இன்றைய காலகட்டத்தில், விலைவாசி எல்லாம் மிகவும் அதிகரித்துள்ள நிலையில் எவ்வளவு சம்பாதித்தாலும் போதாத நிலை தான் உள்ளது. குடும்ப செலவுகளையும் பொறுப்புகளையும் சமாளிக்க கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்ல வேண்டிய நிலைமை தான் பலர் வீட்டில் உள்ளது. இருந்தாலும் சிலருக்கு குழந்தைகள் மற்றும் வயதானவர்களை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு இருக்கும். அவர்களால் மற்றவர்களைப் போல் வீட்டை விட்டு வெளியே சென்று வேலை பார்க்க இயலாது. நிலையில் இருப்பவர்களுக்கு வீட்டிலிருந்தே செய்யும் தொழில்கள் சிறப்பாக கை கொடுக்கும். பண்டிகை காலங்கள் அதற்கான சிறந்த தீர்வாக இருக்கும். என்றால் பண்டிகை காலத்தில், குறிப்பிட்ட சில பொருட்களுக்கான தேவை மிக அதிகமாக இருக்கும். அதனை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தீபாவளி சமயத்தில் கை கொடுக்கும் பிசினஸ்
பண்டிகை காலம் என்றால் நமக்கு நினைவுக்கு வருவது முதலில் தீபாவளி தான். தீபாவளிக்கு புது ஆடை, பட்டாசு, பலகாரங்கள் ஆகியற்றை வாங்காதவர்கள் இருக்கவே முடியாது. மேலே குறிப்பிட்ட மூன்றில் பலகாரம் தயாரித்து வியாபாரம் செய்வது மிகவும் குறைந்த முதலீட்டில் நல்ல லாபத்தை கொடுக்கும் பாதுகாப்பான தொழிலாக (Business Idea) இருக்கும்.
தீபாவளி பலகாரம் தயாரிக்கும் பிசினஸ்
இன்றைய காலகட்டத்தில் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால், வீட்டில் பலகாரம் தயாரிக்க பெரும்பாலானோருக்கு நேரம் இருப்பதில்லை. இதனால் இதற்கான டிமாண்ட் தீபாவளியில் மட்டுமல்ல என்றுமே அதிகமாக இருக்கும். உங்கள் சமையலில் கை தேர்ந்தவர் என்றால், பலகாரங்களை நீங்களே தயாரிக்கலாம். அல்லது உதவிக்கு ஆள் ஒன்றை நியமித்துக் கொள்ளலாம். இது பலகாரத்தை உங்கள் குடியிருப்பில் அல்லது நீங்கள் வசிக்கும் இடத்தில் நேரடியாக நீங்களே விற்கலாம். அல்லது அருகில் உள்ள கடைகளுக்கு கொடுத்து அதனை விற்க சொல்லலாம்.
தொழிலுக்கு தேவையான மூலதனம்
இதில் உள்ள முக்கிய சிறப்பு அம்சம் என்னவென்றால், பலகாரம் தயாரிக்க உங்களுக்கு தனியாக இடம் எதுவும் தேவையில்லை. உங்கள் சமையலறையே போதுமானது. பலகாரத்தை விற்கவும் தனியாக கடை எதுவும் போட வேண்டிய அவசியம் இல்லை. பலகாரம் செய்ய தேவையான மூலப் பொருட்கள் வாங்க நீங்கள் 20000 அல்லது 25000 ஆயிரம் ரூபாய் செலவழித்தால் போதும். ஆனால் இதன் மூலம் கிடைக்கும் வருமானம் குறைந்தபட்சம் 50,000 ஆக இருக்கும் என தோராயாமாக மதிப்பிடப்படுகிறது.
மார்க்கெட்டிங் செய்யும் முறை
உங்கள் பலகார வியாபாரத்தை சந்தைப்படுத்த, நீங்கள் சாம்பிள் பாக்கெட் ஒன்றை தயாரித்து, அதை உங்கள் அருகில் உள்ள சந்தையில் உள்ள கடைக்காரர்களுக்கு மற்றும் உங்கள் வீட்டின் அருகில் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம். இந்த வணிகத்திற்காக நீங்கள் எந்த வீட்டையும் அல்லது கடையையும் வாடகைக்கு எடுக்கத் தேவையில்லை. உங்கள் வீட்டிலிருந்தே தொழில் தொடங்கலாம்.
ஒரே மாதத்தில் பெரிய லாபம் சம்பாதிப்பீர்கள்!
எந்தவொரு வணிகத்தையும் நடத்துவதற்கு, சந்தையில் அந்த தயாரிப்புக்கான தேவை மிகவும் முக்கியமானது. இந்தியா திருவிழாக்கள் நிறைந்த நாடு, வருடத்தின் ஒவ்வொரு 12 மாதங்களுக்கும் ஏதாவது ஒரு பண்டிகை இருக்கும். இருப்பினும், வரவிருக்கும் தீபாவளி, கார்த்திகை போன்ற பண்டிகைகள் பிசினஸ் செய்வதற்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் காலம். இந்த காலகட்டத்தில், பலகாரம் மட்டுமல்லாமல் பூஜைக்கு தேவையான பொருட்கள், மின் விளக்குகள், அலங்கார பொருட்கள் மற்றும் மண் விளக்குகள் என பலவற்றின் தேவையும் தொடர்ந்து அதிகரிக்கிறது. பலகாரங்களுடன் இதனையும் முயற்சி செய்யலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ