ஜாக்பாட் செய்தி: மூத்த குடிமக்களுக்கு FD விகிதங்களில் மாற்றம்.. 9% வரை ரிட்டர்ன் கிடைக்கும்

Senior Citizen Interest Rates:  இந்த ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு டெர்ம் டெபாசிட்டுகளுக்கு கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை வழங்குகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 26, 2023, 06:10 PM IST
  • 7-29 நாட்கள்: ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி ரூ.2 கோடிக்கு கீழ் உள்ள டெபாசிட்களுக்கு 3.5 சதவீத வருமானத்தை வழங்குகிறது.
  • 30-45 நாட்கள்: முதலீட்டாளர்கள் தங்களின் டெர்ம் டெபாசிட்டில் 4.00 சதவீதம் வருமானம் பெறலாம்.
  • 46-90 நாட்கள்: இந்த FD காலத்தை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 4.5 சதவீதம் வருமானம் கிடைக்கும்.
ஜாக்பாட் செய்தி: மூத்த குடிமக்களுக்கு FD விகிதங்களில் மாற்றம்.. 9% வரை ரிட்டர்ன் கிடைக்கும் title=

முதலீட்டின் மீதான உறுதியான வருமானத்தைப் பொறுத்தவரை, நிலையான வைப்புத்தொகை (FD) தனிநபர்களுக்குக் கிடைக்கும் சிறந்த தேர்வுகளில் ஒன்றாகும். காலவரையறை திட்டமானது குறைந்த ஆபத்துள்ள விருப்பமாகும். மேலும் வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்த பணத்திற்கு வழக்கமான வட்டி கிடைப்பதை இந்த தீட்டம் உறுதி செய்கிறது. ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு டெர்ம் டெபாசிட்டுகளுக்கு கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை வழங்குகிறது. இந்த ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மூத்த குடிமக்களுக்கான FD -களுக்கு 9 சதவீத வட்டியை வழங்குகிறது. சாதாரண பொது மக்கள் 8.5 சதவீதம் வரை வட்டி விகிதத்தைப் பெறலாம். புதிய கட்டணங்கள் ஆகஸ்ட் 21 முதல் அமலுக்கு வந்தன.

Equitas Small Finance Bank: FD விகிதங்கள் மற்றும் கால அளவுகள்

- 7-29 நாட்கள்: ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி ரூ.2 கோடிக்கு கீழ் உள்ள டெபாசிட்களுக்கு 3.5 சதவீத வருமானத்தை வழங்குகிறது.

- 30-45 நாட்கள்: முதலீட்டாளர்கள் தங்களின் டெர்ம் டெபாசிட்டில் 4.00 சதவீதம் வருமானம் பெறலாம்.

- 46-90 நாட்கள்: இந்த FD காலத்தை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 4.5 சதவீதம் வருமானம் கிடைக்கும்.

- 91-180 நாட்கள்: ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த காலத்தின் நிலையான வைப்புகளுக்கு 5.25 சதவீத வட்டியைப் பெறலாம்.

- 181-364 நாட்கள்: 181 முதல் 364 நாட்கள் வரையிலான எஃப்டி -களைத் தேர்ந்தெடுக்கும் நபர்கள் 6.25 சதவீத வட்டியைப் பெறுவார்கள்.

- 1 வருடம் 2 நாட்கள் – 443 நாட்கள்: Equitas Small Finance வங்கி முதலீட்டாளர்களுக்கு 8.2 சதவீத வருமானத்தை வழங்கும்.

- 18 மாதங்கள் 1 நாள் - 2 ஆண்டுகள்: ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி நிலையான வைப்புத்தொகைக்கு 7.75 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.

மேலும் படிக்க | முதலீடுகள் மூலம் 10 ஆண்டுகளில் ரூ.5 கோடியை எப்படி ஈட்டுவது?

- 2 ஆண்டுகள் 1 நாள் - 887 நாட்கள்: டெர்ம் டெபாசிட்டின் வருவாய் விகிதம் 8 சதவீதம்.

- 888 நாட்கள்: இந்த ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி இதில் 8.25 சதவீத வட்டி விகிதத்தை அளிக்கின்றது. 

- 889 நாட்கள் - 3 ஆண்டுகள்: முதலீட்டாளர்கள் தங்கள் FD -க்கு 8 சதவீத வட்டியைப் பெறுவார்கள்.

- 4 ஆண்டுகள் 1 நாள் - 10 ஆண்டுகள்: நிலையான வைப்பில் (FD) 7.25 சதவீத வட்டியை வங்கி வழங்குகிறது.

மூத்த குடிமக்கள் அனைத்து டெபாசிட்டுகளுக்கும் கூடுதலாக 0.5 சதவீத வட்டியைப் பெறுவார்கள். சில நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் பட்சத்தில் பகுதி அளவு மற்றும் முழுமையான ப்ரீமெச்யூர் வித்ட்ராயல் அனுமதிக்கப்படுகிறது.

Equitas Small Finance Bank: NRE FD வட்டி விகிதம்

ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, என்ஆர்இ ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு குறைந்தபட்சம் ஒரு வருடம் முடிந்திருந்தால் மட்டுமே வட்டி செலுத்தப்படும் என்று கூறியுள்ளது. முதலீட்டாளர்கள் 7.25 முதல் 8.5 சதவீதம் வரை வட்டி பெறலாம்.

இதற்கிடையில், இந்திய ரிசர்வ் வங்கி கோடிக்கணக்கான மக்களுக்கு பெரும் நிவாரணம் அளித்துள்ளது. கடன் கணக்குகளில் அபராதம் மற்றும் வட்டி விகிதங்கள் தொடர்பான விதிகளை ரிசர்வ் வங்கி மாற்றியுள்ளது. கடன் கணக்கில் அபராதம் விதிக்கப்படுவதை மத்திய வங்கி தடை செய்துள்ளது. இதனுடன், அடுத்த ஆண்டு முதல் புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த புதிய விதி அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும். வணிகம், என்பிஎஃப் சி (NBFC), கூட்டுறவு வங்கி, வீட்டு நிதி நிறுவனம், நபார்டு, SIDBI போன்ற அனைத்து வங்கிகளுக்கும் புதிய விதிகள் பொருந்தும்.

மேலும் படிக்க | ஊழியர்களுக்கு நற்செய்தி... கணவன் மனைவிக்கு இனி இந்த விஷயத்தில் பிரச்னை இல்லை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News