2019-2020 ஆம் ஆண்டிற்கான வருமானவரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிப்பு...!
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், நாள் ஒன்றில் சராசரியாக 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், சில தளர்வுகளுடன் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் உள்ள பெரும்பாலான தொழில் நிறுவனங்களுக்கும் வருவாய் குறைந்து, பண நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்ட வருமான வரித்துறையினர், 2019-2020 ஆம் ஆண்டிற்கான வருமானவரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தனர்.
இந்நிலையில், வருமான வரித் துறை, கடந்த ஏப்ரல், 8 முதல், ஜூன், 30 வரையிலான காலகட்டத்தில், வரி செலுத்திய, கிட்டத்தட்ட, 20 லட்சம் பேர்களுக்கு, 62 ஆயிரத்து, 361 கோடி ரூபாயை ரீபண்டு தொகையாக வழங்கி உள்ளது. இதில், தனிநபர் வருமான வரி செலுத்திய, 19.07 லட்சம் பேருக்கு, ரீபண்டு தொகையாக, 23 ஆயிரத்து, 454 கோடி ரூபாய் வழங்கப்பட்டுஉள்ளது.மேலும், கார்ப்பரேட் வரி செலுத்திய, 1.36 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு, 38 ஆயிரத்து, 908 கோடி ரூபாய் ரீபண்டு வழங்கப்பட்டுள்ளது.
READ | PUBG விளையாடி அப்பாவின் வங்கி கணக்கிலிருந்த ₹.16 லட்சத்தை காலி செய்த மகன்!!
இது குறித்து, நேரடி வருமான வரித் துறையினர் தெரிவித்துள்ளதாவது... "ஒரு நிமிடத்துக்கு, 76 பேருக்கு என்ற வேகத்தில், கடந்த, ஏப்ரல், 8ம் தேதி முதல், ஜூன், 30ம் தேதி வரை, ரீபண்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த, 56 நாட்களில், மொத்தம், 62 ஆயிரத்து, 361 கோடி ரூபாய் ரீபண்டாக வழங்கப்பட்டுள்ளது.இந்த ரீபண்டு தொகை, வரி செலுத்தியவர்களின் வங்கிக் கணக்கில், நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல; வரி செலுத்திய யாரும், இதுவரை ரீபண்டு கேட்டு, துறையில் கோரிக்கை வைக்கவில்லை. கேட்பதற்கு முன்னதாகவே வழங்கப்பட்டு வருகிறது.இவ்வாறு தெரிவித்துள்ளனர்.