அமெரிக்கா: உலகின் மிகவும் பிரபலமான பீயர் (Beer) பிராண்டான "ப்ரூவர் அன்ஹீசர்-புஷ் இன்பேவ்" (AB InBev) கொரோனா வைரஸ் (Coronavirus) காரணமாக பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. உண்மையில், இந்த நிறுவனம் கொரோனா பீர் (Corona Beer) என்ற பெயரில் மது பானத்தை தயாரிக்கிறது. இது அமெரிக்காவில் அதிக அளவில் விற்பனை ஆகிறது. ஆனால் கொரோனா வைரஸ் சீனாவில் பரவத் தொடங்கியதிலிருந்து, இந்த பீர் பிராண்டின் விற்பனை, படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிறுவனம் முதல் காலாண்டில் பல பில்லியன் ரூபாயை இழந்துள்ளது.
வேடிக்கையான வீடியோ:
ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, மக்கள் "கொரோனா பீர்" குறித்து வேடிக்கையான வீடியோக்களை (Memes) பதிவிடத் தொடங்கியுள்ளனர். மேலும் இது சமூக ஊடகங்களில் பெரிய அளவில் பகிரப்படுகிறது. "கொரோனா பீர் வைரஸ்" மற்றும் "பீர் கொரோனா வைரஸ்" பற்றிய ஆன்லைன் தேடல்களும் அதிகரித்துள்ளன. கூகிள் (Google) படி, கொரோனா தொடர்பாக கடந்த மாதத்தில் தேடல் 1100% அதிகரித்துள்ளது.
விற்பனை இரண்டு ஆண்டுகளில் மிகக் குறைவு:
யூகோவ் பி.எல்.சி படி, அமெரிக்காவில் அதன் விற்பனை இரண்டு ஆண்டுகளில் குறைந்த அளவை எட்டியுள்ளது. கடந்த வாரம் நியூயார்க்கில் நிறுவனத்தின் பங்குகள் 8% சரிந்தன.
#coronabeer pic.twitter.com/oNkzy23sKV
— Leonardo Gallo (@LeonhardHahn) February 23, 2020
அமெரிக்காவின் மூன்றாவது பிரபலமான பீர் பிராண்ட்:
"கொரோனா பீர்" அமெரிக்காவின் மூன்றாவது பெரிய பிராண்டாகும். கின்னஸ் (Guinness) முதல் இடத்திலும், ஹெய்னெக்கன் (Heineken) இரண்டாவது இடத்திலும் உள்ளது. Brewer Anheuser கொரோனாவைத் தவிர, பட்வைசர் (Budweiser) மற்றும் ஸ்டெல்லா ஆர்டோயிஸ் (Stella Artois) ஆகிய நிறுவனங்களும் அடுத்தடுத்து இடத்தில் அதிக அளவில் பீர் விற்பனை செய்கிறார்கள்.
வருவாய் இழப்பு:
நிறுவனம் அதன் முதல் காலாண்டு வருவாயில் 10% இழந்துள்ளது. நிறுவனம் அதன் வருவாயில் 260 மில்லியன் டாலர் (சுமார் 19 பில்லியன்) இழப்பை பெற்றுள்ளது. இந்த இழப்பு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று நிறுவனம் கூறியுள்ளது.