Income tax: தனிநபர் கடனுக்கும் வருமான வரி விலக்கு பெறுவது எப்படி?

தனிநபர் கடனுக்கும் வருமான வரி விலக்கு பெற முடியும் என்பது பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது.  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 18, 2020, 01:53 PM IST
  • வருமான வரி (ITR) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 2020 டிசம்பர் 31 ஆகும்.
  • தனிநபர் கடனுக்கும் வருமான வரி விலக்கு பெற முடியும் என்பது பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது.
  • தனிநபர் கடனுக்கு வருமான வரி விலக்கு பெற நேரடியாக வருமான வரிச் சட்டத்தில் எந்த விதியும் இல்லை.
Income tax: தனிநபர் கடனுக்கும் வருமான வரி விலக்கு பெறுவது எப்படி? title=

வருமான வரி (ITR) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 2020 டிசம்பர் 31 ஆகும். அதற்கு இன்னும் சில நாட்களே உள்ளன. உங்கள் வருமான வரியை தாக்கல் செய்ய கடைசி தேதி வரை காத்திருந்து வேண்டாம். வரி விலக்கு குறித்து உங்களுக்கு ஏதேனும் குழப்பம் இருந்தால், விதிகளை கவனமாகப் படியுங்கள். இதன் மூலம் வரி செலுத்தும் போது கூடுதல் நன்மை பெறலாம்.

வீட்டுக் கடன் மற்றும் கல்விக் கடனுக்கு வருமான வரி விலக்கு பெறலாம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் தனிநபர் கண்டனுக்கு வருமான வரி விலக்கு பெறலாம் என்பது பெரும்பாலான மக்களுக்குத் தெரியாது.  சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் தனிநபர் கடனில் வருமான வரி விலக்கு பெறலாம்.

தனிநபர் கடன்களுக்கு வரி விலக்கு பெறுவதற்கான மூன்று வழிகள்
தனிநபர் கடன் (Personal Loan) தொடர்பாக வருமான வரி விலக்கு பெற நேரடியாக வருமான வரிச் சட்டத்தில் எந்த விதியும் இல்லை. இருப்பினும், தனிநபர் கடன்களுக்கு வரி விலக்கு கிடைக்காது என்று அர்த்தம் அல்ல. வணிக தேவை, சொத்துக்களின் கட்டுமானம், அல்லது சொத்துக்கள் வாங்குவதற்கு தனிநபர் கடன் வாங்கியிருந்தால், தனிப்பட்ட கடனுக்கான வரி விலக்கையும் பெறலாம். 

ALSO READ | தீராத பணப்பிரச்சனையை தீர்க்கும் எளிய வாஸ்து குறிப்புகள்..!!!

வியாபாரத்தில் முதலீடு செய்ய வாங்கப்பட்ட கடன்

தனிநபர் கடனாக வாங்கிய பணம் வணிகத்தில் முதலீடு செய்யப்பட்டிருந்தால், நீங்கள் அதற்கான வட்டியை ஒரு செலவாகக் காட்டி, அதற்கு வருமான வரி (Income Tax) விலக்கு பெறலாம். இது மறைமுகமாக உள்ள வணிகத்தின் மூலம் பெறும் லாபத்தையும் அதிகரிக்கும். இதில் உள்ள சிறந்த அம்சம் என்னவென்றால், அதில் உச்ச பட்ச வரம்பு எதும்  இல்லை, அதாவது, எவ்வளவு வட்டி இருந்தாலும், அதை செலவாக காட்டி, வரி விலக்கு கோரலாம்.

வீட்டை பழுதுபார்க்க வாங்கும் கடன்

வீட்டுக் கடன்களில் இரண்டு வகையான வரி சலுகைகள் உள்ளன, ஒன்று வட்டி மற்றும் மற்றொன்று அசல். நீங்கள், வீட்டை பழுது பார்க்க,  தனிநபர் கடன் வாங்கியிருந்தால் அல்லது குடியிருப்பு சொத்தை வாங்கியிருந்தால், நீங்கள் வரி சலுகையைப் பெறலாம். வருமான வரியின் பிரிவு 24 ன் கீழ் வட்டிக்கு வரி சலுகை பெறலாம். நீங்கள் அந்த வீட்டில் வசிக்கிறீர்கள் என்றால், நீங்கள் 2 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு பெறலாம், வீடு வாடகைக்கு கொடுத்து இருந்தால், நீங்கள் எவ்வளவு வரி விலக்கு கோரலாம் என்பதற்கு வரம்பு ஏதும் இல்லை.

ALSO READ | தீராத பிரச்சனையா... வீட்டின் படிக்கட்டு காரணமாக இருக்கலாம்... !!!

சொத்துக்களை வாங்க பெற்ற தனிநபர் கடன்

நீங்கள் வாங்கிய கடன் பணத்தில், தங்க (Gold) நகைகள் வாங்கியிருந்தால், அசையும் சொத்துக்கள் வாங்கியிருந்தால் அல்லது பங்குகளில் முதலீடு செய்திருந்தால், இதற்கும் வரிச்சலுகை பெறலாம். இருப்பினும், வட்டி செலுத்தப்பட்ட ஆண்டில், வரி விலக்கு பெற முடியாது. சொத்தை விற்கும் ஆண்டில் வரி விலக்கு வழங்கப்படும்.

கவனத்தில் கொள்ள வேண்டியவை

இங்கே கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், வரி விலக்கு வட்டிக்கு மட்டுமே கிடைக்கும், அசல் தொகைக்கு அல்ல. இரண்டாவதாக, மேலே கொடுக்கப்பட்ட மூன்று சொத்துக்களைத் தவிர வேறு எந்த காரணத்திற்காவது தனிநபர் கடன் வாங்கப்பட்ட்டிருந்தால், அல்லது வேறு எதிலாவது பணம் முதலீடு செய்யப்பட்டிருந்தால், அதற்கு வரி விலக்கு ஏதும் கிடைக்காது.

ALSO READ | Pan-Aadhaar இணைக்கப்படவில்லை என்றால் ₹10000 அபராதம் விதிக்கப்படலாம்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News