அரசாங்கம் அதன் ஊழியர்களுக்கு பணவீக்கத்தை சமாளிக்க ஏதுவாக ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை அகவிலைப்படியை உயர்த்தி வழங்கி வருகிறது. கடந்த மார்ச் மாதம் அரசு அகவிலைப்படியை 3% உயர்த்தி வழங்க முடிவு செய்ததையடுத்து அதுவரை 31% ஆக இருந்த அகவிலைப்படி 34% ஆக உயர்ந்தது. அதனைத்தொடர்ந்து தற்போது அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்ப்பட்டு 34% லிருந்து 38% ஆக அகவிலைப்படி உயரும் என பல தகவல்கள் வெளியாகி ஊழியர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தி வருகிறது. இந்நிலையில் வாட்ஸ் அப்பில் அகவிலைப்படி உயர்வு குறித்து பரவிய போலியான செய்திகள் குறித்து அரசாங்கம் முக்கிய செய்தியினை வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க | குழந்தைகளின் பெயரில் அக்கவுண்ட் ஓப்பன் செய்தால் மாதம் ரூ.2500 வருமானம்!
போலி செய்தி குறித்து ட்விட்டரில் பிஐபி ஃபேக்ட் செக் கணக்கு பக்கத்தில் போலி செய்தி என்பதற்கான டாக்குமெண்ட் பகிரப்பட்டு இருக்கிறது. அதில் கூறுகையில் வாட்ஸ்அப்பில் பரவி வரும் ஒரு செய்தியில் ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வானது 01.07.2022 முதல் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது, இது முற்றிலும் போலியான செய்தியாகும், செலவினத் துறை இதுபோன்ற எவ்வித உத்தரவையும் வெளியிடவில்லை. சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் அந்த போலியான கடிதத்தில் செப்டெம்பர்-20 என்று தேதியிடப்பட்டு இருக்கிறது, அதில் ஜனாதிபதி மகிழ்ச்சியுடன் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியானது 34% லிருந்து 38% ஆக உயர்த்தப்படும் என்கிற முடிவுக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
An order circulating on #WhatsApp claims that the additional installment of Dearness Allowance will be effective from 01.07.2022#PIBFactCheck
This order is #Fake
Department of Expenditure, @FinMinIndia has not issued any such order pic.twitter.com/VQ07ZvpMXE
— PIB Fact Check (@PIBFactCheck) September 22, 2022
இந்த போலியான செய்தியினை போன்றே ஆகஸ்ட் 23 தேதி குறிப்பிடப்பட்டிருந்த மற்றொரு போலியான செய்தியினை கடந்த ஆகஸ்ட் 25ல் அரசு நிராகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 7வது ஊதியக் குழுவின் கட்டமைப்பின்படி ஊதிய மேட்ரிக்ஸில் நிர்ணயிக்கப்பட்ட அளவிலான ஊதியம் ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ