மாற்று டெபிட் கார்டு வழங்க வங்கி வசூலிக்கும் கட்டண விபரம்!

Debit Card Replacement Charges: டெபிட் கார்டு தொலைந்து விட்டால், மாற்று கார்டு பெற கட்டணம் செலுத்த வேண்டும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 25, 2023, 11:44 AM IST
  • நாட்டின் முக்கிய வங்கிகளின் டெபிட் கார்டுகளுக்கான கட்டணங்களைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
  • எஸ்பிஐ மாற்று டெபிட் கார்டு கட்டணம்.
  • கட்டணம் வாடிக்கையாளர்களின் சேமிப்புக் கணக்கில் இருந்து தானாகவே கழிக்கப்படும்.
மாற்று டெபிட் கார்டு வழங்க வங்கி வசூலிக்கும் கட்டண விபரம்! title=

Debit Card Replacement Charges: பல வங்கிகள் உங்கள் டெபிட் கார்டுக்கு இரண்டாம் ஆண்டிலிருந்து கட்டணம் வசூலிக்கத் தொடங்குகின்றன. இந்தக் கட்டணம் வாடிக்கையாளர்களின் சேமிப்புக் கணக்கில் இருந்து தானாகவே கழிக்கப்படும். இந்த கட்டணம் டெபிட் கார்டின் வகையைப் பொறுத்தது. உங்கள் கார்டின் வகையைப் பொறுத்து சேவைக் கட்டணமும்  வேறாக இருக்கும். கார்டு திருடப்பட்டாலோ அல்லது தொலைந்து போனாலோ மாற்று கார்டு வழங்க வங்கிகளும் கட்டணம் வசூலிக்கின்றன. நாட்டின் முக்கிய வங்கிகளின் டெபிட் கார்டுகளுக்கான கட்டணங்களைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

வங்கிகளின் இணையதளத்தில் வெளியிட்டுள்ள தகவல்களின் அடிபப்டையில், கீழே மாற்று டெபிட் கார்டு பெறுவதற்கான கட்டண விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

1. எஸ்பிஐ டெபிட் கார்டு மாற்று கட்டணம் (SBI - State Bank of India)

பாரத ஸ்டேட் வங்கி ரூ. 300 மற்றும் ஜிஎஸ்டி என்ற அளவில் மாற்று டெபிட் கார்டு வழங்குவதற்கான கட்டணத்தை வசூலிக்கிறது. ஜிஎஸ்டி 18% விகிதத்தில் பொருந்தும்.

2. HDFC வங்கி  (HDFC Bank) 

ஹெச்டிஎஃப்சி வங்கி மாற்று டெபிட் கார்டு வழங்குவதற்கு ரூ.200 மற்றும் ஜிஎஸ்டி என்ற அளவில் கட்டணத்தை வசூலிக்கிறது.

3. ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank)

ஐசிஐசிஐ வங்கி மாற்று டெபிட் கார்டு வழங்க ரூ.200 மற்றும் ஜிஎஸ்டியை வசூலிக்கிறது. ஜிஎஸ்டி 18 சதவீதம் ஆகும்.

மேலும் படிக்க | Business Idea: ரூ.20,000 இருந்தால் போதும்... வருமானத்தை அள்ளித்தரும் தீபாவளி பிசினஸ்..!!

4. யெஸ் வங்கி (Yes Bank)

யெஸ் வங்கி ரூ. 199 மற்றும்  ஜிஎஸ்டி GST என்ற அளவில் மாற்று டெபிட் கார்டு வழங்குவதற்கான கட்டணத்தை வசூலிக்கிறது.

5. கனரா வங்கி (Canara Bank)

கனரா வங்கி 150 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி GST என்ற அளவில் மாற்று டெபிட் கார்டு வழங்குவதற்கான கட்டணத்தை வசூலிக்கிறது. இதற்கு 18 சதவீத ஜிஎஸ்டி GST.

6. பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank)

பஞ்சாப் நேஷனல் வங்கி  மாற்று டெபிட் கார்டு கட்டணமாக கார்டைப் பொறுத்து ரூ.150 முதல் ரூ.500 வரை வசூலிக்கிறது.

குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காததற்காகவும் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன

பெரும்பாலான வங்கிகள் தங்களுடைய சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை வைத்திருக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளன. இதற்காக அவை ஒரு நிலையான தொகையையும் வைத்திருக்கின்றன. நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட குறைவாக இருப்பு இருந்தால், அந்த தொகையை கழிப்பதன் மூலம் வங்கி உங்களுக்கு அபராதம் விதிக்கிறது. அனைத்து வங்கிகளும் விதிக்கும் அபராதத்தின் அளவு வேறுபட்டது. இதுவும் கிளை இருக்கும் இடத்திற்கு ஏற்ப மாறுபடும். நகர்ப்புறங்களில் உள்ள கிளைகளில், குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காததால் அதிக பணம் பிடித்தம் செய்யப்படுகிறது. அதேசமயம், அதே வங்கி கிராமப்புறங்களில் உள்ள கிளைகளில் குறைவான பணத்தை வசூலிக்கிறது.

மேலும் படிக்க | 'அனைத்து ஏற்பாடுகளும் ரெடி': ரூ.1000 நோட்டு குறித்து ரிசர்வ் வங்கி அளித்த முக்கிய தகவல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News