இண்டிகோ பயணிகள் கவனத்திற்கு... இனி குளிர்பானம் இலவசம்... ஆனால் ஒரு நிபந்தனை!

இண்டிகோ விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு சிற்றுண்டியுடன் இனி பானம் இலவசம். எனினும், விமானங்களில் கேனில் அடைக்கப்பட்ட குளிர் பானங்கள் கிடைக்காது 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 20, 2023, 05:46 PM IST
  • விமானங்களில் கேனில் அடைக்கப்பட்ட குளிர் பானங்கள் கிடைக்காது.
  • இண்டிகோ விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு சிற்றுண்டியுடன் இனி பானம் இலவசம்.
  • சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக எடுக்கப்பட்ட முடிவு.
இண்டிகோ பயணிகள் கவனத்திற்கு... இனி குளிர்பானம் இலவசம்... ஆனால் ஒரு நிபந்தனை! title=

நீங்கள் அடிக்கடி விமானத்தில் பயணிப்பவர் என்றால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். உண்மையில், இண்டிகோ ஏர்லைன்ஸ் தனது விதிகளில் ஒன்றை திடீரென மாற்றியுள்ளது. இது தொடர்பாக அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இப்போது இண்டிகோ விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு சிற்றுண்டியுடன் இனி பானம் இலவசம். எனினும் இவை கிளாஸ்களில் கொடுக்கப்படும். கேனில் அடைக்கப்பட்ட குளிர் பானங்கள் இனி வழங்கப்படாது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிறுவனங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானங்களில் கேனில் அடைக்கப்பட்ட குளிர் பானங்கள் கிடைக்காது

புதிய உத்தரவின் படி, இண்டிகோ விமானங்களில் (Indigo Airlines) பயணிகளுக்கு இனி கேனில் அடைக்கப்பட்ட குளிர் பானங்கள் வழங்கப்படாது.  ஆனால் சிற்றுண்டியை வாங்கும் பயணிகள் ஒரு கிளாஸ் ஜூஸ் அல்லது கோக் பானத்தை இலவசமாக பெறலாம். முன்னாள் ராஜ்யசபா உறுப்பினர் ஸ்வபன் தாஸ்குப்தாவின் புகாரை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இண்டிகோ விமானங்களில் குளிர் பானங்கள் மட்டும் தனியாக கிடைப்பதில்லை என்று ட்விட்டரில் புகார் செய்திருந்தார். சிற்றுண்டி வாங்குபவர்கள் பானத்தை கட்டாயமாக வாங்க வேண்டும் இந்த முறை பயணிகளுக்கு தேவையற்ற சுமையாக உள்ளது என அவர் புகார் அளித்திருந்தார். குளிர் பானங்கள் அல்லது பானங்கள் இல்லாமல் சிற்றுண்டி வாங்கும் ஆப்ஷன் இல்லாததால், பயணிகள் பானங்களை கட்டாயம் வாங்க வேண்டிய நிலை உள்ளதாக அவர் புகார் கூறியிருந்தார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாற்றப்பட்ட விதி

குப்தா தனது புகார் பதிவில் அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவையும் டேக் செய்திருந்தார். இந்த புகார் குறித்து விமான போக்குவரத்து அமைச்சகத்துடன் நிறுவன அதிகாரிகள் விவாதித்தனர். இதைத் தொடர்ந்து நிறுவனம் தனது விதிகளை மாற்றியது. புதிய உத்தரவுகளை பிறப்பித்த இண்டிகோ செய்தித் தொடர்பாளர், பயணிகளுக்கு சிறந்த மற்றும் மலிவு விலையில் உணவு வழங்குவதற்காக, கேனில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாக கூறினார். பிளாஸ்டிக் கேன்களை தூக்கி எறிவதால் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதால் இது சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் ஊக்குவிக்கும்.

மேலும் படிக்க | இண்டிகோ விமானத்தில் இஸ்ரோ தலைவர் சோம்நாத்... வைரலாகும் வீடியோ!

பயணிகள் இப்போது அவர்கள் வாங்கும் எந்த சிற்றுண்டியுடன் இலவசமாக குளிர் பானத்தையும் அனுபவிக்க முடியும். அதிகாரப்பூர்வ அறிக்கையில், “முன்பு, எங்கள் மெனுவில் முந்திரி (ரூ. 200) மற்றும் ஒரு கோக் (ரூ. 100) என்ற விலையில்வழங்கப்பட்டது. மொத்தம் ரூ. 300 வசூலிக்கப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட மெனுவில் இப்போது சிற்றுண்டியுடன் மற்றும் ஒரு கிளாஸ் ஜூஸ் அல்லது கோக் ரூ. ரூ.200 மட்டுமே (பானம் இலவசம்)” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | நடுவானில் ஏற்பட்ட இன்ஜின் கோளாறு.. அவசரமாக தரையிறக்கப்பட்ட இண்டிகோ விமானம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News