close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

முந்துங்கள்! சுமார் 9000 ரூபாய் தள்ளுபடி விலையில் Poco F1!

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமியின் முதன்மை ஸ்மார்ட்போன் Poco F1 தற்போது இதுவரை கிடைக்கா மிகப்பெரிய தள்ளுபடியில் கிடைக்கிறது.

Updated: Sep 29, 2019, 07:50 PM IST
முந்துங்கள்! சுமார் 9000 ரூபாய் தள்ளுபடி விலையில் Poco F1!

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமியின் முதன்மை ஸ்மார்ட்போன் Poco F1 தற்போது இதுவரை கிடைக்கா மிகப்பெரிய தள்ளுபடியில் கிடைக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் ஆனது அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் ரூ.9,000 வரை தள்ளுபடி விற்பனையில் பெறலாம் என தகவல்கள் தெரிவிக்கிறது. அதாவது, இதன் 6GB + 128GB வேரியண்ட்களை ரூ .15,999 விலையிலும், 8GB + 256GB வேரியண்ட்களை ரூ .18,999 க்கும் வாங்கலாம் என தெரிகிறது.

அதே நேரத்தில், அதன் 6GB + 64GB வேரியண்ட்டை ரூ .16,499 விலையிலும் வாங்கலாம் என தெரிகிறது. Poco F1-ன் 6GB + 128GB வகைகளில் ரூ .9,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது தவிர, வட்டி இல்லாத EMI, 10 சதவீதம் உடனடி கேஷ்பேக்கும் வழங்கப்படுகிறது. 

உங்கள் தகவலுக்கு,... Poco F1 கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. பயனர்கள் இதன் அடுத்த மாடலுக்காக நீண்ட காலமாக காத்திருக்கிறார்கள். இதனிடையே Poco F2-ன் பல கசிவுகளும் வெளியாகி வருகிறது. ஆனால் அது எப்போது வெளியாகும் என்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. Poco F1-ன் அம்சங்களைப் பற்றி பேசுகையில், இது 6.19" முழு HD Plus டிஸ்ப்ளே கொண்டுள்ளது. தொலைபேசியில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் செயலி திரவ கூல் என்ஜின் ஆதரவுடன் உள்ளது.

Poco F1-ன் அம்சத்தைப் பற்றி குறிப்பிடுகையில்.,.. அதில் 12 + 5 மெகாபிக்சல்கள் கொண்ட இரட்டை பின்புற கேமரா உள்ளது. இந்த தொலைபேசியில் செயற்கை நுண்ணறிவுடன் 20 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது. தொலைபேசியில் USB டைப்-சி சார்ஜிங் ஆதரவுடன் 4,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. Android 9 Pie அடிப்படையில் தொலைபேசி MIUI-ல் இயங்குகிறது. தொலைபேசியில் விரைவு மின்னேற்றம் 3.0 ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. மேலும் பல அம்சங்கள் நிறைந்த இந்த ஸ்மார்ட் போனினை இந்த ஃபெஸ்டிவல் சீசனில் தட்டி செல்ல நீங்கள் தயாரா?...