Joint Account Benefits And Drawback In Tamil: கூட்டுக்கணக்கை வைத்திருப்பதால் நல்லதா கெட்டதா, இதில் லாபம் வருமா நஷ்டம் வருமா என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு. அது குறித்து இங்கு பார்க்கலாம்.
கூட்டுக்கணக்கு என்றால் என்ன?
வங்கி கணக்கு என்பது ஒரு தனி மனிதருக்கு உரியதாக இருக்கும். ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள், ஒன்றாக இணைந்து ஒரே கணக்கை வைத்திருந்தால் அது கூட்டுக்கணக்கு எனப்படும். இதனை ஆங்கிலத்தில், Joint Account என கூறுவர். கூட்டுக்கணக்கை இருவரும் சேர்ந்துதான் இயக்க முடியும். பணம் எடுக்க இருவரின் ஒப்புதலும் இதற்கு அவசியமக தேவைப்படும். இந்தியாவை பொறுத்தவரை, பெரும்பாலும் திருமண உறவில் இருப்பவர்களே கூட்டுக்கணக்கை வைத்துக்கொள்வர். இதனால் ஏற்படும் நன்மைகள் என்ன? தீமைகள் என்ன?
கூட்டுக்கணக்கு வைத்திருப்பதால் ஏற்படும் லாபம் என்ன?
>எளிதாக கட்டணம் செலுத்தலாம்:
ஒன்றாக கணக்கு வைத்திருப்பவர்கள், வாடகை மற்றும் பிற பயன்பாடுகளுக்காக செய்யும் செலவுகளுக்கும் ஒன்றாக கட்டணம் செலுத்தலாம். அப்படி செலுத்தப்படும் கட்டணங்களில் இன்சூரன்ஸ், எலக்ட்ரிக் பில், வாடகை உள்ளிட்ட செலவுகளும் அடங்கலாம். கூட்டுக்கணக்கு வைத்திருப்பதால் இந்த கட்டணங்களை எளிதாக திரும்ப செலுத்த முடியும்.
>எளிமையான சட்ட செயல்முறை:
ஏதாவது ஒரு விபத்திலோ, அல்லது திடீரென்று உங்களது பார்டனர் இறந்து விட்டாலோ சீக்கிரமாக உங்கள் கணக்கில் இருக்கும் பணத்தை சீக்கிரமாக எடுக்க இயலும். இதுவே, தனியாக வங்கி கணக்கு வைத்திருப்பவராக இருந்தால், அவர் இறந்த பின்பு அவரது வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை எடுக்கும் செயல்முறையே கடினமாக இருக்கும். இது, சட்ட ரீதியாக பணத்தை சீக்கிரமாக கையில் பெற உதவும்.
>வெளிப்படையான செலவுகள்:
ஆன்லைன் பேங்கிங் முறை செயல்படுத்த பட்டுவிட்டதால் பல செலவுகள் ரகசியமாக நடப்பதாக கூறப்படுகிறது. கூட்டுக்கணக்கு வைத்திருப்பதால் ஒரு பைசா செலவு ஆனாலும் அது வெளிப்படையாக பார்க்க உதவும். கூட்டுக்கணக்கு வைத்திருப்பவர்கள், ஒன்றாக என்ன செலவு செய்கிறார்கள் என்பதை பார்த்துக்கொள்ளலாம். இது, எங்கு அதிக செலவு செய்கிறோம் என்பதையும், எந்த செல்வை கட் செய்ய வேண்டும், எப்படி சேமிக்க வேண்டும் என்ற யோசனையை கொடுக்கும்.
கூட்டுக்கணக்கினால் ஏற்படும் நஷ்டங்கள்:
>கட்டுப்பாடற்ற செலவு:
தனித்தனியே வங்கியில் கணக்கு வைக்காதவர்கள், ஒரே ஒரு கூட்டுக்கணக்கை மட்டும் வைத்திருப்பவர்கள், கட்டுப்பாடற்ற செலவுகளால் அவதிப்படலாம். உங்கள் பார்ட்னர் அதிக செலவு செய்ய எண்ணினால் அல்லது செலவு செய்தால் அது உங்கள் இருவரையுமே பாதிக்கும். இதனால் சண்டைகளும் சச்சரவுகளும் வரலாம். இருவரில் யார் அதிகமாக அந்த கணக்கில் பணம் போடும் அளவிற்கு சம்பாதிக்கிறாரோ அவருக்கு இது பெரிய பிரச்சனையாக முடியலாம்.
மேலும் படிக்க | CBDT வரி செலுத்துவோருக்கு அளித்த நல்ல செய்தி: இந்த வரி வழக்குகள் மூடப்படும்!!
>கடன் பிரச்சனை:
ஒரே கணக்கு வைத்திருப்பவர்களில் ஒருவர் கடன் பிரச்சனையில் இருந்தால் அது கூட்டுக்கணக்கில் இருக்கும் இன்னொரு நபரையும் பாதிக்கலாம். கிரெடிட் கார்ட் கடன், மாணாக்கருக்கான கடன் ஆகியவை தனியே ஒருவருடையதாக இருக்கும். அவர், அதற்காக கூட்டுக்கணக்கை உபயோகித்தால் அதில் இருக்கும் பணம் சீக்கிரமாக காலியாக வாய்ப்புள்ளது.
>சீக்கிரமாக பணம் எடுக்க இயலாது:
கூட்டுக்கணக்கு வைத்திருப்பவர்கள் பணம் எடுக்க வேண்டுமானால், இரண்டு பேரின் கையொப்பமுமே வேண்டும். இருவரில் ஒருவர் வெளியூரில் இருக்கிறார், அல்லது கையொப்பம் போட முடியாத நிலையில் இருக்கிறார் என்றால் பணத்தை எடுப்பது கடினமாகி விடும்.
>கணக்கு முடக்கம்:
கூட்டுக்கணக்கு வைத்திருப்பவர்களில் ஒருவர் திருமண உறவில் இருந்து விலக வேண்டும் என்று நினைத்து விட்டால், அவர்கள் சொல்லாமல் காெள்ளாமல் கூட கணக்கை முடக்கி விட முடியும். அவர்கள் கையெழுத்து தர மறுத்தால் வங்கியில் இருக்கும் பணத்தை எடுக்க முடியாமல் போய்விடும்.
கூட்டுக்கணக்கில் பல வகைகள் உள்ளன. கணக்கு தொடங்கியவர்களில் இருவரில் ஒருவர் இறந்து விட்டால், அதில் நாமினியாக நியமிக்கப்பட்டிருப்பவர்கள் அந்த கணக்கை தொடரலாம். வாரிசுகளாக நியமிக்கப்பட்டவர்கள் அந்த கணக்கில் இருக்கும் பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.
மேலும் படிக்க | டபுள் வருமானம், பணத்திற்கு 100% பாதுகாப்பு: அசத்தலான தபால் அலுவலக சேமிப்பு திட்டம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ