வீடு வாங்க இருப்பவர்களுக்கு Good News... வருகிறது அதிரடி Festival Home Loan offer..!!!

வீடு வாங்க திட்டமிட  இது சரியான நேரம், ஏனென்றால் பண்டிகை காலங்களில் பல வங்கிகள் மலிவான விலையில் கடன்களை வழங்குகின்றன.

Last Updated : Oct 9, 2020, 12:30 PM IST
  • வீடு வாங்க திட்டமிட இது சரியான நேரம், ஏனென்றால் பண்டிகை காலங்களில் பல வங்கிகள் மலிவான விலையில் கடன்களை வழங்குகின்றன.
  • வங்கி சாரா நிதி நிறுவனங்கள் பொதுவாக வங்கி விகிதங்களை விட அதிக கட்டணம் வசூலிக்கின்றன.
  • ரிசர்வ் வங்கி சமீபத்திய மாதங்களில் ரெப்போ விகிதங்களை குறைத்தது.
வீடு வாங்க இருப்பவர்களுக்கு Good News... வருகிறது அதிரடி Festival Home Loan offer..!!! title=

வீடு வாங்க திட்டமிட  இது சரியான நேரம், ஏனென்றால் பண்டிகை காலங்களில் பல வங்கிகள் மலிவான விலையில் கடன்களை வழங்குகின்றன.

இந்த பண்டிகை காலத்தில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) மற்றும் HDFC வங்கிகள் மலிவான வீடு மற்றும் வாகன கடன் சலுகைகளை வழங்கியுள்ளன. ரிசர்வ் வங்கி சமீபத்திய மாதங்களில் ரெப்போ விகிதங்களை குறைத்தது. இந்த அடிப்படையில், வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மலிவான கடன்களை பெறும் பொன்னான வாய்ப்பை வழங்குகின்றன.

வங்கி சந்தை தரவுகளின்படி, பாங்க் ஆப் இந்தியா மற்றும் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா ஆகியவை ரூ .75 லட்சம் வரையிலான வீட்டுக் கடனில், 20 ஆண்டு காலத்திற்கான் கடனை, 6.85 சதவீதம் என்ற விகிதத்தில் கடன்களை வழங்குகின்றன. இதில், 75 லட்சத்திற்கான இ எம் ஐ ரூ .57,474 ஆக இருக்கும்.

ALSO READ | பென்ஷன் இல்லையே என்ற டென்ஷன் வேண்டாம்... ₹44,793 ஓய்வூதியம் தரும் முதலீடு இருக்கு..!!!

அதைத் தொடர்ந்து கனரா வங்கி மற்றும் பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி உள்ளன. இரு வங்கிகளும் 6.90 சதவீத வட்டி விகிதத்தில் ரூ .75 லட்சம் வரையிலான கடனை வழங்குகின்றன. கோட்டக் மஹிந்திரா வங்கி தவிர, பட்டியலில் உள்ள அனைத்து வங்கிகளும் மலிவான கடன்களை வழங்குகின்றன. கோட்டக் மஹிந்திரா வங்கி 7.1 சதவீத வட்டிக்கு கடன்களை வழங்கி வருகிறது. இங்கே, எஸ்பிஐ மலிவான கடன் வழங்கும் வங்கிகளின் பட்டியலில் முதல் பத்து இடத்தில் இல்லை. எஸ்பிஐ 7.20 சதவீத வட்டி விகிதத்தில் கடன்களை வழங்கி வருகிறது.

வங்கி சாரா நிதி நிறுவனங்கள் பொதுவாக வங்கி விகிதங்களை விட அதிக கட்டணம் வசூலிக்கின்றன. ஆனால் இரண்டு பெரிய எச்.எஃப்.சி நிறுவனங்கள் குறைந்த கட்டணத்தில் கடன்களை வழங்குகின்றன. எச்.டி.எஃப்.சி லிமிடெட் மற்றும் எல்.ஐ.சி ஹவுசிங் ஃபைனான்ஸ் ஆகியவை ரூ .75 லட்சம் வீட்டுக் கடனுக்கு 7 சதவீத வட்டி வசூலிக்கின்றன.

 இதில், வாடிக்கையாளரின் இ.எம்.ஐ 58,147 ஆக இருக்கும். இந்த இரண்டு வீட்டு நிதி நிறுவனங்களும் வீட்டுக் கடன்களைப் பொறுத்தவரை வங்கி சாராத நிதி நிறுவனங்களை விட மிகவும் குறைவான விகிதத்தில் கடன்களை வழங்குகின்றன. பட்டியலில்  மூன்றாவது இடத்தில் பஜாஜ் பின்சர்வ் 7.5 சதவீத வட்டி விகிதத்தில் கடன்களை வழங்கி வருகிறார்.

ALSO READ | வருமான வரியை வீட்டிலிருந்தே தாக்கல் செய்ய இந்த எளிய முறையை கடைபிடித்தால் போதும்..!!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

Trending News