ஊதியம் இல்லாமல் எப்படி EMI கட்டுவது? நடுத்தர மக்களின் நிலையை புரிந்துக்கொள்ளுமா அரசு?

ரிசர்வ் வங்கிக்கு எழுதிய கடிதத்தில், நிதி அமைச்சகம் EMI-க்கள் செலுத்துதல், வட்டி மற்றும் கடன் திருப்பிச் செலுத்துதல் மற்றும் மோசமான கடன்களை வகைப்படுத்துவதில் தளர்வு குறித்து சில மாதங்களுக்கு தடை விதிக்க பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது.

Last Updated : Mar 26, 2020, 07:30 PM IST
ஊதியம் இல்லாமல் எப்படி EMI கட்டுவது? நடுத்தர மக்களின் நிலையை புரிந்துக்கொள்ளுமா அரசு? title=

ரிசர்வ் வங்கிக்கு எழுதிய கடிதத்தில், நிதி அமைச்சகம் EMI-க்கள் செலுத்துதல், வட்டி மற்றும் கடன் திருப்பிச் செலுத்துதல் மற்றும் மோசமான கடன்களை வகைப்படுத்துவதில் தளர்வு குறித்து சில மாதங்களுக்கு தடை விதிக்க பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது.

கொரோனா வைரஸ் வெடிப்பால் தூண்டப்பட்ட பொருளாதார அழுத்தத்தை சமாளிக்க கடன் வாங்குபவர்களுக்கு உதவும் அவசர நடவடிக்கைகளை பரிசீலிக்குமாறு இந்திய ரிசர்வ் வங்கியை நிதி அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதனை வலியுறுத்தும் வகையில்., நிதிச் சேவைத் துறை செயலாளர் டெபாஷிஷ் பாண்டா செவ்வாயன்று ரிசர்வ் வங்கிக்கு ஒரு கடிதம் எழுதியதாகக் கூறப்படுகிறது. இந்த கடிதத்தில் சமமான மாதத் தவணைகள் (EMI) செலுத்துதல், வட்டி மற்றும் கடன் திருப்பிச் செலுத்துதல் மற்றும் மோசமான கடன்களை வகைப்படுத்துவதில் தளர்வவை மேற்கோள் காட்டி எழுதியிருப்பதாக கூறப்படுகிறது.

நாட்டில் முழுஅடைப்பு காரணமாக தனிநபர்கள் மற்றும் வணிகர்கள் பெரும் வருமான இழப்பை எதிர்கொள்வதால் அவர்களுக்கு நிவாரண நடவடிக்கைகள் குறித்து இந்த கடிதம் எழுதப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், கொடிய வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த 21 நாள் முழுஅடைப்பினை அறிவித்தார். இதைத்தொடர்ந்து இந்தியா ஒரு பெரிய பொருளாதார சவாலை எதிர்கொண்டுள்ளது.

கொரோனா வைரஸ் வெடிப்புக்கு மத்தியில் பிரதமரின் இந்த அறிவிப்பு வணிக நடவடிக்கைகளை குறைக்க வழிவகுத்தது மற்றும் சில நிறுவனங்களில் பணிநீக்கங்கள் மற்றும் சம்பள வெட்டுக்களுக்கு வழிவகுத்தது.

இன்று முன்னதாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் மோடிக்கு இதுதொடர்பாக கடிதம் எழுதினார். இதன்போது அவர் EMI மற்றும் கடன் திருப்பிச் செலுத்துதல்களை ஆறு மாத காலத்திற்கு ஒத்திவைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார்.  

இதற்கிடையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள சமூகத்தின் பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவினருக்கு ரூ.1.7 லட்சம் கோடி விரிவான தொகுப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்குள் ஊடகங்களுக்கு அவர் அளித்த இரண்டாவது உரையில், சீதராமன் ஒரு நபருக்கு ரூ.50 லட்சம் மருத்துவ காப்பீட்டுத் தொகையை அறிவித்தார். மேலும் சுகாதாரத் தொழிலாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள், துணை மருத்துவர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தங்களை வைரஸால் வெளிப்படுத்திக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டார்.

இதனிடையே அடுத்த மூன்று மாதங்களுக்கு முதலாளி மற்றும் பணியாளர் ஆகிய இருவருக்கும் EPFO பங்களிப்பை அரசாங்கம் செலுத்தும் என்றும் அவர் அறிவித்தார். இந்த திட்டம் 100 ஊழியர்கள் வரை உள்ள நிறுவனங்களுக்கு பொருந்தும், அல்லது அங்கு 90 சதவீத ஊழியர்கள் ரூ.15,000-க்கும் குறைவான சம்பளத்தை பெறுகிறார்கள் எனும் பட்சத்தில் இந்த விதி பொறுந்தும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

Trending News