Business Ideas With Low Investments Below Twenty Thousand Check Tips: இன்றைய தலைமுறையினர் பலர் ஒருவருக்கு கீழ் வேலைக்கு செல்வதை விட சுய தொழில் தொடங்குவதையே பெரிதும் விரும்புகிறார்கள். யாரிடமும் சம்பளத்தை எதிர்பார்த்து நிற்க கூடாது எனும் இவர்களின் எண்ணமே, இதற்கு காரணமாக அமைகிறது. இதில் இருந்து வரும் லாபம், அவர்களின் வேலையில் இருந்து வரும் சம்பளத்தை விட பன்மடங்கு அதிகமாக உள்ளது.
கையில் 10 முதல் 20 ஆயிரம் வைத்திருந்தாலும், அதை வைத்தும் நல்ல தாெழில் தொடங்கி பன்மடங்கு லாபம் பார்க்க முடியும். அப்படி லாபம் ஈட்டிக்கொடுக்கும் தொழில்கள் யாவை என தெரியுமா?
மெழுகுவர்த்தி பிசினஸ்:
இந்த தொழிலை வீட்டிலிருந்தே எளிய முறையில் தொடங்கலாம். பண்டிகை காலங்கள், மழை காலங்களில் மெழுகு வர்த்திக்கு நல்ல டிமாண்ட் உள்லது. இதை விடுத்து, வீடுகளிலும், ஹோட்டல்களிலும் கூட கேண்டில் லைட் டின்னர் எனும் பெயரில் எக்கச்சக்க மெழுகு வர்த்திகளை ஏற்றி வைத்திருப்பர். அங்கும் இதற்கான கிராக்கி இருக்கிறது. அது மட்டுமன்றி, கடந்த சில ஆண்டுகளாகவே பலர் வாசனை தரும் மெழுகுவர்த்திகளையும் விரும்புகின்றனர். இதற்கு ஏற்ற விலைகளை நிர்ணயித்து, இதை தயாரிக்கலாம்.
ஊறுகாய் தொழில்:
இருபதாயிரம் ரூபாய்க்கு கீழ் ஒரு நல்ல வருமானம் தரும் தொழில் தொடங்க வேண்டும் என்றால், அதற்கு மிகவும் உகந்த தொழில், ஊறுகாய் விற்கும் தொழிலாகும். இந்தியாவை பொறுத்தவரை விதவிதமான ஊறுகாய்களை வாங்கி ரசிக்கும்/ருசிக்கும் பிரியர்கள் உள்ளனர். சாப்பாட்டுடனும், தோசை அல்லது இட்லி உடனும் கூட ஊறுகாயை சேர்த்து சாப்பிடலாம். இதற்கு தேவைப்படுவது சரியான மூலப்பொருட்கள் மற்றும் ஊறுகாய் தயார் செய்வதற்கான இடம். இதை விதவிதமாக பிராண்ட் செய்து சந்தையில் விற்கலாம்.
மேலும் படிக்க | எல்பிஜி முதல் சமூக வலைத்தளம் வரை... மார்ச் 1 முதல் வரவுள்ள முக்கிய மாற்றங்கள்
ஊதுபத்தி தயாரிப்பு தொழில்:
மத வழிபாடுகளில் முக்கியமாக பார்க்கப்படுவது, ஊதுபத்தி. இந்தியாவில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் இதற்கு டிமாண்ட் இருக்கிறதூ. கோயில்களிலும் வீடுகளிலும் பூஜை நேரங்களும் தெய்வீக மனம் பரப்ப உதவுகிறது, ஊதுபத்தி. அது மட்டுமன்றி, ஸ்பிரிச்சுவல் தியான வகுப்புகளிலும் ஊதுபத்தியை ஏற்றுகின்றனர். இதை அன்றாட வீட்டு உபயோக பொருளாகவும் எடுத்து கொள்ளலாம். இதற்கான முதலீடு ரூ.20 ஆயிரத்திற்கும் கீழ் தேவைப்பட்டாலும், சந்தையில், இதற்கான லாபம் ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் கிடைப்பதாக தரவுகள் கூறுகின்றன.
ஐஸ்கிரீம் கோன் தயாரிப்பு:
ஐஸ் கிரீமில் பல வகை இருக்கலாம். ஆனால், எல்லா வகையையும் மிஞ்சி பலரை ஈர்க்க கூடியது, ஐஸ்கிரீம் கோன்தான். இதனை வீட்டிலிருந்தே தயாரிக்கலாம். திருமண வீடுகள், ஐஸ்கிரீம் கடைகள் என பல இடங்களில் இதற்கான டிமாண்ட் உள்ளன. இந்த ஐஸ்கிரீம் கோன் செய்யும் இயந்திரத்தை வாங்குவதற்கு 1.5 லட்சம் வரை தேவைப்படலாம். இதை முதன்மை தொழிலாக செய்து வந்தால் விற்பனை கூடி, வருமானமும் ஈட்டலாம்.
சாக்லேட் தயாரிப்பு:
உணவு பிரியர்களுக்கும் உணவு பிசினஸிற்கும் என்றுமே பஞ்சமும் இல்லை, நஷ்டமும் இல்லை. அந்த அளவிற்கு, இந்தியாவில் உணவு தாெழில் கொடிகட்டி பறக்கிறது. இதில், சாக்லேட் பிசினஸிற்கும் தனி கிராக்கி உண்டு. கேக், ஐஸ்கிரீம், சாதாரண சாக்லேட் என அனைத்திலும் இந்த உணவு பொருள் உபயோகப்படுத்தப்படுகிறது. இதற்கு தேவையான மூலப்பொருள்களை ஒருங்கிணைத்து, சரியான வாடிக்கையாளர்களை பிடித்தால், லாபம் நிச்சயம்.
மேலும் படிக்க | கையில் ரூ.10,000 இருக்கா? ‘இந்த’ தொழில்களை ஆரம்பித்தால் செம வருமானம் வரும்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ