1 Crore ரூபாய் வரையிலான கல்விக் கடன்களை வழங்குகிறது ICICI வங்கி: விவரம் உள்ளே!!

தனியார் துறை வங்கியான ICICI வங்கி ரூ .1 கோடி வரை கல்விக் கடன்களை வழங்கி வருகிறது. இந்தக் கடனில் உங்களுக்கு உங்கள் வசதிப்படி திருப்பிச் செலுத்தும் வசதி, விரைவான செயல்முறை மற்றும் பிற சலுகைகளும் கிடைக்கும்.

Last Updated : Oct 18, 2020, 07:18 PM IST
  • ICICI வங்கி எளிய கல்விக் கடன்களை வழங்குகிறது.
  • இந்த கடனில், வாடிக்கையாளர்களுக்கு வரி சலுகையும் கிடைக்கிறது.
  • ICICI வங்கி ரூ .1 கோடி வரை கல்விக் கடன்களை வழங்கி வருகிறது.
1 Crore ரூபாய் வரையிலான கல்விக் கடன்களை வழங்குகிறது ICICI வங்கி: விவரம் உள்ளே!!  title=

நீங்களோ அல்லது உங்கள் குழந்தைகளோ உயர்கல்வி பயில விரும்பி, ஆனால், அதற்கு பணக் கட்டுப்பாடு ஒரு தடையாக இருந்தால், இது உங்களுக்கான செய்திதான். இனி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. தனியார் துறை வங்கியான ICICI வங்கி (ICICI Bank) ரூ .1 கோடி வரை கல்விக் கடன்களை (Education Loan) வழங்கி வருகிறது. இந்தக் கடனில் உங்களுக்கு உங்கள் வசதிப்படி திருப்பிச் செலுத்தும் வசதி, விரைவான செயல்முறை மற்றும் பிற சலுகைகளும் கிடைக்கும்.

வங்கியின் கூற்றுப்படி, இந்த கடனில், வாடிக்கையாளர்களுக்கு வரி சலுகையும் (Tax Benefits) கிடைக்கிறது.

கடன் வரம்பு

நீங்கள் நமது நாட்டிலேயே உயர்கல்வி படிப்புகளில் சேர விரும்பினால், அதிகபட்சமாக ரூ .50 லட்சம் வரை கல்விக் கடனைப் பெறலாம். வெளிநாடு சென்று உயர்கல்வி படிப்பில் சேர விரும்பினால், நீங்கள் அதிகபட்சமாக ரூ .1 கோடி வரை கடன் பெறலாம்.

ALSO READ: SBI Card வைத்திருப்பவர்களுக்கு Good News: உங்கள் card-ன் பலம் கூடியது!!

எப்படி விண்ணப்பிப்பது

இந்த கடனுக்காக, உங்கள் அருகிலுள்ள ICICI வங்கிக் கிளைக்கு நீங்கள் செல்ல வேண்டும். இங்கே விண்ணப்ப படிவத்தை நிரப்பவும். இதைச் செய்த பிறகு, கடன் செயல்முறை தொடங்கும். நீங்கள் விரும்பினால், வித்யாலட்சுமி போர்ட்டல் மூலமாகவும் கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.

கல்விக் கடனுக்கான வட்டி விகிதம்

ICICI வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின்படி, நீங்கள் இளங்கலை பட்டப்படிப்பிற்கான கடனை வாங்கினால், ஆரம்ப வட்டி விகிதம் 11.75 சதவீதமாகும். முதுகலை பட்டப்படிப்புக்கான கடனை எடுத்தால், ஆரம்ப வட்டி விகிதம் ஆண்டுக்கு 11.25 சதவீதமாக இருக்கும். இருப்பினும், இந்த விகிதம் 2019 ஏப்ரல் - ஜூன் வரையிலானது. சமீபத்திய வட்டி விகிதங்கள் பற்றிய தகவல்களை நீங்கள் வங்கிக் கிளைக்குச் செல்லும் போது தெரிந்துகொள்ளலாம்.

இந்த செலவுகள் இந்த கடனில் சேர்க்கப்படும்

ICICI வங்கியின் இந்த கடனின் கீழ், கல்லூரி-பள்ளி அல்லது விடுதி கட்டணம், தேர்வு-நூலகம்-ஆய்வக கட்டணம், வெளிநாட்டில் படிக்கச் செல்ல ஆன செலவுகள், புத்தகங்கள்-உபகரணங்கள்-சீருடை போன்றவற்றை வாங்குதல், கணினி வாங்கும் செலவு மற்றும் பிற செலவுகளும் சேர்க்கப்படும்.

ALSO READ: வங்கிக் கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் நீங்கள் பணம் எடுக்கலாம்: அதுதான் Overdraft வசதி!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News