தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் கேமரான் பேங்கிராப்ட் பந்தைச் சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது. ஆஸ்திரேலியா அணி பீல்டிங் செய்த போது கேமரான் தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்து சிறிய மஞ்சள் நிற பொருளை எடுத்து தனது உள்ளாடைக்குள் போட்ட காட்சி வீடியோவில் தெளிவாக பதிவானது.
ஆஸி., வீரர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னருக்கு அபதாரம் & தடை
இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் மீது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அணியின் தலைவர், துணைத்தலைவர் பொறுப்புகளில் இருந்து ஸ்டீவ் சுமித், டேவிட் வார்னர் ஆகியோர் நீக்கியது.
சூதாட்ட புகார் காரணமாக கடந்த இரண்டு சீசனில் விளையாடாத ராஜஸ்தான் அணி, இந்த ஐபிஎல் 2018 தொடரில் கலந்துக்கொள்கிறது. அந்த அணியின் கேப்டனாக ஆஸ்திரேலியா வீரர் ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டு இருந்தார்.
இந்நிலையில், ஸ்டீவ் ஸ்மித் மீது புகார் வந்ததை அடுத்து, கேப்டன் பொறுப்பில் இருந்த ஸ்டீவ் ஸ்மித் நீக்கப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அஜிங்கே ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டனாக அஜிங்கே ரஹானே நியமிப்பு!!
இதனையடுத்து, பந்தைச் சேதப்படுத்தியதாக புகாரில் டேவிட் வார்னர் பெயரும் இடம் பெற்றுள்ளது. அவர் தற்போது சன்ரைஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக உள்ளார். ஸ்டீவ் ஸ்மித் போல டேவிட் வார்னரும் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படுவாரா? என கேள்வி எழுந்துள்ளது.
இதுக்குறித்து வி.வி.எஸ். லக்ஸ்மன் கூறுகையில், "கேப்டவுன் டெஸ்டில் நடந்த சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானதாகும். இந்த விவகாரத்தில், சன்ரைஸர்ஸ் வீரர் ஒருவர் இடம்பெற்றுள்ளதால், அதைப் பற்றி பேசுவதற்கு இது சரியான நேரம் இல்லை. ஏனென்றால், நேற்றைய தினம் என்ன நடந்தது, யார் காரணம் என பார்க்கவேண்டி இருக்கிறது. நாங்கள் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் முடிவுக்கா காத்திருக்கிறோம். அதன் பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் எனக் கூறினார்.
வீடியோ: ஸ்டண்ட்மேன் ஆகா மாறிய CSK வீரர் முரளி விஜய்
ஐ.பி.எல் தொடரின் 11_வது சீசன் ஏப்ரல் மாதம் 7-ம் தேதி தொடங்கி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஐ.பி.எல் தொடக்க விழா ஏப்ரல் 6-ம் தேதி மும்பை கிரிக்கெட் கிளப் மைதானத்தில் நடைபெறுகிறது.ஏப்ரல் 7-ம் தேதி நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.