டெபாசிட்டுக்கு அதிக வட்டி வழங்கும் பிரபல வங்கி: முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்

நீண்ட கால சேமிப்புக்கு அதிக வட்டியைக் கொடுக்கும் வங்கியை நீங்கள் தேடிக் கொண்டிருந்தால், உங்களுக்கான சூப்பரான வாய்ப்பை கொடுக்கிறது பிரபல வங்கியான பேங்க் ஆஃப் பரோடா. மூத்த குடிமக்கள் சேமிப்புக்கு 7.75 சதவீதம் வட்டி கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : May 17, 2023, 05:15 PM IST
  • வைப்பு தொகைகளுக்கு அதிக வட்டி கொடுக்கிறது
  • மூத்த குடிமக்களுக்கான சிறந்த வட்டி
  • பாங்க் ஆஃப் பரோடாவின் வட்டி விதிகதங்கள் விவரம்
டெபாசிட்டுக்கு அதிக வட்டி வழங்கும் பிரபல வங்கி: முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் title=

புதிய நிதியாண்டு தொடங்கியிருக்கும் நிலையில், முதலீடு மற்றும் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை வங்கிகள் மாற்றியமைத்துள்ளன. பிரபல வங்கியான பேங்க் ஆஃப் பரோடா நிலையான வைப்புத் தொகைகளுக்கான வட்டி விகிதங்களை உயர்த்திருக்கிறது. புதிய வட்டி விகிதங்கள் 2 கோடி ரூபாய் வரையிலான வைப்புத் தொகைகளுக்கு பொருந்தும் என அறிவித்துள்ளது. பொது மக்களுக்கு FD வட்டி விகிதம் 7.25 சதவீதம் வரையும், மூத்த குடிமக்கள் பேங்க் ஆஃப் பரோடாவில் நிலையான வைப்புத்தொகையில் 7.75 சதவீதம் வரையும் வழங்கப்படும். வட்டி விகிதம் உயர்வு மே 12 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. 

பேங்க் ஆப் பரோடா வட்டி விகிதம்

பேங்க் ஆஃப் பரோடா வங்கி, 7 முதல் 45 நாட்களுக்குள் முதிர்ச்சியடையும் வைப்பு தொகைகளுக்கு 3 சதவீதம் வட்டியும், 46 முதல் 180 நாட்களுக்குள் முதிர்ச்சியடையும் டெபாசிட்களுக்கு 4.5 விழுக்காடு வட்டியும் கொடுக்கிறது. 181 முதல் 210 நாட்களுக்குள் முதிர்ச்சியடையும் வைப்பு தொகைகளுக்கு 4.5 சதவீத வட்டி கிடைக்கும். 211 நாட்கள் முதல் ஒரு வருடத்திற்கும் குறைவாக முதிர்ச்சியடையும் டெபாசிட்களுக்கு 5.75 சதவீதம் வட்டி கொடுக்கிறது. ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் டெபாசிட் தொகைகளுக்கு பாங்க் ஆஃப் பரோடா வங்கி 6.75 சதவீத வட்டி விகிதத்தை கொடுக்கும்.

மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு: முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

2 ஆண்டுகளுக்கு மேல் மற்றும் 3 ஆண்டுகள் வரையிலான FD காலங்களுக்கு வங்கி 7.05 சதவீத வட்டி விகிதம் கிடைக்கும். இதற்கு முன் வழங்கப்பட்ட வட்டி விகிதம் 6.75 சதவீதமாக இருந்தது. மூன்று முதல் பத்து ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் FD களுக்கு வங்கி 6.50 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. 399 நாட்களுக்கு பரோடா திரங்கா பிளஸ் டெபாசிட் திட்டம் என அழைக்கப்படும் சிறப்பு டெபாசிட்டில், பேங்க் ஆஃப் பரோடா அதிகபட்ச வட்டி விகிதமான 7.25 சதவீதத்தை கொடுக்கிறது.

மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதங்கள்

மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதங்களை பாங்க் ஆஃப் பரோடா வங்கி கூடுதலாக கொடுக்கிறது. 7 முதல் 45 நாட்களுக்குள் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு, மூத்த குடிமக்களுக்கு வங்கி 3.5 சதவீத வட்டியை கொடுக்கும் வங்கி, 46 நாட்கள் முதல் 180 நாட்கள் வரை முதிர்ச்சியடையும் வைப்பு தொகைகளுக்கு 5 சதவீத வட்டியை தருகிறது. 181 முதல் 210 நாட்களுக்குள் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 5.75 சதவீத வட்டியும், 211 நாட்கள் முதல் ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்துக்கான வைப்புகளுக்கு 6.25 சதவீத வட்டியும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. ஒன்று முதல் இரண்டு ஆண்டுகளுக்குள் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுக்கு 7.25 சதவீத வட்டி விகிதத்தைப் பெறலாம்.

2 ஆண்டுகள் முதல் மூன்று ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு வங்கி 7.55 சதவீத வட்டி விகிதம் வழங்குவதாக தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு இந்த காலக்கெடுவுக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் 7.25 சதவீதமாக இருந்தது. 3 முதல் 5 ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் FDகளுக்கு 7.15 சதவீதமும், 5 ஆண்டுகளுக்கு மேல் முதிர்ச்சியடையும் FDகளுக்கு 7.55 சதவீதமும் வட்டியையும் பாங்க் ஆஃப் பரோடா கொடுக்கிறது.

399 நாட்களுக்கு பரோடா திரங்கா பிளஸ் டெபாசிட் திட்டம் என அழைக்கப்படும் சிறப்பு டெபாசிட்டில், பேங்க் ஆஃப் பரோடா அதிகபட்ச வட்டி விகிதமான 7.75 சதவீதத்தை வழங்குகிறது. 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக 30bps மற்றும் அதற்கு மேற்பட்ட 30bps வழங்கப்படும் என பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் இணையதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க | PM KISAN 14th Installment: 14வது தவணை கிடைத்துவிட்டதா? இல்லை என்றால் உடனே இத பண்ணுங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News