IRCTC பங்கு விலை: பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு? என்ன சொல்கிறார்கள் வல்லுநர்கள்

கடந்த இரண்டு நாட்களாக பங்குச் சந்தை சற்று பாசிடிவ் ஆக இருப்பதால் ஐ.ஆர்.சி.டி.சி பங்கு விலை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 17, 2020, 06:20 PM IST
IRCTC பங்கு விலை: பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு? என்ன சொல்கிறார்கள் வல்லுநர்கள் title=

புது டெல்லி: ஐ.ஆர்.சி.டி.சி பங்கு விலை சுமார் 50 சதவீதம் சரிந்தது. தனது பங்குகளின் விலை ரூ. 1994 என உச்சத்தில் இருந்து, தற்போது பெரும் சரிவை சந்தித்துள்ளது. ஆனால் இது முதலீட்டாளர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு என பங்குச் சந்தை வல்லுநர்கள் கூறியுள்ளனர். 

அதாவது பங்குச் சந்தை (Equity Market) வல்லுநர்களின் கூற்றுப்படி, போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களுக்கு ஐ.ஆர்.சி.டி.சி பங்குகளை வாங்கி குவிக்க ஒரு பொன்னான வாய்ப்பாக இருக்கும். தற்போது இதன் பங்கு விலை ரூ .1050 ஆக உள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து சந்தை மீண்டவுடன் ஐ.ஆர்.சி.டி.சி பங்குகள் விரைவில் ரூ .1,400 ஐ எட்டும் என்று அவர்கள் கருதுகின்றனர். மேலும் அதன் பங்கு விலை அதிகரிக்கும். 

இந்தமாதிரி சூழ்நிலையில், ஐ.ஆர்.சி.டி.சி பங்குகளில் முதலீடு செய்வது வருங்காலத்தில் பெரும் லாபத்தை சம்பாதிக்கலாம். தற்போதைய நிலைகளில் முதலீட்டாளர்கள் ஐ.ஆர்.சி.டி.சி பங்குகளில் 50 சதவீதத்தை முதலீடு செய்யலாம் எனக் கூறியுள்ளனர்.

அதாவது முதலீட்டாளர்கள் ஐ.ஆர்.சி.டி.சி ஒரு பங்குகள் 1,050 ரூபாய் அடையும் வரை தொடர்ந்து வாங்கலாம். அதன்பிறகு அதன் பங்கு விலையின் ரூ .1,300 முதல் 1,400 வரை உயரும் என்று அவர் கூறினார்.

நீண்ட காலத்திற்கு ஐ.ஆர்.சி.டி.சி பங்குகளை வாங்கலாம். இது அடுத்த ஆறு முதல் ஒன்பது மாதங்களில் அதன் இழந்த சரிவை மீண்டும் பெறும் என்று ங்குச் சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

Trending News