இந்தியாவில் Compact SUV Kia Sonet காரின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை என்ன?

ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் கியா மோட்டார்ஸ் இந்தியா (Kia Motors India) செப்டம்பர் 18ஆம் தேதியன்று தனது முதல் காம்பாக்ட் எஸ்யூவி-சோனியா (compact SUV-Sonia) காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. Sonetஇன் entry-level HTE Smart Stream G 1.25 MTயின் பான் இந்தியா எக்ஸ் ஷோரூம் விலை 6,71,000 ரூபாயாக இருக்கும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 18, 2020, 07:26 PM IST
இந்தியாவில் Compact SUV Kia Sonet காரின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை என்ன?   title=

புதுடெல்லி: ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் கியா மோட்டார்ஸ் இந்தியா (Kia Motors India) செப்டம்பர் 18ஆம் தேதியன்று தனது முதல் காம்பாக்ட் எஸ்யூவி-சோனியா (compact SUV-Sonia) காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. Sonetஇன் entry-level HTE Smart Stream G 1.25 MTயின் பான் இந்தியா எக்ஸ் ஷோரூம் விலை 6,71,000 ரூபாயாக இருக்கும். 
சோனெட் கார் 17 விதமான (variant) மாறுதல்கள் மற்றும் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதில் இரண்டு பெட்ரோல் என்ஜின்கள், இரண்டு டீசல் என்ஜின்கள், ஐந்து டிரான்ஸ்மிஷன்கள் மற்றும் இரண்டு டிரிம் லெவல்-டெக் கோடுகள் மற்றும் ஜிடி-லைன் ஆகியவை அடங்கும்.

Kia Sonetஇன் சிறப்பம்சங்கள்  

இந்த காரின் மிகவும் சிறப்பு வாய்ந்த விஷயம் என்னவென்றால், நிறுவனம் Kia Sonet ஐ, IMT மற்றும் வைரஸ் பாதுகாப்பு போன்ற உயர் தொழில்நுட்ப அம்சங்களுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தக் காரில், Uvo connectivity உடன் கூடிய 10.25 இன்ச் touchscreen infotainment system உள்ளது. இதைத் தவிர, 7 ஸ்பீக்கர் சிஸ்டம், எலக்ட்ரிக் சன்ரூஃப் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஸ்டீயரிங்கில் traction control மற்றும் ஸ்மார்ட்போனுக்கான wireless charging பொருத்தப்பட்டுள்ளன.  Kia Motors India நிறுவனத்தின் பிரத்யேக பாணியிலான tiger-nose grille, LED DRL with LED headlights, two-tone bumpers, fog lamps, electric sunroof, 16-inch diamond cut alloy wheels மற்றும் LED taillights ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. இந்த கார் இளைஞர்களின் மிகச் சிறந்த தேர்வாக இருக்கும்.  

தனது புதிய காம்பாக்ட் எஸ்யூவியை வாங்க இதுவரை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆண்டுதோறும் 3 லட்சம் வாகனங்கள் உற்பத்தி செய்யப்படும் ஆந்திராவின் அனந்தபூர் தொழிற்சாலையில் இந்த Compact SUV Kia Sonet தயாரிக்கப்பட்டு வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தனது உற்பத்தித் திறனைக் கருத்தில் கொண்டு, இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளிலும் சோனெட்டை சுலபமாக விற்க முடியும் என்று Kia கூறுகிறது. இந்நிறுவனம் ஆகஸ்ட் 7ஆம் தேதியன்று சர்வதேச அளவில் Compact SUV Kia Sonetவை அறிமுகப்படுத்தியது. கியா சோனட்டின் முன்பதிவு ஆகஸ்ட் 20 முதல் இந்திய சந்தையில் தொடங்கியது. உங்களுக்கும் Compact SUV Kia Sonet கார் வேண்டுமா? 25 ஆயிரம் ரூபாய் முன்பணம் செலுத்தி இப்போதே முன்பதிவு செய்யுங்கள்...  

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News