Diabetes Control Tips: இன்றைய நவீன வாழ்க்கைமுறையில், மக்களை பாதிக்கும் வாழ்கை முறை நோய்களில் நீரிழிவு நோய் மிக முக்கியமான மற்றும் ஆபத்தான நோயாக பார்க்கப்படுகின்றது. ஒரு முறை ஒருவருக்கு நீரிழிவு நோய் வந்துவிட்டால், அதை முற்றிலும் குணப்படுத்த முடியாது என்பது ஒரு கசப்பான உண்மையாகும். எனினும், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை கொண்டு இதை கட்டுக்குள் வைக்கலாம்.
இரத்த சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும் இயற்கையான வழிகளில் பாகற்காயும் ஒன்று. இதை சாறாக உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றதாக பார்க்கப்படுகின்றது. நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஒரு சிறந்த மருந்தாக இருக்கும். இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுவது மட்டுமல்லாமல், இதில் உள்ள ஊட்டச்சத்துக்களால், உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கின்றன.
நீரிழிவு நோயாளிகளுக்கு பாகற்காய் சாறு நன்மை பயக்கும் என்று ஊட்டச்சத்து நிபுணர் அன்ஷி ராஜ் மகாஜன் கூறுகிறார். இது இன்சுலின் போன்ற பண்புகளைக் கொண்டுள்ளது என்றும், இது சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது என்றும் அவர் தெரிவிக்கிறார். சுகர் நோயாளிகளுக்கு பாகற்காய் சாறு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்று கூறப்படுகின்றது. நீரிழிவு நோயாளிகளுக்கு பாகற்காய் சாறு மூலம் கிடைக்கும் நன்மைகள் என்ன? பாகற்காயை உட்கொள்ளும்போது எந்தெந்த விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும்? இவை அனைத்தையும் இந்த பதிவில் விரிவாக காணலாம்.
சர்க்கரை நோயாளிகளுக்கு பாகற்காய் சாறின் நன்மை
பாகற்காய் சாறு இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். ஏனெனில் அதில் உள்ள கலவைகள் இன்சுலின் போல வேலை செய்கின்றன. இதில் உள்ள பாலிபெப்டைட்-பி (தாவர இன்சுலின்), கிளைகோசைடுகள், சரண்டைன் மற்றும் கேரவிலோசைடுகள் போன்ற தனிமங்கள் சர்க்கரையைக் குறைக்க உதவும். டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு பாகற்காய் சாறு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது பசியை கட்டுப்படுத்துவதால், தேவையற்ற, ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது.
பாகற்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
பாகற்காய் பல முக்கிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இது உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. இதில் அதிக அளவு வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், துத்தநாகம், பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் பல்வேறு பி வைட்டமின்கள் (நியாசின், ஃபோலேட், தயாமின் மற்றும் ரிபோஃப்ளேவின் போன்றவை) உள்ளன. இது தவிர, பாகற்காயில் ஆன்டிஆக்ஸிடன்ட்களும் அதிகமாக உள்ளன. இது பல்வேறு நோய்களுக்கு எதிராக உடல் போராட உதவுகிறது.
நீரிழிவு நோயாளிகள் பாகற்காயை எப்படி எல்லாம் சாப்பிடலாம்?
பாகற்காய் சாறு தவிர, இதை சுகர் நோயாளிகள் தங்கள் உணவில் பல்வேறு வழிகளில் சேர்த்துக்கொள்ளலாம். கறி, கூட்டு, பச்சடி, ஊறுகாய் போன்ற வகைகளில் பாகற்காயை உட்கொள்ளலாம். பாகற்காயின் கசப்பை குறைக்க வேண்டுமானால் எலுமிச்சை மற்றும் வெள்ளரியுடன் கலந்து இதை சாப்பிடலாம். இது அதன் சுவையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அதன் ஊட்டச்சத்துக்களையும் பாதுகாக்கும்.
இந்த விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்
நீரிழிவு நோயாளிகளுக்கு பாகற்காய் சாறு நன்மை பயக்கும் என்றாலும், அதை குறைந்த அளவிலேயே உட்கொள்ள வேண்டும். சுகர் நோயாளிகள் பாகற்காய் சாறு உட்கொள்ளும் முன் தங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது முக்கியம். இதன் மூலம் இதனால் நல்ல விளைவுகள் ஏற்படுவதையும், பக்க விளைவுகள் ஏற்படாமல் இருப்பதையும் உறுதிசெய்து கொள்ளலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | உடல் எடையை எளிதாக குறைக்கணுமா? உங்களுக்கு உதவும் மஞ்சள் காபி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ