தங்கத்தை விற்பனை செய்வதற்கு முன்பு எவ்வளவு வரி வசூலிக்கப்படுகிறது என்பதை அறிந்து கொள்வது அவசியம்.
புதுடெல்லி: இந்தியர்களுக்கு பொதுவாக தங்க நகைகள் மீது மிகுந்த ஆர்வம் உள்ளது. பெரும்பாலான பெண்களிடம், அவர்கள் திருமணத்தின் போது, அவர்கள் தாய் வீட்டில் கிடைத்த தங்கம் இருக்கும். உறவினர்களிடமிருந்தும், நமக்கு பரிசாக தங்கள் நகைகள் கிடைக்கும். திருமணத்தின் போதும், வேறு குடும்ப கொண்டாட்ட நிகழ்ச்சியிலும் உங்களுக்கு பரிசாக தங்கம் கிடைக்கிறது. அதற்கு நீங்கள் வரி ஏதும் செலுத்த வேண்டாம். ஆனால் அதே தங்கத்தை விற்கச் சென்றால், நீங்கள் வரி செலுத்த வேண்டும்.
கொரோனா நெருக்கடியின் போது பலர் இந்த தங்கத்தை விற்றுள்ளனர். முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு, 56000 ரூபாயாக உயர்ந்து, தங்கம் விலை விண்ணை தொட்ட போது, தங்கத்தை விற்று பலர் பெரும் லாபம் ஈட்டியுள்ளனர். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் சந்தையில் தங்கத்தை விற்கச் சென்றால், நீங்கள் எவ்வளவு வரி செலுத்த வேண்டியிருக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
தங்கத்தின் மீதான வரி குறித்த முக்கிய தகவல்கள்
உங்களுக்கு தங்கத்தை பரிசாக கிடைத்திருந்தால் அல்லது அதை பரம்பரையாக வைத்திருந்தால், நீங்கள் அதை எவ்வளவு காலம் வைத்திருக்கிறீர்கள், அந்த நேரத்தில் தங்கத்தின் விலை என்ன? என்பது முதலில் கணக்கிடப்படும். பின்னர் அதனை விற்பதன் மூலம் கிடைக்கும் இலாபம் என்ன என்பது கணக்கிடப்படுகிறது, பின்னர் அதற்கேற்ப வரி விதிக்கப்படுகிறது.
சந்தையில் தங்க நகைகள் அல்லது தங்க காயின்களை விற்கச் செல்லும்போது, உங்கள் மீது இரண்டு வகையான வரி விதிக்கப்படுகிறது.
குறுகிய கால மூலதன ஆதாயங்கள் (Short term Capital Gains -STCG) வரி
நீங்கள் வாங்கிய தங்கத்தை மூன்று ஆண்டுகளுக்குள் தங்கத்தை விற்றால், நீங்கள் குறுகிய கால மூலதன ஆதாயங்களை செலுத்த வேண்டும். அதாவது, தங்கத்தை விற்பதன் மூலம் , உங்களுக்கு கிடைக்கும் இலாபத்திற்கு ஏற்ப, வருமான வரி பிரிவின் அடிப்படையில், குறுகிய கால மூலதன ஆதாய வரி வசூலிக்கப்படும்.
ALSO READ | BoB-யை தொடர்ந்து ICICI-யிலும் பணம் டெபாசிட் செய்யவும், எடுக்கவும் இனி கட்டணம்..!
நீண்ட கால மூலதன ஆதாயங்கள்(Long term Capital Gains -LTCG) வரி
தங்கத்தை வாங்கிய 3 ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் அதை விற்றால், தங்கத்தை விற்பதன் மூலம் கிடைக்கும் லாபத்திற்கு நீண்ட கால மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டும். தங்கத்தை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் நீண்ட கால மூலதன ஆதாயங்களுக்கு 20% வரி விதிக்கப்படுகிறது. LTCG இல், நீங்கள் indexation தொடர்பான பலனைப் பெறுவீர்கள். இதன் கீழ், உங்கள் தங்கத்தின் விற்பனை விலையிலிருந்து தங்கத்தை வாங்குவதற்கான குறியீட்டு விலை குறைக்கப்படும்
தங்கம் வாங்குவதற்கான விகிதத்தை எவ்வாறு கண்டுபிடிப்பது என்று தெரிந்து கொள்ளுங்கள்
ஏப்ரல் 1, 2001 க்கு முன்பிருந்தே தங்கத்தை பரிசாகவோ அல்லது பரம்பரையாகவோ வைத்திருந்தால், அதன் நியாயமான சந்தை மதிப்பு (எஃப்எம்வி) அல்லது ஏப்ரல் 1, 2001 வரை தங்கத்தின் விற்பனை விலையை, அதன் மதிப்பாக கணக்க்கிடலாம். நீங்கள் தங்கத்தை பரம்பரையாக பெற்றிருந்தால், அதை வாங்கும் விலையிலேயே கணக்கிட வேண்டும்.
ALSO READ | தங்கத்தில் முதலீடு செய்கிறீர்களா? அப்போ இந்த செய்தியை கண்டிப்பாக படிக்கவும்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR