புது டெல்லி: ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் இந்திய பொருளாதாரம் (Indian economy) அதன் முதல் காலாண்டில் பெரும் சுருக்கத்தை சந்தித்தது, மேலும் இந்த நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் அரசாங்க நிதிகளும் படிப்படியாக மோசமடைந்துள்ளதாக திங்களன்று வெளியிடப்பட்ட இரண்டு தனித்தனி தரவுத் தொகுப்புகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் பொருளாதாரம் 2020-21 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கோவிட் -19 (Covid-19 pandemic) தொற்றுநோய் காரணமாக 23.9 சதவீதமாக சுருங்கியது மற்றும் அதன் விளைவாக நாடு தழுவிய ஊரடங்கு காரணமாக ஹோட்டல் மற்றும் போக்குவரத்து போன்ற உற்பத்தி, கட்டுமான மற்றும் சேவைத் துறைகளை பாதித்தது. இதே காலத்தில் முந்தைய ஆண்டில் பொருளாதாரம் 5.2 சதவீதமாக வளர்ச்சி அடைந்து இருந்தது.
தேசிய புள்ளிவிவர அலுவலகம் (National Statistical Office) வெளியிட்டுள்ள தகவல்கள், இந்த காலாண்டில் கட்டுமான நடவடிக்கைகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. அது 50 சதவிகிதம் சுருங்கியது. அதற்கு அடுத்தப்படியாக வர்த்தகம், ஹோட்டல்கள் மற்றும் போக்குவரத்து துறை 47 சதவிகிதம் மற்றும் உற்பத்தி துறை 39 சதவிகிதம் என சுருக்கம் அடைந்துள்ளது. வேளாண்மை மட்டுமே வெள்ளி சம்பந்தப்பட்ட துறை மட்டும், இந்த காலாண்டில் 3.4 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்தது.
ALSO READ | வங்கி துறை பாதுகாப்பான துறையாக உள்ளது: RBI ஆளுநர் சக்தி காந்த தாஸ்
தொற்றுநோயால் தனியார் நுகர்வு செலவு 27 சதவீதம் சுருங்கியது.ரிசர்வ் வங்கி (Reserve Bank of India), கடந்த வாரம் வெளியிடப்பட்ட தனது வருடாந்திர அறிக்கையில், தொற்றுநோயால் தனிநபரின் செலவினங்களில் ஏற்பட்டுள்ள குறைவு மற்றும் அதனால் ஏற்படும் பாதகமான தாக்கத்தையும், தேவை குறைந்த நுகர்வோர் நம்பிக்கை அளவையும் கோடிட்டு காட்டியது.
மொத்த நிலையான மூலதன உருவாக்கம் - பொருளாதாரத்தில் முதலீட்டு தேவையின் ஒரு குறிகாட்டியாகும். காலாண்டில் 48 சதவீதம் சுருங்கியது. ஏற்றுமதி மற்றும் இறக்குமதியும் இந்த காலகட்டத்தில் சுருங்கியது.
அரசாங்கத்தின் இறுதி நுகர்வு செலவினத்தால் (ஜி.எஃப்.சி.இ - GFCE) பொருளாதாரத்திற்கு ஊக்கத்தை வழங்கியது. இதனால் இந்த காலாண்டில் 20 சதவீத வளர்ச்சியை பதிவு செய்தது.
ALSO READ | அடுத்த நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 9.5% ஆக உயரும்: ஃபிட்ச் மதிப்பீடு
நாட்டின் முக்கியமாக வரி வருவாயில் அதிக அளவில் சுருக்கம் இருந்தது. வரி வருவாய் ஏப்ரல்-ஜூலை காலகட்டத்தில் 42 சதவீதமகா சுருக்கியுள்ளது.
தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன், தனது அறிக்கையில், ஏப்ரல்-ஜூன் காலத்தில் இந்தியாவின் கடுமையான ஊரடங்கு பொருளாதார நடவடிக்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
"ஊரடங்கு (Lockdown) காரணமாக ஏற்படும் பொருளாதார (மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது) சுருக்கம் எதிர்பார்த்த வரிசையில் தான் உள்ளது" என்று அவர் கூறினார். அடுத்தடுத்த காலாண்டில் சிறந்த பொருளாதாரா வளர்ச்சியை எதிர்பார்க்க வேண்டும் னவும் கூறினார்.