SpiceJet-ன் அதிரடி சலுகை; விமான டிக்கெட் விலை ₹1299 மட்டும்!

எதிர்வரும் உங்களது பயணத்தை விமானத்தில் மேற்கொள்ள விரும்பினால், உங்களுகாவே இந்த சிறப்பு சலுகை!

Last Updated : Aug 27, 2019, 06:40 PM IST
SpiceJet-ன் அதிரடி சலுகை; விமான டிக்கெட் விலை ₹1299 மட்டும்! title=

எதிர்வரும் உங்களது பயணத்தை விமானத்தில் மேற்கொள்ள விரும்பினால், உங்களுகாவே இந்த சிறப்பு சலுகை!

நாட்டின் புகழ்பெற்ற விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் ஆகஸ்ட் 27 முதல் ஆகஸ்ட் 30 வரை விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு சிறப்பு தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்த சலுகையின் கீழ், விமான பயணத்தை வெறும் ரூ. 1299-ல் மேற்கொள்ளலாம். ஸ்பைஸ்ஜெட் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி டெபோஜோ மஹ்ரிஷி இந்த சலுகையை அறிவித்துள்ளார்.

பண்டிகையொட்டி வரும் விடுமுறை காலத்தை கருத்தில் கொண்டு இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த விடுமுறை பருவத்தில், ஸ்பைஸ்ஜெட் சில இடங்களுக்கு மிகக் குறைந்த விலையில் டிக்கெட்டுகளை வாங்குவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இந்த சலுகையின் டிக்கெட்டுகளை மார்ச் 31, 2020 வரை பதிவு செய்யலாம் எனவும் அறிவித்துள்ளது.

டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் முறை முதலில் வருபவர்களுக்கு முதலில் சேவை அடிப்படையில் அமையும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இந்த சலுகை விலையானது குறிப்பிட்ட சில நகரங்களுக்கு இடையேயான பயணங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

--சலுகையின் கீழ் இந்தியாவுக்குள் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகள்--

  • சென்னை-பெங்களூரு
  • குவஹாத்தி-பாக்தோகிறா
  • பாக்டோக்ரா-குவஹாத்தி
  • ஜம்மு - ஸ்ரீநகர்

---சர்வதேச பயணத்திற்கான ஆரம்ப விலை ரூ. 3999.---

  • கொழும்பு முதல் சென்னை வரை
  • டாக்கா முதல் கல்கத்தா வரை
  • டாக்கா முதல் குவஹாத்தி வரை

மேற்குறிப்பிட்ட நகரங்களுக்கு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய விரும்பும் பயணிகள் www.spicejet.com வலைத்தளத்தை அனுகவும்.

Trending News