SBI வழங்கும் விழாக்கால சிறப்பு சலுகைகள்: விவரம் இதோ!!

இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்குநரான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு வரவிருக்கும் பண்டிகை காலத்தையொட்டி பம்பர் பண்டிகை சலுகைகளை வழங்கியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 28, 2020, 08:27 PM IST
  • Yono (You Only Need One App) என்பது SBI-ன் மொபைல் வங்கி செயலியாகும்.
  • இணைய வங்கி வசதிகளைப் பயன்படுத்தும் SBI வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை சுமார் 76 மில்லியனாகும்.
  • மொபைல் வங்கி சேவைகளை 17 மில்லியனுக்கும் மேலானோர் பயன்படுத்துகின்றனர்.
SBI வழங்கும் விழாக்கால சிறப்பு சலுகைகள்: விவரம் இதோ!! title=

புதுடெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்குநரான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு வரவிருக்கும் பண்டிகை காலத்தை (Festival Season) மனதில் கொண்டு பம்பர் பண்டிகை சலுகைகளை வழங்கியுள்ளது. SBI பண்டிகை சலுகைகள் அதன் retail வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே. Yono மூலம் கார், தங்கம் மற்றும் தனிநபர் கடன்களுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் செயலாக்கக் கட்டணத்தை 100 சதவீதம் தள்ளுபடி செய்வது இதில் அடங்கும்.

Yono (You Only Need One App) என்பது SBI-ன் மொபைல் வங்கி செயலியாகும்.

அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களில், வீடு வாங்குபவர்களுக்கான வீட்டுக் கடன்களுக்கான செயலாக்கக் கட்டணத்தையும் SBI முற்றிலும் தள்ளுபடி செய்துள்ளது. எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் கடன் மதிப்பெண் மற்றும் வீட்டுக் கடன் (Home Loan) தொகையின் அடிப்படையில் வட்டி விகிதத்தில் 10 அடிப்படை புள்ளிகள் (bps) வரை சலுகைகளை அளிக்கிறது. வீடு வாங்குவோர், Yono மூலம் விண்ணப்பித்தால் 5 bps வட்டி சலுகையும் பெறலாம்.

கார் கடன் வாங்கியவர்கள், 7.5 சதவீதத்திலிருந்து தொடங்கி மிகக் குறைந்த வட்டி விகிதத்தைப் பெறலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களில் 100 சதவீத ‘ஆன்-ரோட்’ நிதியையும் அவர்கள் பெறுவார்கள்.

ALSO READ: SBI வாடிக்கையாளர்களே கவனம்... கொஞ்சம் அசந்தாலும் உங்க பணம் கோவிந்தா...!

SBI 7.5 சதவீத வட்டி விகிதத்தில் தங்கக் கடன்களை (Gold Loan) வழங்கி வருகிறது. 36 மாதங்கள் வரை திருப்பிச் செலுத்தும் ஏதுவான பல ஆப்ஷன்கள் உள்ளன. வாடிக்கையாளர்கள் தனிநபர் கடன்களை 9.6 சதவீதம் என்ற குறைந்த கடன் விகிதத்தில் கடன் பெறலாம் என்று வங்கி தெரிவித்துள்ளது.

கார் மற்றும் தங்கக் கடன் விண்ணப்பங்களுக்கு Yono வாடிக்கையாளர்களுக்கு முதன்மை ஒப்புதல் அளிப்பதாக வங்கி தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் வீடுகளிலிருந்து Yono-வில் அங்கீகரிக்கப்பட்ட காகிதமில்லா தனிப்பட்ட கடனையும் பெறலாம்.

இணைய வங்கி வசதிகளைப் பயன்படுத்தும் SBI வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை சுமார் 76 மில்லியனாகும்.  மொபைல் வங்கி சேவைகளை 17 மில்லியனுக்கும் மேலானோர் பயன்படுத்துகின்றனர். 26 மில்லியன் பதிவுசெய்த பயனர்களைக் கொண்ட Yono-வில் ஒரு நாளைக்கு 5.5 மில்லியன் மக்கள் லாக்-இன் செய்கிறார்கள். சுமார் 4,000 க்கும் மேற்பட்ட தனிநபர் கடன்களும் 16,000 Yono  கிருஷி அக்ரி தங்கக் கடன்களும் இதன் மூலம் அளிக்கப்படுகின்றன. 

ALSO READ: EPF Account-டிலிருந்து advance பெறலாம் சுலமபா: உங்களுக்கான simple steps இதோ!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News