இந்தியாவில் E-Air Taxi சேவை... பயண நேரம் வெறும் 7 நிமிடங்கள்..!

E-Air Taxis service in India: இண்டிகோவின் தாய் நிறுவனமான இண்டர்குளோப் எண்டர்பிரைசஸ் (InterGlobe Enterprises) நாடு முழுவதும் இ-ஏர் டாக்சி சேவையைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 10, 2023, 12:58 PM IST
  • நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ நிறுவனத்தின் தாய் நிறுவனம் ஆர்ச்சர் ஏவியேஷன்.
  • இன்டர்குளோப் எண்டர்பிரைசஸ் தொடங்க உள்ள சேவை.
  • EVTOAL விமானங்களைத் தயாரிக்கும் ஆர்ச்சர் ஏவியேஷன்
இந்தியாவில் E-Air Taxi சேவை...  பயண நேரம் வெறும் 7 நிமிடங்கள்..! title=

வீட்டில் இருந்து ஏர்போர்ட் போறதுக்கே பல நேரம் ஆகுதுண்ணு அலுத்துக்கறீங்களா... இனி டென்ஷன் ஆக வேண்டாம். இண்டிகோவின் தாய் நிறுவனமான இண்டர்குளோப் எண்டர்பிரைசஸ் (InterGlobe Enterprises) 2026 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் இ-ஏர் டாக்சி சேவையைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. இண்டர்குளோப் எண்டர்பிரைசஸ் அமெரிக்காவைச் சேர்ந்த 'ஆர்ச்சர் ஏவியேஷன்' (Archer Aviation) நிறுவனத்துடன் இணைந்து இந்தச் சேவையைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. இ-ஏர் டாக்ஸியின் சிறப்புகளை கருத்தில் கொண்டு இதற்கு பெரிய வரவேற்பு இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.  வழக்கமாக 60 முதல் 90 நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்ளும் கார் பயணம், ஏர் டாக்ஸியில் சுமார் 7 நிமிடங்கள் ஆகும் என்று நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்தியாவில் முழு மின்சார விமான டாக்ஸி சேவையைத் தொடங்குவதற்கும் இயக்குவதற்கும் இரு நிறுவனங்களும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. எனினும், இதற்கான ஒழுங்குமுறை ஒப்புதல் இன்னும் பெறப்படவில்லை.

செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்டர்குளோப்-ஆர்ச்சரின் இந்த விமானத்தின் முக்கிய நோக்கம் முக்கிய நகரங்களில் சேவைய தொடங்கி, சுமார் 50 கிலோமீட்டர் பயண தூரத்தை சுமார் 7 நிமிடங்களில் பயணிகளை அழைத்துச் செல்வது என்று நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இன்டர்குளோப் எண்டர்பிரைசஸ் ஒரு இந்திய போக்குவரத்து சேவை நிறுவனம். நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ நிறுவனத்தின் (Indigo Airlines) தாய் நிறுவனம். ஆர்ச்சர் ஏவியேஷன் என்பது எலக்ட்ரிக் வெர்டிகல் டேக்ஆஃப் மற்றும் லேண்டிங் (EVTOAL) ஏவியேஷன் துறையில் முன்னணி நிறுவனமாகும்.

இன்டர்குளோப் எண்டர்பிரைசஸ் தொடங்க உள்ள சேவை

லாஜிஸ்டிக்ஸ் வணிகத்தில் சுமார் 38% பங்குகளை வைத்திருக்கும் InterGlobe Enterprises, இ-ஏர் டாக்ஸி சேவை தவிர சரக்கு, தளவாடங்கள், மருத்துவம், அவசரகாலம் மற்றும் பட்டய சேவைகளுக்கு இ-விமானத்தைப் பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.

EVTOAL விமானங்களைத் தயாரிக்கும் ஆர்ச்சர் ஏவியேஷன்

ஆர்ச்சர் ஏவியேஷன் நிறுவனத்தின் தலைமையகம் கலிபோர்னியாவின் சான் ஜோஸில் உள்ளது. நிறுவனம் மின்சாரத்தில் இயங்கும் செங்குத்தான நிலையில் புறப்படும் மற்றும் தரையிறங்கும் (Electric Vertical Takeoff and Landing - EVTOAL) விமானங்களை உற்பத்தி செய்கிறது, இது நகர்ப்புற விமான டாக்ஸி சேவையின் எதிர்காலமாக கருதப்படுகிறது.  ஆர்ச்சர் ஏவியேஷனின் EVTOAL விமானம் விமான டாக்ஸி சேவையில் நகரங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள மக்களைக் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது. 150 mph (240 km/h) வேகத்தில், 100 மைல்கள் (160 கிமீ) தூரத்தை கடக்க முடியும் என்று நிறுவனம் கூறியுள்ளது. யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் 200 ஆர்ச்சர் எலக்ட்ரிக் விமானங்களை ஆர்டர் செய்துள்ளது.

மேலும் படிக்க | கோடீஸ்வரனாகும் எளிய வழி... ‘இந்த’ 5 விதிகளை கடைபிடிக்கவும்...!

4 பயணிகள் பயணிக்கக் கூடிய  'மிட்நைட்'  விமானம்  

இந்த நிறுவனத்தின் 'மிட்நைட்' இ-விமானம் 4 பயணிகளையும், ஒரு பைலட்டையும் 100 மைல்கள் (சுமார் 161 கிலோமீட்டர்) வரை கொண்டு செல்ல முடியும். தேசிய தலைநகர் டெல்லி, நாட்டின் நிதித் தலைநகர் மும்பை மற்றும் இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் பெங்களூரு ஆகிய நகரங்களில் இது போன்ற சேவையைத் தொடங்க நிறுவனம் விரும்புகிறது.

அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் ஆர்ச்சர் ஒப்பந்தம்

இந்த ஆண்டு ஜூலையில், அமெரிக்க விமானப்படைக்கு 6 மிட்நைட் இ-விமானங்களை வழங்க ஆர்ச்சர் ஏவியேஷன் $142 மில்லியன் மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அக்டோபரில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விமான டாக்ஸி சேவையை தொடங்கவுள்ளது.

மேலும் படிக்க | வாங்கின தேதியில் இருந்து வாரண்டி கிடையாதாம்...பதறாதீங்க... முதல்ல இதை படிங்க..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News