20 ரூபாய் நோட்டு இருந்தா..நீங்களும் ஆகலாம் லட்சாதிபதி! எப்படி தெரியுமா?

20 Rupee Note Sold For Lakhs : கையில், ஒரு குறிப்பிட்ட 20 ரூபாய் நோட்டு இருந்தாலே பாேதும், பல லட்சங்களை சம்பாதிக்கலாம் என சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. அது எப்படி தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Mar 13, 2024, 12:41 PM IST
  • கையில் 20 ரூபாய் இருந்தால் பல லட்சம் சம்பாதிக்கலாம்.
  • இதற்கு என்ன செய்ய வேண்டும்?
  • இதோ முழு விவரம்!
20 ரூபாய் நோட்டு இருந்தா..நீங்களும் ஆகலாம் லட்சாதிபதி! எப்படி தெரியுமா? title=

20 Rupee Note Sold For Lakhs News In Tamil : மனிதன், தனது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதில் இருந்து ஆடம்ப தேவைகளை நாடி செல்வதை வரை, அனைத்திற்கும் உதவும் ஒரே கருவி, பணம் மட்டும்தான். நாட்டின் பொருளாதாரம் உயர உயர, விளை ஏற்றங்களும் எண்ணிலடங்கா மாற்றங்களும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இப்படி, அனைத்திற்கும் அடிப்படை தேவையாக இருக்கும் பணத்தின் வடிவத்தை அவ்வப்போது இந்திய அரசாங்கம் மாற்றுவதுண்டு. அப்படி மாற்றிய பிறகு புது நோட்டுகள்தான் அதிகளவில் புழக்கத்தில் இருக்கும். ஓரு கட்டத்தில் பழைய நோட்டுகளும், காசுகளும் மிகவும் அறிதானவையாக மாறி விடும். ஆண்டுகள் பல கடந்தவுடன் இந்த நோட்டுகளுக்கு மதிப்பு அதிகமாகிவடும். அந்த வகையில், பழைய 20 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு தற்பாேது ஜாக்பாட் அடித்திருக்கிறது. அது என்ன தெரியுமா? 

பழைய ரூபாய் நோட்டுகளுக்கான மதிப்பு:

இந்திய ரிசர்வ் வங்கி, பழைய ரூபாய் நோட்டுகளை அவ்வப்போது மாற்றுவதும் அதற்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுகளை அமல்படுத்துவதும் வழக்கம். சமீபத்தில் கூட புதிய 500, 100, 20, 10 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்திவிட்டது. இதனால், அனைவரது கையிலும் புதிய நோட்டுகள் மட்டுமே தவழ்கின்றன. இதனால் பழைய 10 மற்றும் 20 ரூபாய் நோட்டுகளை பார்க்கவே முடிவதில்லை. இப்போது, கையில் பழைய 10 அல்லது 20 ரூபாய் நோட்டுகள் இருந்தாலே போதும், கையில் லட்சங்களை பார்க்கலாம் என கூறப்படுகிறது. அந்த அளவிற்கு பழைய நோட்டுகளில் என்ன தனித்துவமாக இருக்கிறது? 

அனைத்து ரூபாய் நோட்டுகளிலுமே அதற்குறிய பிரத்யேக சீரியல் எண்கள் இருக்கும். இது, ஒவ்வொரு நோட்டுக்கும் மாறுபடும். தற்போதுள்ள புது நோட்டுகளை காட்டிலும் பழைய ரூபாய் நோட்டுகளில் உள்ள சீரியல் எண்கள் மிகவும் ஸ்பெஷலானதாகவும் அறிதானவையாகவும் அறியப்படுகிறது. பழைய ரூபாய் நோட்டுகளில் பூஜ்ஜிய எண்கள் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. குறிப்பாக, 9 எண் அதிகமாக உள்ள 10 ரூபாய் நோட்டுகளுக்கு கூடுதலாக மதிப்பு அதிகம் என கூறப்படுகிறது. 10 ரூபாய் நோட்டில் 0 எண்கள் அதிகமாக இருந்தால் அந்த ரூபாய் நோட்டு, நல்ல விலைக்கு வாங்கப்படுமாம். இந்த நோட்டுகள் அதிகமாக இருந்தால், இதனை விற்று 10 லட்சம் வரை சம்பாதிக்கலாம் என தகவல்கள் வெளியாகியிருக்கிறது. 

எதில் நோட்டுகளை விற்க வேண்டும்?

இந்த பழைய ரூபாய் நோட்டுகளை விற்பதற்கு, https://coinbazzar.com/ என்ற இணையதளம் இயங்குகிறது. இதில், பழைய 10 ரூபாய் நோட்டுகளை விற்கலாம். அதே போல 20 ரூபாய் நோட்டுகளையும் விற்கலாம் என சில மாதங்களுக்கு முன்னரே தகவல்கள் வெளியானது. பழைய 10 ரூபாய் நோட்டுகளில் 9 என்ற எண் அதிகம் வந்தால் அதற்கு எப்படி விலை அதிகமோ, அதே போல 20 ரூபாய் நோட்டுகளில் 786 என்ற எண் அச்சிடப்படிருந்தால் அதற்கு மதிப்பு அதிகம். 

மேலும் படிக்க | Paytm Deadline March 15: காலக்கெடுவுக்கு பிறகும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவைகள் கிடைக்கும்

20 ரூபாய் நோட்டில் இருக்க வேண்டிய அம்சங்கள்:

>786 என்ற எண் அச்சிடப்பட்டிருக்க வேண்டும்
>ரூபாய் நோட்டின் முன் பக்கத்தில் மகாத்மா காந்தியின் புகைப்படம் இருக்க வேண்டும்

ஏன் இவ்வளவு சிறப்பு? 

‘786’ என்ற எண், இஸ்லாமியர்களிடையே மிகவும் புனிதமான எண்ணாக பார்க்கப்படுகிறது. எனவே, இந்த எண் அச்சடிக்கப்பட்ட நோட்டை பலர் அதிக விலை கொடுத்து வாங்க ரெடியாக  இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ரூபாய் நோட்டுகளை விற்பதால் சுமார் 6 லட்சம் வரை வருமானம் பார்க்கலாம் என கூறப்படுகிறது. இதை பலர் OLX தளத்தில் வாங்குகின்றனராம். 

என்ன செய்ய வேண்டும்?

இந்த ரூபாய் நோட்டுகளை விற்க, OLX தளத்தில் விற்பனையாளராக பதிவு செய்து கொள்ள வேண்டும். கையில் இருக்கும் பழைய 20 ரூபாய் நோட்டை க்ளாரிட்டியுடன் போட்டோ எடுத்து அதை OLX தளத்தில் அப்லோட் செய்ய வேண்டும். இதை வாங்க நினைப்பவர்கள் நீங்கள் கேட்கும் விலைக்கு வாங்கி கொள்வர். பழைய ரூபாய் நோட்டுகளை வாங்க நினைப்பவர்களின் விருப்பத்தையும்,  அந்த நோட்டுகளுக்காக இருக்கு பஞ்சத்தையும் பொறுத்து இதற்கு பணம் கிடைக்கும் என கூறப்படுகிறது. இதில், மிகவும் கவனமாக செயல்படுவதும் அவசியம். 

பொறுப்பு துறப்பு: ஆன்லைன் தளங்களில் இது போல பழைய ரூபாய் நோட்டுகளை வாங்குவதையும் விற்பனை செய்வதையும் இந்தியன் ரிசர்வ் வங்கி ஆதரிப்பதில்லை. தவிர, ஆன்லைன் தளங்களில் பழைய ரூபாய் நோட்டுகளுக்கு எவ்வளவு விலை நிர்ணயிக்கப்படுகின்றன என்ற தகவல்களும் வெளிப்படையாக வெளியிடப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | பெண்களுக்கு கைநிறைய வருமானத்தை அள்ளித்தரும் சிறு தொழில்கள்! என்னென்ன தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News