,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
> ஐபேட் 32 ஜிபி, வைபை மற்றும் செல்லுலார் மாடல் விலை ரூ.38,600 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

ஐபேட் மாடல்களில் 9.7 இன்ச் ரெட்டினா ஸ்கிரீன், அலுமினியம் யுனிபாடி வடிவமைப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் வீடியோ காலிங் செய்ய ஹெச்டி ஃபேஸ் டைம் கேமரா, பின்புறம் 8 எம்பி பிரைமரி கேமரா உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

புதிய 9.7 இன்ச் ஐபேட் மாடலில் ஆப்பிள் பென்சில் (பென்சில் விலை ரூ.7,600) ஸ்டைலஸ் பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் லாகிடெக் கீபோர்டு, கிரேயான் பென்சில் உள்ளிட்ட மூன்றாம் தரப்பு சாதனங்களையும் சப்போர்ட் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஐபேட் ஆப்பிள் A10 ஃபியூஷன் பிராசஸர் கொண்டிருக்கிறது. 

ஒரு கிலோவுக்கும் குறைவான எடை கொண்டிருக்கும் புதிய ஐபேட் ஒரு முறை சார்ஜ் செய்தால் 10 மணி நேரத்திற்கான பேட்டரி பேக்கப் வழங்குகிறது. இத்துடன் செயற்கை நுண்ணறிவு அனுபவத்தையும் புதிய ஐபேட் வழங்குகிறது.

Trending News