மாநில அரசு ஊழியர்களுக்கு அரசு அளித்த பம்பர் பரிசு: ஊதியத்தில் அதிரடி உயர்வு

7th Pay Commission:  பல மாநில அரசுகளும் தங்கள் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை அதிகரித்து வருகின்றன.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 31, 2023, 02:16 PM IST
  • மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு.
  • பல மாநில அரசுகளும் அகவிலைப்படியை அதிகரித்துள்ளன.
  • இதனால் பல ஊழியர்களுக்கு பம்பர் லாபம் கிடைக்கும்.
மாநில அரசு ஊழியர்களுக்கு அரசு அளித்த பம்பர் பரிசு: ஊதியத்தில் அதிரடி உயர்வு

7வது ஊதியக்குழு, சமீபத்திய புதுப்பிப்பு: மத்திய அரசு சமீபத்தில் 49 லட்சம் ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்தி அவர்களுக்கு மிகப்பெரிய பரிசை அளித்தது. ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் ஆகியவை 4 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டன. இப்போது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் மொத்த அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 46 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து பல மாநில அரசுகளும் அகவிலைப்படியை அதிகரித்து வருகின்றன. அந்த வரிசையில் ராஜஸ்தான் அரசும் அதன் ஊழியர்களுக்கு பெரும் செய்தியை வழங்கியுள்ளது. 

Add Zee News as a Preferred Source

ராஜஸ்தானில் ஆட்சியில் உள்ள அசோக் கெலாட் அரசு மாநில அரசு ஊழியர்களுக்கான (State Government Employees) அகவிலப்படியை 4 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதற்குப் பிறகு, 42 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 46 சதவீதமாக அதிகரித்துள்ளது. ராஜஸ்தான் மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த வேண்டும் என்பது குறித்து அரசு அனுப்பிய முன்மொழிவுக்கு தேர்தல் ஆணையமும் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நவம்பர் 25-ம் தேதி ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல்

அரசின் இந்த முடிவால் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் 4 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு அதிகரிப்பு இருக்கும் என்பதை ஒரு உதாரணம் மூலம் புரிந்துகொள்ளலாம். ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் 10,000 ரூபாயாக இருந்து, அவருக்கு 42% அகவிலைப்படியின் (Dearness Allowance) படி டிஏ தொகை 4200 ரூபாயாக இருந்தால், அது இப்போது 46% டிஏ என்ற கணக்கில் 4600 ரூபாயாக உயரும். நவம்பர் 25 ஆம் தேதி ராஜஸ்தானில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், தேர்தல் ஆணையத்தின் அனுமதியின்றி அரசு அகவிலைப்படியை அறிவித்திருந்தால், அது விதிகளை மீறிய செயலாக இருந்திருக்கும். 

மேலும் படிக்க | அதிரடி வட்டியை அள்ளிக்கொடுக்கும் ரிசர்வ் வங்கி: உடனே முதலீடு செய்யுங்கள்

இது தொடர்பாக மாநில அரசு வெளியிட்டுள்ள செய்தியில், ஜூலை 1-ம் தேதி முதல் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு (DA Hike) வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் அக்டோபர் மாத சம்பளத்தில் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியின் பலனைப் பெறுவார்கள். இது தவிர, மூன்று மாத அரியர் தொகையும் மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, உத்தர பிரதேசத்தில் யோகி அரசு, மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டது. ஊழியர்களின் அகவிலைப்படி 42 சதவிகிதத்திலிருந்து 46 சதவிகிதமாக அதிகைக்கப்பட்டது. 

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு

சமீபத்தில் மத்திய அரசு, ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணம் ஆகியவற்றை 4 சதவிகிதம் அதிகரித்தது. இதன் மூலம் தற்போது அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 46% ஆக அதிகரித்துள்ளது. இதனால் ஊழியர்களின் சம்பளத்தில் பம்பர் ஏற்றம் ஏற்பட்டுள்ளது. அதிகரித்த சம்பளத்துடன், போனஸ் மற்றும் மூன்று மாத அரியர் தொகையும் தீபாவளிக்கு முன் ஊழியர்களுக்கு கிடைக்கும். 

மேலும் படிக்க | டார்க் வெப்பில் 815 மில்லியன் ஆதார் தரவுகள் விற்பனைக்கு ரெடி! அதிர்ச்சித் தகவல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News