வரியை சேமிக்க சூப்பர் டிப்ஸ்: இந்த கார்டு மூலம் வரி கட்டினால் 16% வரை சேமிக்கலாம்

Income Tax Saving Tips: சில குறிப்பிட்ட கிரெடிட் கார்டுகள் மூலம் வருமான வரி செலுத்தினால் அதிக அளவில் சேமிக்கலாம். இந்த கிரெட் கார்டுகளின் விவரங்களை இங்கே காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 16, 2024, 03:37 PM IST
  • ஜூலை 31: ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு.
  • சில கிரெடிட் கார்டுகளின் மூலம் வருமான வரி செலுத்தினால் வரி செலுத்துவோருக்கு லாபம்.
  • சில கிரெடிட் கார்டுகளில் அதிக அளவு வெகுமதிகள்.
வரியை சேமிக்க சூப்பர் டிப்ஸ்: இந்த கார்டு மூலம் வரி கட்டினால் 16% வரை சேமிக்கலாம் title=

Income Tax Saving Tips: வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நெருங்கி வருகின்றது. வரி செலுத்துவோர் அனைவரும் இதற்கான ஆயத்தப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் ஆன்லைனில் தாமாகவே வருமான வரி கணக்கை (Income Tax Return) தாக்கல் செய்கிறார்கள். சிலர் ஆடிட்டர்கள் மற்றும் பிற தொழில்முறை வல்லுனர்கள் மூலம் ஐடிஆர் -ஐத் தாக்கல் செய்கிறார்கள். 

ஐடிஆர் -ஐ எப்படி தாக்கல் செய்தாலும், காலக்கெடுவுக்கு முன்னர் தாக்கல் செய்வது நல்லது. இதை தாக்கல் செய்யும் முன் தேவையான தகவல்களையும் ஆவணங்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். மெலும், வருமான வரி தொடர்பான அடிப்படை தகவல்களையும் புதுப்பிப்புகளையும் தெரிந்துவைத்திருப்பதும் அவசியமாகும். 

வரி செலுத்துவோர் வருமான வரியை சரியான நேரத்தில் தாக்கல் செய்ய வெண்டியது மிக அவசியமாகும். முறையாக திட்டமிட்டால், பல வழிகளில் வரியை சேமிக்கலாம். வரியை சேமிக்க உதவும் சில டிப்ஸ் பற்றி இந்த பதிவில் காணலாம். இவற்றின் மூலம் வரி செலுத்துவோர் தங்கள் பணத்தை சேமிக்க முடியும். சில குறிப்பிட்ட கிரெடிட் கார்டுகள் (Credit Cards) மூலம் வருமான வரி செலுத்தினால் அதிக அளவில் சேமிக்கலாம். இந்த கிரெட் கார்டுகளின் விவரங்களை இங்கே காணலாம்.

இந்த கிரெடிட் கார்டுகளின் மூலம் வருமான வரி செலுத்தினால் வரி செலுத்துவோருக்கு லாபம்:

- இந்தியாவில் சில கிரெடிட் கார்டுகள் மட்டுமே வருமான வரியில் (Income Tax) ரிவார்ட் பாயிண்ட்ஸ், அதாவது வெகுமதி புள்ளிகளை வழங்குகின்றன. 

- HDFC BizBlack மற்றும் HDFC BizPower கிரெடிட் கார்டுள் போன்ற சில தேர்ந்தெடுக்கப்பட்ட கார்டுகளில் வரி செலுத்துவதற்கான வெகுமதி புள்ளிகள் அளிக்கப்படுகின்றன. 

- இந்த கார்டுகள் முறையே 16 சதவீதம் மற்றும் 8 சதவீதம் வரை வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி செலுத்துவதில் சேமிப்பை அளிக்கின்றன. 

மேலும் படிக்க  | SBI வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி: உயர்ந்தது வட்டி விகிதம்.... அதிகரிக்கும் EMI

இந்த கிரெடிட் கார்டுகளில் அதிக அளவு வெகுமதிகள்

- HDFC BizBlack மற்றும் HDFC BizPower கார்டுகள் தவிர, SBI Vistara Cards/IDFC Vistara Card ஆகிய கார்டுகளையும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம். 

- இவற்றிலும் வருமான வரி செலுத்துவதில் மைல்ஸ்டோன் வெகுமதிகள் வழங்கப்படுகின்றன. 

- உதாரணமாக, SBI Vistara Card/IDFC Vistara Card -இல் தேவையான மைல்ஸ்டோனை எட்டியவுடன் வாடிக்கையாளர்கள் இலவச விமான டிக்கெட்டுகளைப் பெற முடியும். 

ஜூலை 31: ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு

நிதியாண்டு 2023-24 (FY 2023-24), மதிப்பீட்டு ஆண்டு 2024-25 (AY 2024-25) -க்கான வருமான வரிக் கணக்கை இன்னும் தாக்கல் செய்யாதவர்கள் அதற்கான பணிகளை விரைவாகத் தொடங்க வேண்டும். ஜூலை 31 வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியாகும். இதற்குப் பிறகு, வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கு வருமான வரித் துறையால் அபராதம் விதிக்கப்படும். ஜூலை 31 ஆம் தேதிக்குள் ஐடிஆர் தாக்கல் செய்யாத வரி செலுத்துவோர் (Taxpayers) டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் அபராதத்துடன் தாமத ரிட்டன் (Belated ITR) தாக்கல் செய்யலாம். 

மேலும் படிக்க  | மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ ஹக் முக்கிய அப்டேட்: AICPI எண்கள் மூலம் கிடைத்த நல்ல செய்தி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News